Thursday, 30 July 2015

நீ என் செந்தமிழ்
செம்மொழி கொண்டு
நான் உன்னைச் செதுக்குகையில்
நீ என் செந்தமிழ்

கோபம் கொண்டு உன்னை நான் 
கையில் எடுக்க...நீ என் கொடுந்தமிழ்

பாசம் மிஞ்சி உன்னில்
நான் சிணுங்குகையில்
நீ எனக்கு மட்டுமான..தனித்தமிழ்

களவு கொண்டு
நான்உனைக் கட்டியணைக்க
நீ என் கரிசல்தமிழ்

நலம் நாடி நாடி
உன்னில் நான் தோள் சாய
என்றும் நீ என் நற்றமிழ்

முத்தப் ப்ரியங்களாய் நான்
உன்னைக் கொஞ்சிக் கொஞ்சிக்
களமாடி மடியிலேந்தி..
முத்தமாட முத்தமாட
நீ என் முத்தமிழ்

உயிர்உளியெடுத்து உன்னில்
நான் என் நேசம் செதுக்க

உன் வாகையில் எனை வளைத்து
என்னில் உனை புதைத்து

காதல் முழுமையாடி
களவு முன்னோட்டம் தேடும்

எனக்கான உலகத்தில்
நீ,,,,,,,,,,,நீயென,,,,,,,

பரந்து விரிந்த..... உன்
கை அணைவுக்குள்...
எனை முகிழ்த்தும்

என் உயிர்மொழி ஆளுமை தலைவா
என்றும் நீ,,,,,!!!!!!!!!!!!

தவறு தான்..............தப்பு இல்லை

தவறு தான்..............தப்பு இல்லை

தீர்ப்பு நியாயமானது எனினும்
தண்டணை யோசிக்க வைக்கிறது

வெளி இருப்பவர்கள் எவரும்
உத்தமரில்லை எனும் போது
தவிர்த்திருக்கலாம் .....
ஓர் சாதனைப் பெண்மைணியின்
அரசியல் முடக்கத்தை....

தனிஒரு மனுசியாய்.....
எதிர்படும் வல்லூறுகள்
எதிர்த்து மோதி தப்பித்து

எஃகின் தன்மையாய் இறுகி
இரும்பு மனிதமாய் உருவான பெண்மை

முதல் வெற்றி போதையில்....

பசித்தவனுக்கு கிடைத்த
அமுத ஆளுமையில்
பதறி உண்டதே......
கீழ் சிந்தி மேல் வழிந்து ....
விலங்கிட்டது...இன்று

எதிரிகளும்..வியக்கும் துணிச்சலில்
எள்ளி நகையாடிய போதும் கலங்காமல்

சீர் கொண்டு வீறு எழுந்த பெண்மை

பிறக்கும் போது அறிந்தோமா..?
வளரும் போது உணர்ந்தோமா..?

வாழ வாழ தானே
அனுபவம் சொல்கிறது வாழ்க்கையை

அம்மு அம்மு என்று
அறிந்தோர் கொஞ்ச

அம்மா அம்மா என்று
தெரிந்தோர் கெஞ்ச....

பெண்சிங்கமாய் தன்னை தானே
சிலை வடித்துக் கொண்ட ..பேரழகு சிற்பி

நடுநிலையாளன் பார்வையில்

விடுதலை என்பது வெற்றியுமில்லை
தண்டனை என்பது வீழ்ச்சியுமில்லை
எனும் பக்குவத்தை ..நிச்சயம்
நிதர்சனம் உணர்ந்திருப்பார்கள்

போராட்ட வாழ்வை விரும்பி
தோள் அணைத்தவர்கள்

துணிவில்..அறிவில்..
அழகில் ..ஆளுமையில்

தனக்கென தனியிடம் எடுத்து
பெண்மையின் முன்னோடியாய்
திகழ்ந்த முதன்மையே

சவாலை சாதனையாக்கும்
சரித்திரமே....

இஃதும்
உம் மானுடப்பிறவியில்
இன்னுமோர் மைல்கல்லே....!!!!!!!!!!

திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி...(தி.மு.க)


திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி...(தி.மு.க)

தங்கத்தமிழ் எடுத்து தன்னைச் செதுக்கிய
முத்துவேலர் தமிழுக்கு..இன்று அகவை 91

அஞ்சுகத்தமிழ் பெற்ற.....அரும் பெரும்
செம்மொழிக்கு..இன்று அகவை 91

தூக்குமேடை நாடகத்தமிழ் மூலம்
கலைஞர் பட்டம் பெற்ற..கலைமகனுக்கு..அகவை 91

கண்ணம்மா தொட்டு...மந்திரிகுமாரி பிடித்து
பூம்புகார் வழியில்,,இளைஞராய் வெற்றிநடைபோடும்

கதைவசனத் தமிழுக்கு..இன்று அகவை 91

சங்கத்தமிழ் எழுதிய தெண்பாண்டி சிங்கத்திற்கு
உரைதொட்டு..குறளோவியம் எழுதிய பொன்னர் சங்கர்க்கு
இன்று அகவை 91

ஐந்துமுறை முதலமைச்சராய்..பன்னிருமுறை
சட்டமன்ற உறுப்பினராய் இருந்த கழகத் தமிழுக்கு.....
இன்று அகவை 91

வளரிலம் பருவத்தில் கவிதை கதை என வாகை சூடி

தாய்மொழி தெலுகு எனும் போது
தமிழ் மொழி பிறந்து...தமிழ்தேனை..தாய்பாலென
அள்ளிப் பருகி ருசித்த முதும்பெரும் தலைவனே

எம் ஏ பி எப் (March Attempt But Fail)..(MABF)படித்த,.,,பெரும் தமிழ்செல்வனே

நீதிக்கட்சி எழுப்பியதோ,,நின் சீர் நடை அரசியல் பயணத்தை
தமிழ் எனும் வேல் உனக்கு உதவியதோ..இடைவரும்
இடர்வரும் களைகளை களைய......

