Monday 17 October 2016

தோள் கொடு






தோள் கொடு

விடியல் 
தொடாமல் 
தொடரட்டும் 

மழை

வெளிச்சம் சுற்றி 
இறகடித்து கவிழ்ந்தன
ஈசல்கள்

குளிர் தென்றல் 
அனுப்பி
கால தாமதம் செய்கிறது
நட்சத்திரங்கள் தூங்க வைத்து வரும்

சிற்றின்ப ஈசலாய்

அஸ்திவாரமின்றி
கோபுரம் கட்டியேறும்
பொய்மை
:
:
:
தலைகுப்பற தானழிவோம்
ஒரு நாளனெத்தெரிந்தும்

#சிற்றின்ப ஈசலாய்




பாச நதி


உற்று உன் முகம் பார்க்க 
ஒரு போதும் 
ஆவல்பட்டதில்லை
அருகமர்ந்து பேசி சிரிக்க
ஆயத்தபட்டதுமில்லை
மாதம் ஓரிரு முறை வரும்
அலைபேசியோ
வாரந்தவறாது வரும்
தனித் தகவலோ
தாளா பாச நதியென
வனப் பெருக்கெடுக்க
சுவடழித்து சென்ற காலச்சூறாவளியில்
கழன்று சுழல கற்றுக்கொண்டோம் 
ஏகோர் அருகிருந்தும்
எவருமில்லாதவராய்

இன்றும் என்றும்
ஆங்கோர் அமைதியில்
நினைநரம்பு சுண்டிவிட.....
தினம் பலகுரல் மோதும் 
செவிப்பறையுள் 
ஆயுளிருக்கும்

இயல்பேச்சிடையே நீ
இழுக்கும் 
#கேலி ராகம்

அன்னையே சரணம்

ஆதி சக்தியின் ஆளுமை நம்பிக்கையே 
அற்புதங்கள் நிகழ்த்தும் அன்னையே சரணம் சரணம்




தேக மா காலம்

பிடி கஞ்சியும் 
கடி மிளகாயும்
எரி உள்ளியும்

தேனென இனித்து
உரமானது
#தேக மா காலம்




மனம் தவிக்கும்

உடன் நீ
இல்லாநிலையில்
எழுதிட துணியும்
மனம் தவிக்கும்
அனைத்தையும்
பேசிட முடிவதில்லை 

வாழ்த்து


எளிமை மனமாய்

இனிமை குணமாய்
வளமை பிரியமாய்

அன்புத் தங்கை சுந்தரியின் Sundari Manalan
ஆருயிர் நேசமாய்

ஆனந்த மகிழேந்தும்
அன்புத் தம்பிக்கு ValliManalan Kadayanallur
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

அக்கா என அன்புக் கரமிணைத்து
உயிராடியவள்
உரிமையுடன் அறிமுகம் செய்ய
அன்றிலிருந்து இன்று வரை
இயல்புதாங்கிய சிரிப்புடன்
உயர்வெழும்பிய குணங்களுடன்
பிரியமாடும் தாங்கள் 
மண்ணுலகில் என் தங்கைக்கு கிடைத்த வரம்
சந்தித்த நாளில்
தினம் பிரியம் பரிமாறும் நாங்கள்
பற்றிய விரல் விடாமல் பேசிக் கொண்டிருக்க
அதே அன்புடன் உடன்பிறப்பாய்
நீங்களும் கதிரும் பேசி அளவாடியது
என்றும் ஆச்சரியமே

வளர்ந்தும் குழந்தையாக
தன்னை தான் பேணாது
தியாக அன்பிம்சை தரும்
எங்கள் சுந்தரி தங்களுக்கு முதல் மழலையே
அவளுக்கு நீங்கள் வர வாழ்வின்பமே

இன்றணைக்கும் இன்பமும் நிம்மதியும்
என்றுமணைத்து
அன்பு குலச்செல்வன் ஆகாஷ் உடனும்
ஆதர்ச மனைவி சுந்தரியுடனும்
இன்பப் பெருவாழ்வு வாழ

இனிய வாழ்த்துகள் தம்பி

வானவில் பிரியம்

உனக்கான காத்திருப்பின் 
கோபத்தில்
கவனித்து பார்

அடியோரம் ஒட்டியிருக்கும்
#முத்தமழை கிளறும்
வானவில் பிரியம்

அமைதியே சரணம்

சரணாகதி பிரியங்கள் தரும்
சத்திய ஜீவனுறை நித்திய அமைதியே
சரணம் சரணம் !

