Wednesday 11 February 2015

அவசரக் கலப்பின வாழ்வில்

அள்ளிமுடிந்த
கோடாலி கொண்டை
அழகு சும்மாட்டில்

குளிர் கலயமேந்தி
எரியும் வயிறு
அனல் அணைக்கும்

தண்ணீர் கலக்காத
வீதி வழி
கெட்டி தயிர்காரியும்

கால ஓட்டத்தில்
காணாமல் போனாள்

வெந்தும் வேகாமல் தின்று
செமிக்க போராடும்

அவசரக் கலப்பின வாழ்வில்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..