எழுத்தில் எழுந்தாடும் புரட்சியை
பேச்சில் குதித்தாடும் உன்வீச்சு வேகத்தை கண்டு
ஆளுமை செய்ய வந்த ...அந்நிய மொழியாம்
இந்தியும் சென்று பதுங்கியதோ...அடுக்களையில்

தமிழ் என் மானம் என்று தாய்மானம் காத்த தமிழனே

தமிழெனும் மொழி வளைத்து
கவிநடையில்..சொல்லோவியத்தில்..இரட்டைகிளவி தெறிக்க நீ இன்றும் களமாடும்..மொழிநடையில்

உமக்கு
முன்னும் ஒருவரும் பிறந்ததில்லை
இன்னும் ஒருவரும் பிறந்ததில்லை
பின்னும் ஒருவரும் பிறக்கப் போவதுமில்லை...தலைவா

வாழும் தமிழனுக்கும்.....வரப்போகும் தமிழனுக்கும்
நீயே வள்ளுவன்....

உன் அகராதி புரட்டாது...எங்கும் புள்ளி வைக்காது
இன்றைய புதுதமிழ் மழை

அண்ணா எனும் உம் அருமை தலைவனுக்கு
நீ வடித்த..நெஞ்சுருகும் கவிதாஞ்சலியில்

நீர் வாசித்த குரலாஞ்சலியில்...
ஒலிப்பெருக்கியின் மூலம் கேட்டு

கலங்காத வைடூரிய நெஞ்சமும் சட்டென கலங்கியது

’’’’கண்மூடிக் கொண்டு நீ சிந்திக்கும்
பேரழகைப் பார்த்துள்ளேன்.. இன்று
மண் மூடிக் கொண்டுன்னைப் பார்க்காமல்
தடுப்பதென்ன கொடுமை,

கொடுமைக்கு முடிவுகண்டாய்; எமைக்
கொடுமைக்கு ஆளாக்கி ஏன் சென்றாய்?
எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்:
இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்? ’’’

என்றாய்..குரல் உடைந்து..நீர்

தமிழகமே..ஓங்கிக் குரலெடுத்து...
தன் தாய் பிரிவைப் போல உணர்ந்து கதறியது

’’’நீ
இருக்குமிடந்தேடி யான்வரும் வரையில்
இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா.. ;’’ என்றாய்

தந்தார் ,,,சென்றார்...தன் இதயம் கோர்த்து இன்றும் காத்து
பேர் பெற்று ..சீர் பெற்று..பட்டொளி வீசுகிறாய்..தமிழே

நீர் தமிழின் ...தேசிய அடையாளம்

உறக்கம் கண்டதில்லை..உம் தமிழ்
சோர்வு கண்டதில்லை..உம் பேனா
சுகம் கண்டதில்லை..உம் இளமை

போராட்டங்களே வாழ்வென எடுக்கும்
சரித்திர துணிச்சல் ..உம் அகவை

எழுமின் விழுமின் இலக்கை அடையும் வரை
ஓயாது உழைமின்...என்பதே உம் வாழ்க்கை...கோட்பாடு

நீர் சந்திக்காத வெற்றியுமில்லை....
உன்னை தோள்தொடாத தோல்வியுமில்லை

எதுவந்த போதிலும்..உம் தமிழ்
இளமை கொஞ்சும் நகைச்சுவை குசும்புகளுடன்

தளராது நடைபோட..தயங்கியதுமில்லை

யாயும் ஞாயும் யாரோ கியரோ? எனும் குறுந்தொகைப் பாடலுக்கு..விளக்க உரைதருவாய்....

கூடல் விழா தொடங்குவதற்கு,
ஊடல்தான் கொடியேற்றி வைக்க வேண்டும்..என்று

மொழிமகளும் நாணி வெட்க ஆடை போர்த்துவாள்
நின் எழுத்தாணி கற்பனையில்..களவு மயங்கி

காதல் அழைக்கிறது,,,கடமை தடுக்கிறது...எனும்
உன் நாவல் 1972 ல்...ராணிமுத்துவில் வெளிவர.......

காதல்சுவையெடுத்த உம் மொழியை ரசித்து ருசித்து
இளமைப்பருவ வாசிப்பில் இன்னும் அதை பொக்கிஷமாய்
பாதுகாக்கும் உள்ளங்கள் ..பல

சாதி மத இனம் கடந்து வாழும் தமிழக சரித்திரமே

கழக வேறுபாடு இல்லாமல்...அனைவரும் ரசிக்கும்
அரும் பெரும் தலைமையே

தமிழ் எனும் சொட்டுத் தேன் ருசி பருக
உன்னை உள்வாங்கி உள்வாங்கி.....ரசிக்கும்..
கோடான கோடி தமிழ்மகன்களின்.....நிகழ்வுத் தேனடையே

