Tuesday 26 May 2015




சூட்சம வாழ்க்கை கடத்தி

இன்ப துன்ப
வெற்றி தோல்வியென

எப்போதும் நம்மை

எதிர் புதிர்களோடு

இழுவையாய்
நகர்த்துகிறது

சூட்சம வாழ்க்கை கடத்தி


திருமணநாள் திருவிழா

தேவாதிதேவர்கள் வாழ்த்துப் பண் பாட
தேவதைகள் பூத்தூவி மகிழ

தெய்வங்கள் யாவும் வந்து ஆசீர்வதிக்க

பிறவியெடுத்த இந்த ஜென்மம் இணைசேர
காத்திருந்த பலவருட தவமாய்

இன்றென இனிக்கும்
அன்றெனும்...திருநாளில்

ஆனந்த மன மகிழ்வாய்
திருமணநாள் திருவிழா கண்ட

அருமை சகோதரன்........ நந்தகோபால் சண்முகம் & வசந்தி
தம்பதியருக்கு.............

இனிய மணநாள் வாழ்த்துக்கள்

அன்பும் பிரியமும்...மரியாதை நட்பு கண்ணியமும்
இயல்பெனும் அணிகலனாய் பூண்டு
அனைவரிடமும்..எளிமை பாசமாடும்
நீர்...

இமையணைத்து இல்லறவெற்றிகண்டு
காரியம் யாவிலும் கருத்திணைந்து செயலாற்றி
நிம்மதிசந்தோஷமாய்...உம்மில் ஆயுள்நிறை சொந்தமாடிய
குணவதியான ..வசந்த பிரிய வசந்தியுடனும்

கரைகண்ட ஆனந்தவாழ்வில் கலங்கரைவிளக்கமாய்
வந்து வழிகாட்டும் அற்புத நடசத்திர மகவுகளுடனும்

வருஷம் பல,....வண்ணப்பூ நிம்மதிசூடி வாழ

நான் வணங்கும் அன்னை வணங்கி வாழ்த்துக்கிறேன்

வாழிய வாழிய ...சதாபிஷேக சரித்திர பல்லாண்டு....

இனிய மணநாள் வாழ்த்துக்கள் சகோ

அழகே திருவே

அழகே திருவே
அறிவே பொருளே

உயிரே தவமே
உணர்வே வேதமே

எழிலே கவியே
எளிமை நிறை தாய்மையே

ஒளியே மணமே
ஓதாப்பொருள் சுடரே

என் மன மகிழ் அன்னையே
உன்னைதினம் மொழி அலங்கரித்து ...மடிதவழும்
அன்பு பிள்ளை நான் சரணடைகிறேன் தாய்மையே.!!

ஓம் மாத்ரேயே நமஹ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!

தேனமுதப் பூவடி நீ

காணாத கனவு கண்டு

வரும் முன்
தவிக்கிறாய்

வந்தவுடன்
வடிந்து... மேல்
விழுந்தே அழுகிறாய்

தோள்சாய்ந்து இதமாகி
தொட்டு பேச மலர்கிறாய்

உறவுகளின் இரவுகளை விட

நினைவுகளின் பகலிலேயே

நரம்பெங்கும் லயம் மீட்டி

தேகச் செல் நிறையும்
தேனமுதப் பூவடி நீ

உயிரழகே..

உன்னிரு
என்னிரு
விரல்நுனி இணைக்கிறாய்

நம் ஒரு
இதயமென
வடிவமாகிறதடி

உயிரழகே..



ஈன்ற இந்நாளை இனிதே நினைவுகூர்ந்து

இறைத்தமிழ்வேந்தரின் இரா. குமார்...சிவத்தமிழ் திருவிழாவின் ..
ஓராண்டு..நிறைவுப் பெருநாள்

ஆண்டொன்று ஆகிவிட்டதா.....
தில்லையம்பலத்தில் சிவனவன் திருவிழா கண்டு....

