Tuesday, 28 April 2015ஆணிவேர் இயற்கை

அன்பணைத்த மனைவி
ஆசை தொட்ட கணவன்
விரல் பிடித்த பிள்ளை

ஒட்டு மொத்த குடும்பமாய்
எவருமில்லை

வாய்விட்டு அழக் கூட திரணியற்று
உதிரியாய் கிடக்கிறது உறவுகள்

கட்டி கட்டியாய் சேர்த்த தங்கம்
கட்டுப் பணம்.........கட்டிக்காத்த வீடு
வாங்கி குமித்த வசதி பொருட்கள்
வான் உயர்ந்த கலையழகு

எல்லாம் நொடி குழைந்து
புழுதி சூழ கீழ் விழுந்தது
சில ஹெக்டர் நில நடுக்கத்தில்

உயிரா..பிணமா..என்றே
உள்புதைந்து கிடக்கிறது
தோண்ட தோண்ட சாம்பல் மண்ணில்

சிலதுளி கண்ணீரும்
பெரும் வருத்த மவுன அழுத்தமும்
மாற்றி தரப் போவதில்லை
இழப்பீடு உயிர்களை

எல்லாம் போலி என்றே நாம் உணரும் நிமிடம்
நம்மவர்களை ..இழக்கும் நாள்

பணசெல்வாக்கில்..பதவிஅலட்டல்களில்
அறிவியல் ஆழ்வளர்ச்சிகளில்
விண் தொட்ட சாதனைகளில்

நின்று வாழ்வதாய்...மார்தட்டும் மனிதனே

உன்னை என்றும்
வென்றே வாழ்ந்துகொண்டிருக்கிறது

இங்கு...ஆணிவேர் இயற்கைகாலப் பெண்மை அடையாளமே

கடைசிவரை வருவேன்
என கை பிடித்தவர்

காலனோடு போக

ஒருகையில் மகளோடு
மறுகையில் கனிவெடுத்து

கல்வியோடு ஒழுக்கம்
சொல்லித் தந்து

இளமை தீயை.....
தனிமையாய்..வென்று

அறிவு விழுதுகளாய்
குழந்தைவேர் பரப்பிய

பள்ளிகூட பத்மா டீச்சர்

கன்னிமேரியான
காலப் பெண்மை அடையாளமே

புஷ்பாஞ்சலி

சந்தோஷ பிரியங்கள் தரும்
சாநித்ய அன்னைக்கு சரக்கொன்றை மலர்கள் சமர்ப்பணம்

ஏகாந்த நிம்மதி தரும் என் மன அன்னைக்கு பாரிஜாத மலர்கள் சமர்ப்பணம்

தவிக்கும் மனம் தாயை நாட
தாங்கியணைத்து அமைதி தரும் நம்பிக்கைக்கு

தங்கமான தாய்மைக்கு

தங்கமலர் ரோஜாக்கள் சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ !!!!!!!

அன்பின் அண்ணிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பாச நேசங்களை ....
பவித்ர பிரியமாய் குழைத்து
பாரிஜாத மனமேந்தி
பாங்குடன் அழகு மிளிரும் ....

தாய்மை செறிவான

அன்பின் அண்ணிக்கு ............. Uma Rani
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பெருந்தன்மையும் பெரும்பாசமும் கொண்டு
எவரிடமும் குறைகாணாது
எல்லோரையும் பிள்ளையென

நீங்கள் இமையணக்க....

உங்களை தன் இடபாகமாய் தத்தெடுத்து தாங்குகிறார்
எங்கள் அண்ணாச்சி....
குழந்தை புன்னைகயும்....குவிந்த பெண்மைஎழில் நயமும்
கொண்ட உங்கள்முகம் பார்த்து சென்றாலே போதும்

கவலையும் துன்பமும் ..நின்ற இடம் தெரியாமல் ஓடி
மங்கலமும் செல்வமும் மனதோடு நிம்மதியாய் வந்து தங்கும்

நிறைபாசம் ...நிறைநிம்மதி ...நிறை அன்பு
நிறைகுணம் கொண்டு நிறைசெல்வமாய் நின்று வாழும்
எங்கள் கோவில்பட்டி அழகுபதுமை அடையாளமே