பற்றும் பாசமும் .அன்பும் ஆளுமையும்
நிறைந்த.......நேசத் தலைவனே

லட்சக்கணக்கான தொண்டர்களில்...முதலாய்
தானாய் வந்து முன் நிற்க்கும் கழக விசுவாசியே

தமிழையும் தாய்கழகத்தையும்...
தன் உயிரினும் மேலாய்நேசிக்கும் ....உன்னத தலைமகனே

சொல்லம்புகள் பல தாங்கிய போதும்..சோர்வேனா..என
வெற்றி சிறகு விரிக்கும்,.....மணிமகுட மாடப்புறாவே

முக்கடல் சந்திக்கும் ...குமரிக்கடல் நடுவே சென்று
தம் குறள் புலவனுக்கு..சிலை செதுக்கிய ....சீரிளம் தமிழே

சிலேடை மொழியெடுக்கும் இளமை வித்தகமே

நீர் வாழும் காலத்தில்...என் தாய்மடியாம்
தமிழ் மடியில் நான் கருத்தரித்தது..என் பெருமை

நின் வளமையை..எளிமையை...முதன்மையை
மொழிமையை...உள்வாங்கி உயிர் கசிந்து ரசிப்பது...
என் தவப்பயன்

நின்னை எழுத நான் என் பிள்ளைதமிழ் எடுத்தது
என் பிறவி செய்த..புண்ணிய கடமை

தொன்மைத் தமிழின் தெளிவான முகவரி....
எண்..8...கோபாலபுரம் 4வது தெரு....

வரும்தலைமுறைகளுக்கெல்லாம்
வாழும் தலைமுறையாம் தமிழ்மகளின்..கழக கோமகனை

வாழ்த்த வயதில்லை...வணங்கவும் துணிவில்லை
தள்ளி நின்று தனிப்பெரும் சுவாசம் எடுத்து

பெருமூச்சு மறந்து பெருமை பொங்க ரசிக்கிறேன்

தலைவா,,,என்றும் நின் தமிழுக்கு..
நான் அர்ப்பணம்...சமர்ப்பணம்.............கோவே

Monday, 27 July 2015

அக்னி சிறகொன்று .....அவனி விதைந்தது

அக்னி சிறகொன்று .....அவனி விதைந்தது

கடைகோடி இந்தியாவின்
கடல்மாநகரம் பிறந்து

கடையேழுவள்ளல் வழியில்
கலாம் எனும் பெயர் தாங்கி

கனவு காணுங்கள் என்று
கை தட்டி மார்நிமிர்த்தி

அணு அடையாள நிமிர்திமிராய்
அறிவியலின் அணுபிழம்பாய்

உலகெழுந்து நிறைந்தது
உயர் தமிழனின் வீர அடையாளம்

மானம் காத்தாய்..மண் காத்தாய்
எள்ளிநகையாடும் எதிரியவன்
சிந்தை சுருங்க வைத்து
ஏவுகணை நாயகன் ஆனாய்

விமர்ச்சன களைகளை
வீர சகாசங்களால் வேரறுத்து
விருதுகள் கொஞ்சும் வெற்றி வாளானாய்

விலைபோகவில்லை
அடமானம் வைக்கவில்லை
ஆதலால் நீ,,,,,அணு மணம் பெற்றாய்

தனித்து நின்றாய்
தன்மானமாய் நின்றாய்
தமிழனாய் நின்றாய்...இன்றோ
தரணி வென்றாய்

அக்னி சிறகென்று...
வேள்வி சரிதை எழுதினாய்
வெகுண்டெழுங்கள் என்று
தோள் தட்டி கரம் கொடுத்தாய்

முதல் குடிமகனாய்...நாடு உனக்கு
மகுடம் சூட்டி அழகு பார்த்தபோதும்

என்றும் நான் ஆசிரியனே என்றே
ஆச்சிரியப் படவைத்தாய்

பொன்மொழிகள் தந்து
மண்ணாளும் சூத்திர சாத்திரம் வகுத்தாய்

வாழும் விவேகானந்தனாய்
அறிவுத்துறவறம் கண்டு
அகிலமெங்கும் வேர்பரவி
விழுது விதையூன்ற அறிவு பொழிவுகள் தந்தாய்

கவிதைகளின் பிரியனாய்
கர்நாடக இசை ரசிகனாய்

குழந்தைகளின் நேசனாய்
குற்றங்களின் மன்னிப்பாளனாய்
குடியரசு வென்ற மாண்பு மிகு...மண் நிறையே

கண்நிறை வழிந்து உருக
கடலளவு கன மனம் தந்து.....கையாட்டி செல்லும்
கலாம் எனும் சாதனை சவாலே

விஞ்ஞான வெற்றி அடையாளமே
வீர வணக்கம் ...

வந்த பிறவியை...வாழும் பிறவியாய்
நிறுத்தி நிலைநாட்டி ..இன்று..ஆத்ம விடுதலையாகும்

அணு அனல் எரிமலையே

வீர வணக்கம்.............ஜெய் ஹிந்த்

Saturday, 25 July 2015

pushpaanjali


அதிமன ஒளியாய் வந்தமர்ந்த வாழ்வினிமைக்கு அரளிப்பூக்கள்

அன்பெனும் பேரெழிலாய்
ஆனந்தம் நிறையும் கருணைக்கு மல்லிகை

அவனிபிறந்த உயிர்களை
அணைத்து காக்கும் மேன்மைக்கு காகித மலர்கள்

சோதனைகள் வந்தபோதும்
உடன் நின்று வெற்றி தரும்
வேதத்திற்கு மஞ்சள் கொத்து மலர்கள்

மன தைரியத்திற்கு எருக்கம் பூக்கள்

சஞ்சல மனம் சமாதானமாக
வெள்ளை கொத்து பூக்கள்

சச்சரவுகள் நீங்க கொடிரோஸ்
ஆழ் மனம் அமைதியுற செம்பருத்தி பூக்கள்

உடல் நலம் காக்க பூவரசம் பூக்கள்

நீடித்த வாழ்விற்கு நித்தியகல்யாணி

மண்பூத்த மலரணைத்தும்
மாதா உன் பாதங்களில்
கருணை சமர்ப்பணம்

காத்தருள்வாய் தேவமே...