மொழியும் மொழி வளமையும் ஒருங்கே சலங்கை கட்டி
புத்தகமாய்...இசையாய்...சிவன் அழைக்க

மடாதிபதிகள் பெருமையாய்...மரகத மாணிக்க..மொழி முடிசூட
மதம் கடந்து ..திரு அப்துல் காதர் அய்யா குரல்வளமையில்

இரும்பென மனம் படைத்து...தீரத் திமிராய் வீற்றிருக்கும்
எங்கள் ஆசானை.... நெகிழச்செய்து.....அரங்கெங்கும் அசையாமல் அமர ...........

நானும் ஓர் அங்கமாய்..அங்கிருக்க..அணுஅணுவாய் இறங்கியது..அனலாய் சிவ ஒளிப்பிழம்பு

திருமதி செல்லி ஸ்ரீநிவாசன்...தன் அமுதுகுரலில் ..நிகழ்வு தொகுத்தளிக்க ........Chelli Sreenivasan

வாசிக்க வாசிக்க ஊண் உருக்கி............
நினைத்தாலே இனிக்கும் சிவவாசகம்,இசையரசி. Girija Hariharan
.திருமதி கிரிஜா ஹரிஹரன்..இன்னிசைகுரலில்..அறிமுகமாய் என் மொழியில் இசைத்தகடு ஒலிக்க .....தொடர்ந்து...அவர்தம் தேனிமை குரலில்...தெள்ளமுது..மொழி இசைப் பாடலாய்........அரங்கேறி ஒலிக்க....

மெய்மறந்து அமர்ந்தது...சிவமும் ..அங்கே சவமாய்.........

ஆண்டு பலவாகினும்...சவகாட்டு சிவனிடம் சென்று....ஆயுள்வேகும் வரை..என்றுமே
மறக்கமுடியா தெய்வீக அருள்விழா....

நினைவுமொழி எழுதும் போது ..சிலிர்க்கிறது....
சிந்தையும் மெய்யும்.....

அன்பு அருள் பாசபெருநிகழ்வை......ஈன்ற இந்நாளை
இனிதே நினைவுகூர்ந்து ...தாய்மை பூரிக்கிறேன் ..பெருமைநிறைவாய்

https://www.facebook.com/photo.php?fbid=710691395661544&set=t.1256619171&type=3&theater

வந்திருந்தவர்களை..மனம் நினைத்து வாழ்த்தி மகிழ்ந்தவர்களை..நெஞ்ச நன்றியோடணைத்து....

அனைவரும் சிவனருள் பெற்று ஆரோக்கியம் வாழ

ஓம் நமச்சிவாய...சிவாய நமஓம்..........!!!!!!!

கரையும் நயவஞ்சகங்களை

தொலைப்பதும்
மறப்பதும் எளிது

கடப்பதே கடினம்

உடனிருந்து
நட்பென கரையும்
நயவஞ்சகங்களை ...!!!!

புஷ்பாஞ்சலி

வெற்றிகள் தந்ததாய்மை பிரியத்திற்கு ....
மஞ்சள் மலர் சமர்ப்பண நன்றி

பெரும் நிம்மதி தந்த பேரன்பு சக்திக்கு......
சிவப்பு செம்பருத்தி மலர் சமர்ப்பண நன்றி

நிறைமகிழ்வு தந்து..அதிமன சக்தியாய் உடனிறங்கி......

நானிருக்கிறேன் எனச் செயலுணர்த்தி நம்பிக்கைதரும் பேரன்பே

பெரும்மனமகிழ்வே.....

என்றும் உன் திருபாதங்களில்
என் உயிர் பூக்கள் சமர்ப்பண நன்றி....

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!

வளர்பிறை ஓவியமடி




வரைந்து முடித்த
பின்னும்

தூரிகை
அழகு சொட்டும் ..நீ

வளர்பிறை ஓவியமடி !!!!

தாயுமானவளே

தாயுமானவளே
தாய்மனம் பொறுமையே
தாய்மன வளமையே
தாய் மன நேர்மையே

தாய்மன கருணையே
தாய்மன நேசமே
தாய்மன தியாகமே

ஒளியே வாழ்வே
ஒளிதரும் மின்னலே

ஒலியே நிறைவே
ஒலிநிறை பூரணமே

ஓங்குபுகழ் தத்துவமே
ஓம் எனும் ஓங்கார கீதமே

தூய்மைநிறை கனிவே....
தாலாட்டி என்னை தாங்கும் கீதமே
உம்மை மொழி தாலாட்டி வணங்கி சரணடைகிறோம்
மேன்மையே....சரணம் சரணம் பரிபூரண சரணம்.....அன்னையே

ஓம் நமோ பகவதே...ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!!