ஆதி ரிஷிமூலம்

நதியோடி நிகண்ட நிலத்தில் 
இறகு விரித்த வலசை ஒன்று 
இறக்குமதி செய்த கழிவில்
பழமுத்திய பெருவிதை கழன்று 
மண்நுழைந்து போராடி
வேர் கிளைத்து விருட்சமாக

இலைபரப்பிய
மணங்கண்டு மனதிசைந்த
மகிழ்சோடிகள் இயைபு கண்டு
இனம்பெருக்க...
வெடித்திட்ட வேர்முண்டுகள்
வெயில் உண்டு வெப்ப ஏப்பமிட்ட
பெருமூச்சை ....
ஏந்தித் தாங்கிய முகிலது
கருமையடைந்து கற்பு தவற
வான்கூட்டிய பஞ்சாயத்தில்
பகல்திருடன் தப்பிக்க 
மூலை தேடி அழ நகர்ந்த முகில்
கூர்தீட்டிய முகட்டு மலை குத்தி
தீராக் கண்ணீர் வடிக்க

குழைதல் ப்ரியம் கண்டது
உருண்டு திரண்ட அண்ட விண்கல் 

ஏழ்பிறப்பிற்கும்
என் வாழ்தல்இடம் நீயென
நிர்ணயிக்கிறது
#ஆதி ரிஷிமூலம்

மனசுக்கு ஏதுடா வயசு


கீழே விழுந்திடாதே
மெல்ல நட
ஏனிந்த வேலையுனக்கு.
சும்மாயிரு
சொன்னத கேட்காம
எதையும் இழுத்து வைச்சுகாத
எரிச்சலோடு 
குறைபடும் சொந்தங்களை 

அடேய் மேதாவி கிறுக்குகளா....
மனசுக்கு ஏதுடா வயசு....
தெம்பிருக்கும் வரை
கிடை அடைஞ்சது சாகுமா

சுருங்கும் விழி பார்வையில்
சூட்சமாம சொல்லி நகர்றா
சூதான அப்பத்தா
இதயம் இரண்டு 
பூக்கள் ஐந்து 
இருப்பினும் 
பரிமாறப்படவில்லை

அறி விண்கலமொன்று அவனியிறங்கிய நாள்

அக்னி சிறகு விரித்து 
அறி விண்கலமொன்று
அவனியிறங்கிய நாள் 

எளிமை சுடரே
எழுச்சி வழியே 
தன்னம்பிக்கை நாட்காட்டியே
தன்னலமற்ற தவப்புதல்வனே
அன்பாலும் அரவணைப்பாலும்
உலக உயிர் புதுப்பித்து
புதுவழி காட்டும் நம்பிக்கை ஆசானே

நீ வாழ்ந்த காலத்தில் 
வாழ்ந்தோம் நாங்களென்பது
வாழ்நாள் பெருமை எங்களுக்கு

வாழ்தல் தேடும் உயிர்களுக்கு
இருப்பிட உயர்விடமாய்
நீர்நிலைக் கோளமாய்
என்றும் நீர் 
ஈரம் கோர்த்து 
வியப்பித்திருக்கிறாய்
விண்வெளியுல்...

செங்கனிவே சரணம்

செந்தணலே செழுமை வழியே 
செங்கனிவே சரணம் சரணம்




மழலைக் குறும்பு

அடிக்க
மனம் வருவதில்லை
குறும்புகள் செய்து
அலும்பு பண்ணும்

#மழலையை

பரிசுத்தப் பிள்ளையன்பு

உள் வர
உனக்கு 
அனுமதியில்லை
வெளி வர
எனக்கும் பிரியமில்லை
செல்ல வம்பிழுத்து
இணையக் கண்ணாடி வழி
இருவரும்
பரிமாறி மகிழ்வோம்