ஓம் நமோ பகவதே ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ ..!!!!

இனிய வாழ்த்துக்கள் தம்பி

ஊன் உருக உயிர் உருக
உயிரென உயிர் மெய் உருக

உறவென வந்து
அக்கா என்றழைத்த போதும்
அம்மா என்றே குரலொலி உணர்வு தந்த
அன்புத் தம்பிக்கு

என்னின் முதல் குழந்தைக்கு Sedhu Raj
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

எதிர்பாராமல் இமையணைக்கும்
உதிர சொந்தமாய்....
எந்தப் பிறவியிலோ...
நீ என்னில் பிறந்தாயா..நான் உன்னில் வளர்ந்தேனா

இந்தப் பிறப்பில் நாம் சந்திக்க

மொழிதொட்ட கருத்து கவனமிழுக்க
நண்பனென வந்து...அக்கா என்று
உரிமையழைத்தாய்...

முகம் பார்க்கமலே முன்அன்பை நிறுத்தி
பாசத்தின் ஈரத்தை பிரியங்களில்
காட்டி நெகிழ வைத்தாய்...

என்றும் எனக்கு பெரும் நம்பிக்கையாய்
இருக்கும் பாசம் நீ
தம்பி உடையான் படைக்கு அஞ்சான்
என்பதும் உனக்கே பொருந்தும்

விழிகலங்கும் முன் வேறு மொழிபேசி
சிரிக்க வைத்து விடுவாய்

சொந்தம் நீ என் மூத்தவள்
என்று உன்னோடு மட்டுமில்லாமல்
உனக்கென உடன்சூழ்ந்த அனைவரிடமும்
அன்பென பகிர்ந்து .சொல்ல வைத்தாய்

பக்குவத்தில் பந்தமாடும் பிரியத்தில்
பார் போற்றும் பாசத்தில்
இமையென காக்கும் கனிவில்
இனிமையான சொந்தமே

விளையாட்டாய் நான் உரிமை கேட்க
உடன்பிறந்தவள் கையினாலே
தாரைவார்த்து வழங்க வைத்தாய்

மாமா மாமா என்று நீ அழைக்கும் போதும்
மாப்ள என்று கதிர் பதில் சொல்லும் போதும்
பெருமிதமாய் விழிகள் குளம் கட்டும்

என் தளபதி என்றே ..என்றும் உன்னை
உரிமையாய் சொல்வார் கதிர்

எத்தனை ஜென்ம ஆயுள் தவம்
உன் பாசம்....

உரிமையாய் கொண்டாடி
தாய்வீட்டு சீராடி..கிளம்பும் போது
அத்தனையும் கூடை நிறைத்து
எங்க அக்காவுக்கு செய்ய நாங்க
கொடுத்து வைச்சிருக்கனும் நு
சொன்ன சொல் இருக்கே

இன்றும் என்னை ஆனந்தமாய்
நினைத்து நினைத்து
அழவைக்கும் சொல் அது

பிள்ளையென என்னில் பிரியமாடி
கருநிறைந்த உறவே
கனிவு நிறை தம்பியே

அன்னை மனமொழியெடுத்து
அருந்தவ வார்த்தைமலர் தொடுத்து
அன்பெனும் மிகுதிவிகுதியால்
ஆயுள்தரும் சொந்தம் உன்னை

ஆசீர்வாதபிரியம் கொஞ்சி
நான் வணங்கும் அன்னைவணங்கி
வாழ்த்துகிறேன் டா

இன்றென மட்டுமில்லாது
நான் நிலமிருக்கும் வரை
என்றும் உம்மை வாழ்த்திக் கொண்டிருக்கும்
என் செல் அணுக்கள்

எங்கள் பரம்பரையின்
பெருமைமிகு வாரிசே...வாழவேண்டுமய்யா

நீ என்றும் என்றென்றும்..
இவ்வானந்த மகிழ்வாய்

இனிய வாழ்த்துக்கள் தம்பி

”””பாகுபலி ”””........சிலிர்க்க வைக்கும் கம்பீரத்திமிர்”””பாகுபலி ”””........சிலிர்க்க வைக்கும் கம்பீரத்திமிர்
******************************************************************************

மனித பலத்தை மண்ணோர்க்கு சொல்லும்
வியத்தகு .....வீர எழுச்சி

படத்தின் பலமே .......திரிசூல வியூகமாய்

இயக்கம் ..ஒளிப்பதிவு.....நடிப்பெனும்
மும்முனை தாக்குதலாய்.......
பிரமாண்டமெழுப்பி ....சிலிர்த்து
நுனி சீட்டு அமரவைக்கிறது

வீர குல மற மக்களை

இயக்கம்...
****************
இதிகாசங்களும்..புராணங்களும்...வீரர்களும்
மாடமாளிகைகளும்...மன்னர்களும்...அமைச்சுகளும்
செங்கோல் ஆட்சியுமாய்...மனக் கண்முன் நடமாட விட்டு...........
படம் அல்ல இஃது.....பாடம் சொல்லும் நம் வரலாற்று மிச்சம் என நேர்த்தியமைச்சு இருக்கிறார்..இயக்குநர் ராஜமெளலி....எந்த ஒரு காட்சியிலும் தன்னில் தானே சமனாகாமல்...மிஞ்சவே நினைத்து சாதிச்சும் இருக்கிறார்............