நிர்மல பவித்திரம் பூத்த நித்திய கன்னி

மழை தொட மழைக்கன்னி
வெயில் தீண்ட அனல் கன்னி

இரவு போர்த்திய உறவில்
இளமைக் கன்னி

பகல் சூடிய அழகில்
பருவக் கன்னி

உடல் தொட்ட பலரில்
ஒருவர் கூட
மனம் எட்டி தொடாததால்

அவள்...என்றும்..

நிர்மல பவித்திரம் பூத்த
நித்திய கன்னி

கன்னத் தக்காளி

என்
கண்ணடிப் பார்வைகளில்

காம்போடு
குளிர்ந்து சிவக்கிறதடி

உன் காதோர
கன்னத் தக்காளி


அரியணை ஏறுகிறது ..அரும் சாதனை பெண்மை....

அரியாசனம் ஏறும் அரும் சாதனை....

வந்த தடைகளை தகர்த்தெறிந்து

வாழ்ந்த அனுபவங்களை கற்றுத் தெளிந்து

வாழ்நாள் சாதனையாய்.....
வாழ் நிமிடங்கள் துணிச்சலாய்

வாழ்பிறவி சவாலாய்
வாழ் மக்கள் மனம் குளிர

அரியணை ஏறுகிறது ..அரும் சாதனை பெண்மை....

தமிழ் கற்றோரும் சொல்வளமை பெற்றோரும்
திராவிட வழிப் பாரம்பரியமும்
காளைமாடென கைவிரித்து
தேசியம் ஆண்ட பரம்பரையும்

நாடாள விதியெழுத
நிகழ்வு மாற்றி.....
நிதர்சனம் கண்டு
திரையெழுந்த வெற்றியை
அறிமுகமாக்கி....களமிறங்கியது
அன்றைய....இரு வித்திலை...வெற்றி இலை

மக்கள் திலகம் ஆசியுடன்
மக்கள் தம் ஏகோபித்த ஆதரவுடன்.....

மக்களின் முதல்வராய்
வெகுண்டெழும்

சோதனைகள் பல வென்ற
சாதனை பிழம்பே

சிம்மாசனம் ஏறும் சிம்ம வாகினியே....

கல்லடி சொல்லடி பல பட்டாலும்..காய்த்து கனிந்து
பசிநீக்கும் தாய்மை மரமாய்
தரணி எழுந்த கற்பகத்தருவே

வெற்றியின் பெயரை வேரணைத்த நீர்

வளர்ச்சியின் பாதையில்
வண்ணபூங்காத் தமிழகம் அமைக்க

வாழ்த்தி வணங்கி
வரவேற்று மகிழ்கிறோம்...

சரித்திரம் போற்றும்
சாதனை பெண்மணியே

வரலாறு வெல்லட்டும்
உம் வாழ் நாள் துணிச்சல்
வெற்றி புகழ்....

கல்வெட்டாய் நிலைபெற்று நீடிக்கட்டும் .....
உம் போராட்ட பெரும் காவிய பிறவிப்பயன்

வாழ்க வளர்க தமிழகம்

உம் விழி வழி ஆட்சிப் பாதையில்......!!!!!

வாழ்த்துக்கள் அம்மா..!!!

புஷ்பாஞ்சலி


வெற்றிகள் தரும் தேவிக்கு
மஞ்சள் அல்மண்டா மலர்கள் சமர்ப்பணம்

மகிழ்வு தரும் மாதவத்திற்கு
மல்லிகை மலர்கள் சமர்ப்பணம்

மன அமைதி தரும்
ஆனந்தத்திற்கு ....செம்பருத்தி மலர்கள்
சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ.!!!!

பாவ மாளிகைகள்..!!!