தீண்டி திகட்டாத
பிள்ளையன்பை

Friday 14 October 2016

ப்ரியமணிகளை

ஆழ் திமிருக்குள் 
கிளறி எடுத்து 
பசியாறடி

உனக்கான

மழை கர்ப்பம்

மதன்மயக்கம் தரும் 
மழை கர்ப்பம் 
தாங்கிய.....
மேகப்பொழுது

பேரமைதி வரமே

பிள்ளை தவமே பேரமைதி வரமே
கருணை கனிவே சரணம் சரணம்

தொடர் மழை

உள் தணல்
தூண்டி 
உன் தாகம் கனற்றும்

வெளி கொட்டும் 
தொடர் மழை

தொடரி

தொடரும் மழை
தொட்டிசைந்தணைக்கும்


உனை

இரவுமழை

மின்னல் கண்ணடிக்க
அமைதிக் கண்ணீராய்
அடம்பிடித்து
குளம் கட்டுகிறது

பரிதாபத்தில் பாதசாரிகள்


வராது வந்தணைத்த
மழையை 
இயைபு கொஞ்சி
இருப்பவர்கள் குளிர்காய 

படுக்குமிடம் பறிபோன 
பரிதாபத்தில் 
பாதசாரிகள்

நன்மை மழை



நன்மை மழையும் 


நாடோடிகள் வாழ்வை

பூ #விடம்

வெளுத்ததை எல்லாம் 
நம்பும் மனதை 
கொத்தி அனுபவம் 
சொல்கிறது




Thursday 13 October 2016

வலசை நினைவால்

வாடும் 
வலசை நினைவால் 
மெலிந்தேறும் விரல்களில்
நித்தம் பூக்கும் 

நீ
இதழ் குவித்த
மீசை பூக்கள்

உடுக்கை இழந்தான்

காப்பிப்பொடி தேடும் முன் 
பால் பொங்கி தீய்ந்தது
தோசை, கல்லோடு ஒட்டி 
வர மறுத்தது
குக்கரில் விசில் வராமல்
தண்ணீர் வெளியேறி
சாதம் அடிப்பிடிக்க
வாஷிங்மிசினும் நுரையோடு
அடம் பிடித்தது

காய்நறுக்கி கீறி
கை சுட்டு அவஸ்தைப்பட்டு
ஆயிரத்து ஓராவது முறையாக
எரிச்சலோடு திட்டி ஓய்ந்தான்

இத்தனைக்கும் காரணமான
அம்மாவீட்டிற்கு போயிருக்கும்
மனைவியை

மா சரணம் !!!

தாய்மை மலர்பாதங்களில்
தவறுகளணைத்தும் சமர்ப்பணம்

மா சரணம் !!!!

விரல்நுனி தீயே

எரிந்து
கொண்டேயிருக்கிறது
நீ 
விரல்நுனி 
தீயே...
தீ அணைய வா

கலையாத உறக்கம்

கலையாத உறக்கம்
தருகிறேன்

கவிழ்ந்து மேலுறங்க
#வா

வெட்கப்பூக்கள்

என்
வெட்கப்பூக்கள்
சிறைபடும்

பக்கம் நீ
#நெருங்கி குழைந்தால் 

Wednesday 12 October 2016

தோளணைவில்



மனங்கொள்ளும் 
திமிரெல்லாம்
உயிரடங்கி போகும் 

உன்

அன்பே நிறைவே



அன்பே நிறைவே 
ஆழ்தவமே நம்பிக்கையே சரணம் சரணம் !

தனித்திமிராய்

தன் கவலையேதுமின்றி
தனித்திமிராய்
பெண்மை
சோபித்திருப்பது

#தந்தை தோள்களிலே

ஆள்தல் நம்பிக்கையாக

என் 
கவலைகளை காது கொடுத்து 
வளர்த்துவிட்டதில்லை
வருத்தங்கள் கிளறி 
ஆறுதலணைத்ததுமில்லை
சோகங்கள் இமைவடிக்க
இழுத்தணைத்து 
இன்னும் கூட்டுவதில்லை

துயர்கள் மீளும்
தனிமை தாரமல்

தோளருகில்
உடனிருக்கிறாய்

தேவைப்பொழுதில்
#ஆள்தல் நம்பிக்கையாக

ஒருமுறையும் தோற்பதில்லை




ஒருமுனைப்போடு
கவனிப்பதாலே
ஒருமுறையும்
தோற்பதில்லை

விளையாட்டில் கூட
குழந்தைகள்

Tuesday 11 October 2016

அவளும் பறக்கிறாள்




இரைகளுக்காக அவைகள் 
வருகிறதென்றே
இத்தனை நாள் நினைத்திருந்தாள்
தானியக்கிண்ணம் மறந்து சென்ற போதும்
இறகடித்து வந்தமர்ந்தன
கொத்தும் அலகால் கோதி சிறகமர்த்தி
சிலுப்பி தலையாட்டி
சின்ன நடை நடந்து
பக் பக் என பந்தமாடின
எப்போதும் போல்

கறுப்பி ....நெட்டைதிமிர்
சவலை ... மணிக்குட்டி ...ராசாத்தி 
பெயரிட்டு.........
இப்போதெல்லாம் அவளும்
பறக்கிறாள்
அவைகளுடன்

தாய்முத்தப் பூக்கள்



செல்ல மகள்
கால் ஊஞ்சலாட

தாங்கும் தேகமெங்கும்
சிலிர் கிளையோடி
பூக்கும்

#தாய்முத்தப் பூக்கள் 

வண்ணங்கள் வளர்ந்த பின்



ஆதி கூட்டுப் பொழுதிலிருந்து
அதனை அறிந்தவள் அவள்

வண்ணங்கள் வளர்ந்த பின்
புழுவென அவள் சொன்னாலும்
நம்பும் கண்கள் ஏதுமில்லை

அன்னையே சரணம்



கலையாளும் தேவமே
கருத்து நிறை கருணையே
தெளிவு தரும் வேதமே சரணம் சரணம்

மா சரணம் !!