எம் மண்ணிலும்..எம் வரலாறு வாழ்ந்த அடையாளம் காட்ட..இருக்கிறார்...ஒருவர் என்னும் நீங்கா கல்வெட்டாய்......நீர்

ஒளிப்பதிவு
******************
அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியா...இத்தனை எழுச்சியாய்...எழில் ஒளிர்வாய் .....கொஞ்சும் பிள்ளை அழகாய்....வழியவிட முடியுமா...........அருகிருந்து பார்த்த போது ....பயமுறுத்திய அழகு இங்கு எப்படி இத்தனை பாசம் கொஞ்சுது...சபாஷ் செந்தில் குமார்

அழகை அழகுற,,,அதனினும் எழிலுற

வீரத்தை மாண்புற....விழிகளில் மேன்மையுற
இரத்தமும் சதையுமான ...வீர மற போர்களத்தை
கலிங்கத்துப்பரணியின் களமென

இயக்குனரின் வலக்கரமாய்...வந்தமைகிறது
முத்தென ஒளிரும் மூன்றாம் கண்
ஒளி வழி ஒலியாளுகிறார் ,,செந்தில்

நடிகர்கள்
**************
ரம்யாகிருஷ்ணன்...சிவகாமி நாச்சியாய்....நீலாம்பரிக்கு மீண்டும் ஓர் மணிமகுடம் ...விழிதெறிக்கும் அனலோடு
வீர விளைநில ராஜ மாதாவாய்...

சத்யராஜ்...கட்டப்பாவாக.......விசுவாச வீர தளபதியாக
வாழ்ந்திருக்கிறார்,,,,தன் அடையாளங்களை தள்ளி வைத்து...........20 ஆண்டுக்கு முன் வரும் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் இளமைப் படுத்தியிருக்கலாம்
நம் திமிரோனை

நாசர்,,,,வழக்கம் போல் ...அரசாளும் சூட்சிவியூகம் அட்டகாச அசால்டாக

பிரபாஸ்.........பாகுபலி.........ஹீரோ......
மண் வாழ்ந்த மற வீரனுக்கோர்
மன்னனுக்கோர் அடையாளமாய்....
தீரனுக்கோர் ..வீரமும் கனிவும் நெஞ்சுரமும்...எம் ராஜராஜன் இப்படித்தான் இங்கு தஞ்சையாண்டிருப்பானோ என் றே வலியுறுத்துகிறார்

ராணா,,,,,,,,,,,,எதிராளும் வீரத்திமிர்...........சுத்த வீரனும் தோல்வியாள்கிறான் ..பதவியெனும் பேராசை பிடியில்
என்பதற்கோர் அடையாளம்

தமன்னா.........அட டா மழைக்கு ஆடிய அழகியா..இத்தனை பேரழகியா மாறிடுச்சு
அட டா

பனியும் பொன்னும் குழைத்து வழித்த தேகமாய்
மின்னுது தக தக நு.....அம்மிணி...கனமான குரலில் கோபம் கொல்லும் விழியும் ..பேரழகு

காலகேயராக ..பிரபாகர்....
பிணந்திண்னி அரக்க வம்ச ஆளுமையாய்

இசையாய்..மரகதமணி..வசனமாய்..மதன் கார்க்கி...கிராபிக்ஸா...ஸ்ரீநிவாசன்.....செட்டிங்க்ஸ் ஆ..சாபுசிரில்......என
எல்லோரும் வாழ்ந்திருக்கிறார்கள் ..கதையோடு..கதை மிஞ்சாமல்..இயக்கநர் வழிதரும் வலியோடு

பாகுபலி...என்றேனும் குரல் எழும்போதெல்லாம்
உதிரம் சூடேற்றி புல்லரிக்க வைக்கிறார் ..இயக்குநர்

வியக்கவைப்பது பிரமாண்டமும்..பிண்ணனி இசை..ஒளிப்பதிவு எனில்

சிலிர்க்க வைக்கிரது....இயல்பாய் இதயம் எகிர வைக்கும் வீரமும் துணிச்சலும்

படம் முடிந்தது...என்று...விளக்குகள் போட்டபின்னும்
அவ்வளவு தானா...முதல் பார்ட்டா.....இன்னும் இருக்கா
இரண்டாவது இடைவேளையா ...

என்று எழ விடாமல் சீட்டில் மக்களை அமர வைத்திருப்பது ....மகத்தான சாதனை வெற்றி

சரித்திரங்கள் என்பதே நீண்ட வாழ்வியல் தானே
அடக்கிவிட முடியுமா வெறும் 180 நிமிடங்களில்

நீண்ட நாள் பின் தியேட்டரில் 3மணி நேரம் ...வர மனமில்லாமல் ...வசித்த அனுபவம்

பிரமாண்ட சாதனை வெற்றி....

இந்தியனின் வாழ்வடையாள கம்பீரத்திமிர் ....பாகுபலி

ருசி தாலாட்டும்

மொறு மொறு
கர கர
நற நற

கடுக் முடுக்
தடக் தடக்

ரயில் பயண ஒலி
அனுபவத்தைதருகிறது

பற் தண்டவாளத்திடையே
பயணித்து

ருசி தாலாட்டும்
முள் முறுக்கு

மாடப்புறா நீ

வண்ணங்களால்
வேறாகினும்

எண்ணங்களால்
வேராகும்

என் மனக்கூட்டு
மாடப்புறா நீ

ஓதுமறை கீதமே போற்றி

விடியல் தரும் வாழ்வே போற்றி

ஒளிசூழ் பாதுகாப்பே போற்றி

ஓதுமறை கீதமே போற்றி
கவலை நீக்கும் கனிவே போற்றி

உருகி அழைக்க உடன்வந்தணைக்கும் உயர் வேதமே போற்றி போற்றி

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ !!!!

