Tuesday 5 June 2018

பேரன்பின் சாரம்



அம்மா உறங்குகிறாள்
அஞ்சப் பெத்து
அரும்பாடு பட்டு வளர்த்து
பஞ்சா நொஞ்ச உடம்பு 
கட்டையா மரக்க கண்மூடியே கிடக்கிறாள்
எப்ப பேசினாலும் முத வார்த்தையா கேட்பா
சாப்பிட்டையா யா
பக்கத்துல உட்கார்ந்து பாதம் பிடிச்சு விடனும்
கைலயும் கால்லயும்
முத்திப்போன நகத்த
வெட்டி விட்டு உடுத்துமாத்து சேலையை
அலசி உதறிப்போடனும்
அருஞ்சுவை சாதம் பிசைஞ்சு ஊட்டிவிடனும்
கனாவா தான் கண்டது 
பேத மனசு 
வர்றேன்யா உம்முட வூட்டுக்கு சொன்னவ 
வாராமலே தூங்கி போயிட்டா
உயில்எழுதி வைச்சிருக்காளாம் உழைச்சதெல்லாம் எனக்கேனு
ஆயுசுக்கும் கடங்காரனா ஆக்கிட்டு போறயே ஆத்தா னு கத்தி அழக்கூட தெம்பில்ல 
ஆம்பள அழக்கூடாதுல
அம்மா தான சொல்லிருக்கா