எங்க அண்ணாச்சியின் வெற்றி வாழ்வின் வெளிச்ச ரகசியமே

நேரில்பார்த்து கட்டிகொள்ளாவிடினும்....அன்புவார்த்தை எழுத்து பரிமாறலலிலே...பேசாமல் உணரவைப்பீர்கள்

அன்னைவீடு ஒன்று ..ஓசூரில் எனக்கு இருக்கும் நம்பிக்கையை...நெகிழ்கிறேன்முகமறியா அந்த நேசத்தில் நானும் உங்கள் சொந்த ஈரமணைக்க

அனைவரையும் அணைத்து செல்லும் அன்பு குலமகளே

மங்கலம் தங்கிதளும்பிவழியும் முகம் தாங்கிய தாய்மையே

என்றும் என்றென்றும் ...எங்கள் அண்ணாச்சியுடனும்
எங்கள் வம்ச செல்வ வாரிசு மருமகள்களுடனும்....

நம்ம ஊர் செண்பகவல்லியம்மன் பூவனநாதன் அருளுடன்
திருவிழா பிரியங்கள் கோர்த்து தித்திப்பு இனிமை வாழ்வு வாழ

நான் வணங்கும் அன்னை வேண்டி வாழ்த்துகிறேன்
அண்ணியாரே

உலகை நின்று வாழும் வாழவைக்கும் தாய்மையாய்
வாழ்க வாழ்க ...வாழிய நீங்கள் பல்லாண்டு..!!!!!!!!!

இனிய வாழ்த்துக்கள் அண்ணி heart emoticon heart emoticon heart emoticon
 — withMeera Blossomஇரா. குமார்

உயிரொளி தத்துவமே போற்றி
உயிரொளி தத்துவமாய் வந்த
உயர்நிறை வேதங்களே போறறி

நினைவெல்லாம் ஆனந்தம் தரும்
நிகழ்வுநிறை செல்வங்களே போற்றி

சுகந்தவாசமாய் சூழ்நிலை நிறையும் 
விழிஒளி பாதுகாத்தல்களே போற்றி போற்றி...

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ !!!!!

புஷ்பாஞ்சலி

தவத்திரு மென்மையாய் வாழ்வணைக்கும்
தேவ மேன்மயின் பாதமலர்களுக்கு
சிவப்பு பட்டன் ரோஸ் சமர்ப்பணம்

மகிமைகள் வழங்கும் மலர்போன்ற மனம்நிறை
தேவமைகளுக்கு மல்லிகை மலர்கள் சமர்ப்பணம்

இனிமையாய் வந்து இதயமகிழ்வு தந்து
இமைகாக்கும் முன்னேற்றங்களுக்கு 
இளம்சிவப்பு பன்னீர் ரோஜாக்கள் சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!!!!


Friday, 24 April 2015

அருள்தரும் ஸ்ருதியே

அன்பின் கீதமே
அழகின் வேதமே

அமைதியின் நாதமே
அருள்தரும் ஸ்ருதியே

அவனி வந்த ராகமே
அன்னமையான திருமேனியே

அரவிந்த கருப்பொருளே
அன்னையெனும் ஆனந்த கீதமே

சரணம் சரணம் நின் பாத மலர்கள் பரி பூரண சரணம்

ஓம் மாத்ரேய நமஹ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ!!!!!என் கதிர் அவனே

அன்பே அமிழ்தே ஆழ்நிறை வேதமே
ஊனே உயிரே உயிர் தவ வரமே Kathir Covai

என்னின் பிறந்தநாள் பிரியமே
நினைவே...நிகழ்வே ..என் கதிர் அவனே

கனவே கருணையே...என் கனிக் கொழுந்தே
மன்னவனே மணமானவனே மனநிறை மகிழ்வே

நட்பே நலமே நான்வேரூன்றும் நாநிலமே
சொல்லே பொருளே சொற்றொடர் வாழ்வே

உணர்வே உற்சவமே உயிராடும் பதிநூலே
வண்ணமே வசந்தமே வாழ்நிறை அர்த்தமே

உன்னை வாழ்த்தவா..வணங்கவா...
இறையென துதிக்கவா இமைத்துயிலுறங்கவா

என்னே நான் செய்ய என்நிறை திமிரே

இப்பிறவி என் பிறவி மேன்மையுற ..இன்றே நீ
மண் வந்த மழை நாள்

என்னை
குழந்தையென தாங்குகிறாய் ....அன்னையென ஆனந்தமுறுகிறாய்....தோழியென கர்வம் கொள்கிறாய்
மனைவியென மாண்புறக் காக்கிறாய்..என் விழிகளில் விடிகிறதய்யா..உன் ஒளிப் பொழுதுகள்