உயிர்சுனை தித்திப்புகள்


அழைத்தேன் வந்தாய்
அருகழைத்து தேன் தந்தாய்

விடியும் வரை
விரல் கோர்த்து கதைத்தாய்

மூக்கு நெற்றி
இமை இதழ் என
இடை கட்டி முத்தமிட்டாய்

கேட்கவந்த கேள்வியெல்லாம்
மறந்து போக

சொல்லவந்ததை
மிச்சம் விடாமல்
மொத்தம் சொன்னாய்

ப்ரியமயாய் ப்ரியம் நுகர

செவிகதவு தட்டும் பறவையொலி
விடியல் அறிவிக்க

கனவென நீ
கலைகிறாய் மெல்ல

மெல்லின மேனியெங்கும்
விரவிக் கிடக்கிறது

வல்லினம் தொட்டாடிய
உன்
உயிர்சுனை தித்திப்புகள்

மணமே அணைத்து

கழட்டி எறிந்த
கசங்கிய சட்டையில்
விரவிக் கிடக்கும்

உன் மணமே
அணைத்து
தாலாட்டுகிறது

நீ அருகில் இல்லாத
நடு சாமங்களை

புஷ்பாஞ்சலி

சக்தி தரும் தேவ ஒளிக்கு
பக்திநிறை துளசி சமர்ப்பணம்

பயண பாதுகாப்பு தரும்
பவித்ர மேன்மைக்கு
பல வண்ண காகித மலர்கள் சமர்ப்பணம்

சந்தோஷ நிம்மதியாய்
மனதாளும் தியான வெற்றிக்கு ...செம்பருத்தி மலர் சமர்ப்பணம்

ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி பரமே ..!!

அழு குழந்தைதான் நான்

புதிதாய்
பள்ளி செல்லும்
அழு குழந்தைதான்
நான்

டாடா காட்டி.......நீ
ஊருக்கு
செல்லும் போதெல்லாம்

விசுவாச நெகிழ்தலே

பேசி சிரிக்க
வேண்டாம்

பக்கம் நின்று
பார்த்து ரசித்து

விசுவாச
நெகிழ்தலே போதும்

பலமான நட்புக்கு

Thursday, 9 July 2015

இணை நேச அடையாள ஆவியாய்

இணை பிடித்து
நடந்தாலும்
ஈரெட்டு பின்னே வருவா

ஆயிரம் வசவிலும்
அழகாய் அன்பு
ஒளிச்சு வைப்பா

திட்டி ஓய்ந்தாலும்
தின்ன வட்டி கழுவ விடமாட்டா

உறங்கிய பின் உறங்கி
விழிக்கும் முன் எழுவா

அதிக பச்ச அழைப்பே
இந்தாருமய்யா என்பது தான்

பொத்தி பொத்தி
தாத்தன பாதுகாத்த
பேச்சி அப்பத்தா
அடைமழை பொழுது ல
பொசுக்குன்னு ஒரு நா
போயிட்டா

கத்தல கதறல

இத்துபோன உடம்புல
ஈரம் தாங்காம
கிழவி போயிட்டா நு
செவனேனு செவரு சாஞ்சவரு தான்
செங்கப்பன்

எடுத்து இழுத்துவிட்ட மூச்சு
திரும்பாலே போயிடுச்சு
கிழவியோடவே

சரிஜோடி..சமதையா
இறந்த த ..ஊரு பேச

நெஞ்சுகுழி நேசத்தோடு
இன்னும் வீதி வழி
நடந்துகிட்டே தான்
இருக்காவுங்க

இருவரும்
இணை நேச
அடையாள ஆவியாய்

அமரும்... விலகலில்

இடம் வலமே
எனினும்

இடம் மாறி
அமரும்...
விலகலில்

துடித்துப் போகிறேன்

ஒரு நொடி

நம்பிக்கையாய்

பல யாகம் நடத்தி
வராத மழை

கொட்டோ கொட்டென்று
கொட்டியது

நம்பிக்கையாய்
குழந்தை
குடை விரிக்க

தந்தை மனசு

தோள் மேல் ஏற்றி
அமர வைத்ததும்

ஹை....அப்பாவை விட
உயரம்
குதுகலித்தது
குழந்தை

அப்படியே
ஆக வேண்டுமென

ஆசைப்பட்டு
உழைத்தது

தந்தை மனசு

அன்புமயமாகவே விடியும்

அதிகாலை
அன்புமயமாகவே
விடியும்

குழந்தைக்கும்
குட்டி பூனைக்கும்

அமைதியின் யோகமே

ஊன் உருக ..உயிர் உருக
உயர்வு தரும் தியான வேள்வியே

நம்பிக்கை பற்றுதலாய் உடன் பற்ற
நல்வாழ்வு தரும் நாநில நன்மையே

ஆறுதல் பிரியமாய் வந்தணைக்கும்
அமைதியின் யோகமே

உலக சேமத்திற்காக ..ஒளிசூழ் தியான கோளாமாய்
வழியெழெழுந்து வழிகாட்டும்

ஸ்ரீ அன்னை அடிக்கல் நாட்டிய
ஆரோவில் எனும் அற்புதமே

நின் பொழுது கருணையில்
நித்தம் மனம் உருகி..உள இறை காண்கிறோம்

ஓம் மாத்ரேய நமஹ.....ஸ்ரீ அரவிந்தாய நமஹ !!!!!

