Wednesday 11 February 2015

உயிரொளி உச்சி சூரியன்

வேண்டாம் என்று
கதவடைத்தாலும்

வெயிலாய் வந்து
கிடைக்குமிடைவெளியில்

உள் புகுந்து தன்னை
உரு காட்டி தான்
போகிறான்

கிழக்கு மேற்காய்
நின்ற இடத்தில் நின்று

உவமையாடும்
உயிரொளி
உச்சி சூரியன்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..