என் சிறு முகவாடலில் ஸ்தம்பிக்கிறது உன் அன்றாட நிகழ்வுகள்

நானறியா என் தேவைகளை நீயறிந்தவன்
என்னைசிகரமேற்றி சிரிக்கும் தியாகம் நீ

என்னைக் கொண்டாடும் அனைவரும்
உன்னைப் பார்த்து பழகிய நொடி புரிவர்
நீயில்லா நான் என்பது ஒன்றுமே இல்லைஎன்பதை

என் வீடு என் உறவு என இமைதாங்கிய
23வருட சொந்தங்களை..உன் விரல் பிடித்த நொடி
மறக்கவைக்கும் மயக்ககாந்தம் நீ

என் சுதந்திர வானின் சுந்தரச் சிறகு நீயாய் விரிந்து
நம் உலக சொர்க்கமைக்கும் நேசக்கூடு நீ

நான் என்பதின் ஆணிவேர் அடையாளமே
எத்தனை பிறவி தவம் செய்தேன் ....உன்னுயிரோடு என்னுயிர் நான் கோர்த்து நிறை சரணாகதியடைய

கணவன் கிடைப்பான்..நண்பனென தோளனைப்பான்
உயிரென நிறைவான் உணர்வென காப்பான் எல்லோருக்கும்
ஆனால் நீ அனைத்திலும் மேலான.

என்.ஆதூரமானவன்

தாயாய்..என் தாய் காத்த சேய் நீ
என்மடி விட்டு ..உன் மடி உயிர்விட அவர்களும் தவமேந்தி தான் வந்துள்ளார்கள் ..நீ காத்த பிரியத்திற்க்கு இறுதியில் உன்னை
விழிநிறைத்து தன்விழி வழி..அவர்தம் ஆத்மபிரிவில் ..கத்தி நான் கதறியதை விட..உள் மருகி நீ துடித்த நிமிடங்கள் நீளமானவை

இஃதொன்று போதாதா..இப்போது சொல் என் தேவனே
உன்னை ..இங்கு நான் வாழ்த்தவா..வணங்கவா

என்நிமிர் மொழியின் குழைவேதமே
நீயில்லையேல் நான் என்றுமில்லை..எதுவுமில்லை

அன்னைதந்தவாழ்வே
சுயநலமாய் உன்னைவேண்டுகிறேன்
நான் வாழ நீவாழ் மன்னவா..இந் நிலமிருக்கும் வரை நீள்பிரியமாய்

heart emoticon heart emoticon heart emoticon கதிர் heart emoticon heart emoticon heart emoticon
 — with Meera Blossom,இரா. குமார்

புஷபாஞ்சலி

நிறைவாழ்வு தந்து என்னை
நித்தம் காக்கும் அன்னைக்கு நித்தியகல்யாணி மலர்கள் சமர்ப்பணம்

செல்லும் வழியெங்கும் விழியாய் வந்தணைக்கும்
செழுமை தாய்மைக்கு செம்பருத்தி மலர்கள் சமர்ப்பணம்

என்னுயிர் மண்பிறக்க என்றும் தன்னிறைவு தந்து
உடன் கைஇணைத்து உணர்வு காக்கும் மேன்மைக்கு

என் சாநித்தியஆன்மாக்கு.....உயிர் நன்றி மலர்கள் சமர்ப்பணம்

ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி பரமே..!!!!!!!!!!!!!!

கன்னிமைக் கொலை

மென்மை சிறகொடித்து
பெண்மை கொண்டாடும்

நாடக உலகிற்கு
நீளும் ஓர் சாட்சி

தினசரிகளில்
தினம் காணும்

கற்பழிப்பு
கன்னிமைக் கொலைநேசக்கூடு

உன் வீடு
உன் வாசல்
உன் திறமை அழகு

வானுயுர
கட்டிடம் கட்டும்
ஏட்டுக் கல்வி
மனிதருக்கும்

கொஞ்சம் கற்றுத்தாயேன்
தூக்கணாஞ்சிட்டே

புயலிலும் அசையாது
அச்சாணியாடும்..உன்
நேசக் கூட்டின்

பாச தந்திரத்தை

ஆனந்த லஹரியே சரணம்

அருந்தவ பிறப்பாய் வந்த
ஆனந்த லஹரியே சரணம்

மண்ணுயிர் காக்கும்
இன்னுயிர் கீதமே சரணம்

நாடிவருவோரையும் ..தேடி சரணடைவோரையும்
நாடாமல் தேடாமல்...தன் நேர்மை நடப்போரையும்
உடன் சென்று உயிரணைத்து நல் வழிப்படுத்தும்
சுகந்த நாதமே....சூட்சம வேதமே