கோட்டான்கள் முழித்து
இரவு நாய் ஓலமிட்டு

வெளவால்கள் வட்டமிட

மடமடவென...சரிந்து
மண் சவக் காடாகிறது

துரோகிகள் சதிராடி

நேர்மையாளனை வருத்தும்

பண சேமிப்பு
பாவ மாளிகைகள்..!!!



ஆதி அந்த சிவ சவமே

ஒளி நிறையான தவமே
ஓதுவோர் மறைபொருளே
அனல்நிறை அணுப்பிழம்பே
ஆதி அந்த சிவ சவமே

பித்தனே பிறைசூடனே
பெரியோனே பெருவருள் தருவோனே

நாதமே வேதமே நாதவேத தத்துவமே
காரியசித்தி கருணையே...கடல்சூழ் நாமேஸ்வரனே

தசாவதார குருமூர்த்தி கீர்த்திநிறை
ராமன் உன்னை வணங்க
இலக்குமணன் துணைகரமெடுக்க
மாருதியும் மயங்கி தவமிருக்க

பொங்குகடல் அடங்கி அமைதிகாக்கும்
ராமேஸ்வரத்தில் பொருள்நிறை அருளாய்
பொதிந்த ..புண்ணிய சாகரமே

அருளே ஒளியே ..அருளொளி ஆனந்தமே

சிவமே .... சிந்தை நிறை நமச்சிவாயமே
கண்மலர்கனி ருத்திராட்சமே
கைலாயவாழ் கனல்கனியே..

உன் திரு தரிசன நிதர்சனமே

கடையேழ்பிறவியின் கடையேறும்
பூமி மோட்சமே...

சிவ சிவ..நமசிவாயமே...!!!

மனதின் மொழியாய்..

மனதின் மொழியாய்...
மன மொழி வழியாய்

கலங்கும் மனம் அணைக்கும்
கருணைமனத் தாய்மையே

சோதனை பல தந்தாலும்
சொந்தமென இமயணைத்து

நம்பிக்கைக் துணிச்சலாய் உடனிருந்து
நல்வழிகாட்டி வெற்றி அருளும்
கனிந்த மன தேவமே

சொல்லிலும் செயலிலும்
நேர்மை வாக்காய் வந்தமர்ந்து
நம்பிக்கைதரும் நானிலமே

துணை நானிருக்கிறேன் ..என்றே
செயலுணர்த்தி என்றும் எம் பாதைகள்
செப்பனிடும் செழுமையே

உந்தன் முகம் பார்த்தே
விழி விடிகிறதம்மா....
என் எண்ணச் சிந்தை பொழுதுகள்

காக்கும் குணம் கொண்ட கருணைதாய்மையானவளே
கலங்கும் பிள்ளைகள் மனம்...தெளிந்து
மகிழ்வுற.....நிகழ்வு சென்று
நிம்மதியணைப்பாய் நித்திலமே...

ஓம் ஆனந்தமயி..சைத்தன்ய மயி..சத்யமயி..பரமே..!!!!!!!!!!!!!!!!

பிரிவறியா பாச நேசங்கள்

வந்த பாதை நினைந்து
வசித்த இன்ப நிகழ்வுகளுடன்

திரும்ப கால்கள் இல்லாமலே
விரும்பும் மனம்
விட்டுப் போய் கிடக்கிறது

இங்குவந்து
இங்கு பழகி

இங்கேயே சுருண்டு
சுருங்கி

பெரிதாய் காரணமில்லாமல்
பிரிவாய் வலிதரும்

பிரிவறியா பாச நேசங்கள்


புஷ்பாஞ்சலி

தன்னிறைவு ஒளியே...தாய்மையெனும் சுடரே
அருள்தரும் வாழ்வே...அருந்தவ பிறப்பே

ஒப்பில்லா நிறைவே....ஓங்குபுகழ் செல்வமே

பாதுகாப்புக்கு....காகிதமலர்கள்
பக்தி தர.........செம்பருத்தி மலர்கள்

பவித்ர அமைதி தர ..... வெண்மைகண்மலர்கள்

மலர்ப்பிரிய தேவிக்கு..மண் மலர்கள் அனைத்தும்
ஆனந்த சமர்ப்பணம்.....