இருப்பின் ரேகை

வள்ளியப்பத்தா
இறந்த பின்னும்
பதித்து செல்கிறாள்

அவள்
இருப்பின் ரேகைகளை

வரட்டியில்

மலைபொலிவுகள்

உன்
மழை பொழிவில்

மெருகேறும்

என்
மலைபொலிவுகள்

வலிச் சலனம்

வந்தாய்
போனாய்

வழியெங்கும்
வலிச் சலனங்களுடன்

விரவிய
வேரில்லா ஆவியெழ

நித்தம்
விடியும் மரணமாய்
நான்

அமுதூட்டுவது

ஆயிரம் பேருக்கு
ுஅன்னம் சமைத்தலை விட

சிரமமானது

அன்பு குழந்தைக்கு
ஒரு வாய்
அமுதூட்டுவது

குட்டி வெட்கம்

அவன்கரைகடக்கும்
போதெல்லாம்

குமரி மீறி
எட்டிப் பார்க்கும்

அவள்
குட்டி வெட்கம்

தவ வேதங்களே போற்றி

மனமகிழ்வு தரவரும் தன்னாளுமை
தவ வேதங்களே போற்றி

ஒளியென புவியிறங்கி...காவல்தரும்
கனிவான பிரியங்களே போற்றி

அமைதிசூழ் உலகு தர....ஆனந்தவேள்வி கொண்டு
ஜீவசமாதியான யோக ஸ்தூலங்களே

பாண்டிநிறை பவித்திர சுவாசங்களே

என்றும் நின் அருளடி சரணம் சரணம்
பரிபூரண சரணம் பரமங்களே..!!

ஓம் நமோ பகவதே ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ ..!!!!!!!!

மச்சினிச்சி

முன் பின்
மேல் கீழ்
இடம் வலம்

எப்படி நிறுத்தி
பார்த்தாலும்

மனைவியை
ஜெயிக்கிறாள்

மச்சினிச்சி

இளமை விடியல்கள்

ஆழ் நீ
என

ஆள்காட்டி
விரலிணை

விரி வாழ்வெங்கும்
விண்சொர்க்கம்
காணட்டும்

நம் ....இமை
இளமை விடியல்கள்

புஷ்பாஞ்சலி

உயிர்நலம் காக்கும் தேவமையே
உயர்நலம் தரும் ஒற்றுமையே
உமக்கு மஞ்சள் ஆரஞ்சு சாமந்தி மலர்கள் சமர்ப்பணம்

அமைதியான ஆளுமைபிரியமே
ஆழ்தவயோக வளமையே .....அன்னையே
உனக்கு வெள்ளை இளஞ்சிவப்பு தாமரை மலர்கள் சமர்ப்பணம்

தொற்றி சுற்றும் பகை...தொடாமல் தொடராமல்
வந்தவழி திரும்பி ஓட...ஒளியென அரண்சூழும்
அன்னைகூரிய...அருந்தவ விழியே..
உனக்கு ஆழ்சிவப்பு ரோஜாக்கள் ஆனந்த சமர்ப்பணம்

ஓம் மாத்ரேய நமஹ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!!!!!!!!!!!!

துளசி சாய்கிறாள்

எண்ணிக் கொடுக்க
பத்தாது என்றாள்

எல்லாத்தையும் கொடுக்க
போதாது என்றாள்

மொத்தமாய் கொட்டி கொடுக்க
மிச்சம் எங்கே என்றாள்

மெல்ல யோசித்து
மெல்லிடை இழுத்து

நடுநெற்றி ’நச்’சிட

துலா பாரமிழுக்க
துளசி சாய்கிறாள்

துவண்டு
என் மீதே

அகல்முக தோழிக்கு


அன்பினிமை பிரியங்களை
அமைதி ஆளுமையாய் கொண்டு

அனைவரிடமும் இங்கு
ஆனந்த பிரியமாடும்

அன்னை பிரியமான....
அகல்முக தோழிக்கு... Prema Venkatesh

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

தாய்மொழி ரசிக்க
எம் மொழி உமை இழுக்க...

அலுவல் ..அசதியென
ஓடி நான் ஒளிந்தாலும் தேடி என்னை
பிரியமாடி பிடித்திழுக்கும் இன்ப பந்தம் நீர்

ஆச்சரியப்படவைக்கும்
உனதினிமை அன்பாடல்கள்

திடீரென உள்வந்து திகட்டா
அன்னைபடமிடுவாய்
இல்லை...
தித்திக்கும் குழந்தை முகம்காட்டி
அழைப்பாய்

பிரியமானவளே...பிரியங்கள்
அனைத்தும் பொறாமைப்படும்
பிரேமமானவளே

வாழவேண்டும் நீ
வாழ்வினிமை ஆண்டுகள் பல
பொறுமைகொஞ்சும் ...உன் மனக் கனிவாய்

வாழ்த்துகிறேனடி தோழி
உனக்கோர் மொழி எழுதி

தோழியென உன்னைத் தோற்ற உருமகிழ்வாய்
நானும் கண்டு

அன்னை ஆசீர்வாதங்களுடன்....
நிம்மதிபெருவாழ்வணைத்து
நீள் அவணி வாழ் வாழ

கவிமொழிப்பூங்கொத்து கொடுத்து
வாழ்த்துகிறேன் ..