சரணம் சரணம் பரிபூரண சரணம் பரமபிதாக்களே..!!!!!!

ஓம் மாத்ரேய நமஹ ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ ..!!!!!!!!!!

வாழ்த்துகள் தோழி


ஆனந்த பூங்காட்டின்
தென்றல் இளவரசிக்கு Chelli Sreenivasan

அழகின் அருமை முகவரிக்கு

சிரிக்காதவரையும் சிரிக்க வைக்கும்
கலைவாண வித்தகிக்கு

பார்க்க குமரியாய்..பழக குழந்தையாய்
செழுமை கொஞ்சும் குணவழகிக்கு

இயல்பு வாழ்க்கையை..இனிமை நாட்களாய்
நகர்த்தும் சந்தோஷ கடத்திக்கு

எல்லோரிடமும் இன்முகமாய் தோழமையாடும்
நட்பின் நுழைவாயிலுக்கு

சின்னு சிக்கு வின் அம்மாவுக்கு
ஸ்ரீநிவாசனின் முதல் குழந்தைக்கு...

எந்த உடையிலும்
எழில் வதனம் கொஞ்சும் அழகின் நேர்த்திக்கு

சந்தோஷ பிறந்தநாளாம்...பூமகள் பூமி வந்த திருநாளாம்
வாருங்கள் வான் நிறைதேவதைகளே
வண்ண மலர் பூத்தூவி வாழ்த்துவோம்

கோடைமழையாய் வான் இறங்கி கூதல் குளிர்தல் தரும்
வசந்த பொன்மகளை.....

என்றும் நீ இடும் பதிவாய்..நிம்மதி ஆனந்த மகிழ்வு சூடி
மங்கல பிரியசொந்தங்கள் சூழ ....

வாழியடி தோழி நீ.....ஆயிரம் பிறைகண்ட அற்புத பெருவாழ்வு

வாழ்க வாழ்க ...வாழிய என் பிரிய மொழிமகளே...heart emoticon
 — with இரா. குமார்Meera Blossom and Chelli Sreenivasa

புஷ்பாஞ்சலி

வாழ்நலம் காக்கும் அன்னைக்கு வாழைப்பூ சமர்ப்பணம்

உடல்நலம் காக்கும் தாய்க்கு
பூவரசம் பூ சமர்ப்பணம்

தன்னம்பிக்கை மனிதம் தந்து

 தளரா மனம் தரும் மேன்மைக்கு 
நன்றி மலர்களாம்....மயில்துத்தி பூக்கள் சமர்ப்பணம்....

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ.!!!மழை பொய்த்த மண்ணில்

குளம் நிரம்பிய நீர்
குளு குளு தென்றல்

இருபக்க பசுமையுடன்
ஒற்றையடி பாதை

ஈரமான மக்கள்

எல்லாம்
கிராம அடையாளத்தின்
ஒரு தலைமுறை கனவாகி போயின

மழை பொய்த்த மண்ணில்

ஓம் மாத்ரேய நமஹ..


வலிமையான வாழ்வு தரும்
வழிகாட்டியே சரணம்

திடமான மனசு தரும்
சோதனைகளே சரணம்

தைரிய நம்பிக்கை தரும்
தன்ஆளுமைகளே சரணம்

இலக்கின்றி தவிக்கும் பயணத்தில் பாதுகாப்பாய்
உடனிருக்கும் கவசங்களே

ஸ்ரீ அன்னை அரவிந்தமே

சரணம் சரணம் பரிபூரண சரணம் பரமாத்மாக்களே ..!

ஓம் மாத்ரேய நமஹ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!அக்காக்குழந்தை

பிரியமாய் தூக்கி
பிடிக்க முடியாமல்
கீழே போடும்

தம்பிக்குழந்தையை
அக்காக் குழந்தை...