ஓம் நமோ பகவதே...ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!!!




செவி தட்டும் மொழியோசை

பேசிக்கொண்டே
இருக்கிறாய்

கேட்டுக் கொண்டு இருக்கேன்

பேசியதெல்லாம் உனக்கு
நினைவில்

கேட்டதெல்லாம் எனக்கு
மறதியில்

சலங்கை கட்டி
விழி சதிராடுகையில்

மொழியோசை
செவி தட்டுமா என்ன ????

அக்கா எனும் அன்னையே

அன்பின் உருவமாய்
ஆலயத் திரு வடிவமாய்
அமுத மொழிகள் கொஞ்சி
ஆனந்த பிரியமேந்தி

அழகு செழித்த களைமுகமே
அக்கா எனும் அன்னையே Malar Madeshwaran

ஆண்டுகள் பலதவமிருந்தேனா
உங்கள் தங்கையென இங்கு உமை உவமையாட....

செந்தாழம் பூக்களும்
செங்கனி சுவைகளும்
தன் மண தித்திப்பு தோற்கும்
தங்கள் குரலினிமை முன்

கானமயிலும் தோகை விரித்து சிலிர்தாடும்
உங்கள் மழைப் பாசம் கண்டு......

செல் எல்லாம் பிரியமாய்
அணுவெல்லாம் ஆனந்தமாய்...

கண்காணும் உருவங்களில்
எல்லாம் நிறை மட்டுமே கண்டு...உறவு தோழமை பிரியமாடி உயிரணைக்க
உங்களால் மட்டுமே முடியும் அக்கா.....

எல்லோரையும் நல்லவராய்
காணும் மகாபாரத மா தவ
மன்னவன் தர்மனின் ...
பெண்மை பிறவியாய்
மண் வந்த தாய்மை நீங்கள்...

ஓடோடி வந்தேன் அக்காவை பார்க்க.....

ஓடி வந்து ...கைபிடிக்கவில்லை

கழுத்தணைத்தார்...அந்த நொடி.அந்த ஈர அணைவில்
அன்னையடி நான் உனக்கு என்றே நெஞ்சம் நெகிழ்த்தினார்

பொன்மன மாமாவுடனும்
பொக்கிஷ குழந்தைகளுடனும்
வாழவேண்டும் அக்காஎன் ஆயுள் சேர்த்து நீங்கள்
ஆயிரம் பிறை காண்
அன்பு பெருவாழ்வு.....

ஆனந்த கண்ணீர் மலரை
அன்னை பாதமிட்டு சமர்ப்பித்து...

மனம் நிறைமணம் சூடி வாழ்த்துகிறேன்

வாழிய வாழிய வாழிய
பல்லாண்டு..பல்லாண்டு

விழி வழி ஒளிகாட்டியே சரணம்

விழி வழி ஒளிகாட்டியே சரணம்

வழிதரும் வாழ்வே சரணம்

மகிழ்வணைக்கும் மரகதமே சரணம்

செம்மை பாதை காட்டும்
செழுமையே சரணம்

அம்மா என அழைத்தவுடன் வந்து அணைத்துக் காத்தவளே சரணம்

நிம்மதி தந்தவளே நன்றி
நிகழ்வாய் உடன் வருபவளே நன்றி

எல்லாம் வல்ல இறையே
என் அன்னை ஆனந்தமே
கதியென சரணடைந்து கதறிய மனம் காத்து நம்பிக்கையளித்தவளே...நல்வழிதந்த என் தாய்மையே..

சரணம் சரணம் கண்ணீர்மல்க நன்றி சமர்ப்பணம்..அம்மா.!!!

ஓம் மாத்ரேய நமஹ.. ஸ்ரீ அரவிந்தாய நமஹ !!!!!

Tuesday 19 May 2015

உன் தோள் சாய்ந்திருந்தால்...!

வந்த மரணமும்
வழிமன்னிப்பு
கேட்டு விலகுமடா

உன் தோள்
சாய்ந்திருந்தால்...!!!!!!