வாழ்க ..வாழியடி தோழி நீ பல்லாண்டு

இனிய வாழ்த்துக்கள் பிரேமா

உயிரோசை சப்தம்

சிணுங்க தருவாள்
அம்மா
சிரிக்க தருவார்
அப்பா

எப்போதும் தருவாள்
அக்கா
எடுத்தால் தருவான்
அண்ணன்

கடித்து தருவான்
தம்பி
கனி வாய் தருவாள்
தங்கை

நடுங்கி தருவாள்
பாட்டி
நரைமீசை உரச தருவார்
தாத்தா

சுவைக்க தருவாள்
மனைவி
சுகந்தமாய் தருவாள்
மகள்

இதழ் இரண்டு
வழி உமிழ் ஒன்றெனினும்

வேறுபாடே இருக்கிறது
வெகுண்டெழும் பிரியம் வழியும்

உயிரோசை சப்தத்தில்

Monday, 6 July 2015

முன்கோப மைனா

எண்தனிமை காட்டில்
எழுத்திரை தேடும்

மூக்கு நீள்
முன்கோப மைனா நீ

உயிரெழுத்து மொழி எழுதி

அன்பின் கருணையே
ஆதூர வளமையே

இனிமையின் இயல்பே
ஈகையின் வடிவே

உயிரோட்ட உறவே
ஊழ்வினை நீக்குபவளே

எழில்நய அழகே
ஏகாந்த பிரியமே

ஐ ரத தேவமே

ஒழுக்கநிறை புகழே
ஓதா மறை வேதமே

ஒளதட மனமே
ஃதெனும் ஆளுமையே

உயிரெழுந்து உன்னை உயிரெழுத்து மொழி எழுதி
உவகைகொண்டு சரணடைகிறோம்....அன்னையே

ஓம் ஆணந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி பரமே..!!!!!!!

மெல்ல தொலையும் இலக்கிய கலாச்சாரம்

தோட்ட விளை
கனி மலரெடுத்து

இரைஞானம் தேடி
இறைவாசல் நாடும்

இளங்குமரி
கருவுடைத்தே

இன்று
மெல்ல தொலையும்

இன் தமிழ்நாட்டு

இயல்பினிய
இலக்கிய கலாச்சாரம்

கனிவிடுகிறேன் கடவுளென

வலிக்கும் எனக்கு
என்றறியாமலே

வனப்பாய் கையில் தந்து
வளமையாய் பெயரிட சொல்கிறாய்

பொங்கும் உணர்வுவெள்ளத்தில்
தாளாமல் தத்தளித்து

பொறுமை படகிட்டு
மெல்ல ஈரம் துடைத்து

கல்லென இறுகி
கவனமாய் கனிவிடுகிறேன்

கடவுளென

நட்பின நலநேசம்

அக்கறையாய் நான்
அலட்சியமாய் நீ

ஏமாற்ற சுவர் மோதியே
துவர்ப்பு புன்னகையுடன்

வழக்கம் போல்
வலி திரும்பும்

நட்பின நலநேசம்


திமிரெழுந்த தியாக திருமகன்

காக்கி உடுப்பேந்தி
கவசகுண்டல விழி சிவப்புடன்
ஆச பாச ஈரம் துடைத்து

ஊசியென உடல் குத்தும்
வெயில் பனி கொடுமை
வெந்து உருகி தனிந்து

வீறு கொண்டு
நெஞ்சு நிமிர்த்தி
வியர்வை வழிய வலிநின்று

ருசி மறந்து பசி உண்டு
கிடைத்த இடம் படுத்து

உறக்கம் மறந்து காத்து
குடும்ப நினைவு புறந்தள்ளி

உயிர் நிம்மதி தரும்

சக்தியெழு மலைமகளின்
வீர வழி மறவனாகி

திமிரெழுந்த தியாக திருமகன்களையே

வான் வெள்ளை காகித
எங்கோ ஒர் கரும்புள்ளி
ஊழல்மேகங்களையே உற்றுநோக்கி
உவகைகேலியிட்டு
உள்ளம் மகிழும் சிறுமையாகிறோம்

அரண் எழுந்த காவல்துறை
அருமை பெருமை போற்ற மறந்த
பேதையான நாம்

புஷ்பாஞ்சலி

அற்புத பேரருளாய் அவனி வந்த
அவதார மீட்சிகளுக்கு அரளிப்பூக்கள்

கனிவின் பிரியமேந்தி காத்தருளின்
கருணையாய் வந்தணைக்கு வடிஉருக்களுக்கு
காகித மலர்கள்

தெய்வீக அருளொளி பரப்பி மனது நிறையும்
மகத்துவ தவங்களுக்கு மல்லிகை

உள்மன மலர்ச்சி தந்து உவகை சந்தோஷமாய்
நிம்மதிநிறை அன்பிற்கு நித்தியகல்யாணி

உடல்நலம் காக்கும் உயிரோட்ட வாழ்யோகத்திற்கு
பூவரசம் பூக்கள்

போற்றுவோர் போற்ற...தூற்றுவோர் தூற்ற
எதுவரினும் என்னிடம் ஒப்படைத்து
சரணடை.. என்றே ..சத்யவழி தந்து உடன் வரும்
தேவமைக்கு ...பலவண்ண செம்பருத்தி

மலர்கள் அனைத்தும் ஆனந்த சரணம்
சமர்ப்பணம் தாய்திரு உருக்களே

ஓம் நமோ பகவதே ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!