Tuesday, 31 March 2015

பகுத்தறிவு பகலவன்

பகுத்தறிவு பகலவன்
சாதீய தீ
சமுதாய முன்னேற்ற வேள்வி
பிச்சை புகினும்
பிடித்த கொள்கை விடாதவர்

வைக்கம் சிங்கம்
பெண்ணிய விடுதலை சுவாசம்
என

அடிமை கூன் நிமிர்த்திய
ஆளுமைதேச
தொண்டுகிழவருக்கு
அடைமொழிகள் குமிந்தாலும்

கைம்பெண் அவலம் தடுக்க
மஞ்சநூல் சரடை
முற்போக்காய் எதிர்த்து
கைதட்டி கையெழுத்து
கல்யாணம் செய்வித்தவரே தவிர

கட்டிய தாலி அறுக்க சொல்லும்
மன உணர்வு பாதிப்புகளை
என்றும் பயிர்வித்தவர் அல்ல....

ஆதலாலே
அவர்..என்றும்

பெரியார்...

அவர் வழி வருவதாய்
சொல்லும் நீர் _________....????????

அறுங்கோண தித்திப்பு வீடு

இலையுதிர்ந்த கிளை
ஒய்யாரத்தில்
ஒன்று வந்தமர
ஓடி வந்து சுற்றி
ஒட்டிக் கொண்டது
ஓராயிரம்

கலைக்க மனமில்லாமல்
வேடிக்கை பார்க்க

கண நேர சுறுசுறுப்பில்
கச்சிதமாய்
உருவாகிறது

ஆயுள் அமிர்த

அறுங்கோண
தித்திப்பு வீடு

இமை தட்டாத விடியல்

ஆழ் உறக்கத்தில்

அக்கா என்று
நீ அழைத்து

இமை தட்டாத

விடியல்

சவலைப் பொழுதாகவே
நகர்கிறது தம்பி..

மிஸ் யூ...!!! Suman Maha

குல்கந்தழகியே

இதயம் நானெனினும்

இதழ் திறந்து
சொல்லி விடடி

குல்கந்தழகியே

இனிப்பு குரலில்
கேட்டு மோட்சமடைய
துடிக்கிறது

அவலாதி ஆசை...!

இளஞ்சூட்டுக் காலை

கோடையிலும்

இதம் பதமாய்
இருக்கிறது

முகம் மோதும்
பயண தெனறலுடன்

பனி விலகாத
இளஞ்சூட்டுக் காலை

ஆயுள் பிரிய தீர்வே
ஆயுள் பிரிய தீர்வே
ஆசை சொல் வேதமே

தேர்நிறை தேவமே
தெள் மொழி கீதமே

தீர்க்கமான சிந்தையே
தீர்வளிக்கும் வாழ்வே

உயர்வு தரும் வழியே
உள்துயர் களையும் சமாதியே

ஒளிசூழ் பாதுகாப்பே
ஒப்பில்லா மாணிக்கங்களே

எங்கள் அன்னை அரவிந்தமே

கற்ற கல்வி ...பற்றும் முயற்சியாய்
தேர்வணைக்கும் பிள்ளை மனம்
உடனிருந்து....நம்பிக்கையாய் நிறைந்து நல் முன்னேற்றம் தருவாய் தருவே

சரணம் சரணம் பரிபூரண சரணம் பரமாத்மாக்களே..

ஓம் மாத்ரேய நமஹ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ.!!

தட்டான் தூது

தண்ணீர்
பிரியக் குறி சொல்லி
தாகம் தீர்க்க

தட்டான் தூது வந்து

உணர்விலையுதிர்
கிளைதோள் அமராதா

என்றே
ஏங்குகிறதடி

உன் பிரிவு வாட்டும்

என் கோடை

அடுப்படி பரபரப்பில்

அதிகாலை
அடுப்படி பரபரப்பில்

அடிக்கடி அழைக்கும்
குழந்தையை விட

அதிக எரிச்சல் தருவது

தினசரியில் மூழ்கிகிடக்கும்
கணவனும்

பூஜையறையிலேயே கதியிருக்கும்
மாமியும்

ஊடலிலும் கூடலிலும்

இதழ்களை

பொதுவில்
வைப்போம்

இருவருக்குமான

ஊடலிலும்
கூடலிலும்

சூட்சம நேசக் கூடடி

என்னைத் தவிர

எவரும் எளிதில்
புரிந்து தெரிந்து

அறிய முடியாத

சூட்சம
நேசக் கூடடி நீ

புஷ்பாஞ்சலிசெல்வ வளமை தரும் அன்னைக்கு

வில்வ இலைகள் சமர்ப்பணம்

பயண பாதுகாப்பு தரும் அன்னைக்கு
காகித பூக்கள் சமர்ப்பணம்

தைரியமனமளிக்கும் அன்னைக்கு

எருக்கம் பூக்கள் சமர்ப்பணம்

என்றும் எங்கள் வாழ்வு மலர்த்தும் தேவிக்கு...

அனைத்து மலர்களும் சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே..ஸ்ரீ அரவிந்தாய நமஹ

நினைவெல்லாம் நீ வரநினைவெல்லாம்
நீ வர

தென்றலாகிறேனடி

எதிர்கொண்டு மூச்சு தழுவி
எச்சில் முத்தமிட

பிரியமாடும் எல்லாம்பிரியமாடும் எல்லாம்
பிரியாமல்

உடனிருக்கும்
உறக்கத்திலும்......!!!!!!


இடர் நீக்கும் தாயே சரணம்இமை வருடி இடர் நீக்கும் தாயே சரணம்

கனிவாய் வந்து காக்கும் ஆளுமையே சரணம்
அமைதியாய் நிறையும் நிம்மதியே சரணம்

யோகமாய் வந்தசத்தியமே சரணம்
தன்னம்பிக்கை தரும் முன்னேற்றமே சரணம்

ஒளியாய் சூழும் உவகையே சரணம்

கருணையாய் அணைக்கும் அன்னையே
பிள்ளையென உன் மடி வந்து ..

உன்னை ஆனந்தமாய் கொண்டாடி மகிழ்ந்து ....

பிறவி மோட்சம் அடைகிறோம்....தாய்மையே

ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்யமயி பரமே...!!!!!!!

இளமைநிறைஅழகு

இருபுற மல்லிகை
இதழ் பொங்கும் சிரிப்பு
இளமைநிறைஅழகும்

வழிந்து
வாளைக் குமரியென்றாலும்

கண் தளும்பும் குறும்பு
சொல்கிறதடி

இன்னும் நீ

சின்னக்
குழந்தையென்று

ஓவிய சிரிப்பால்

ஓர விழியால்
ஓவிய சிரிப்பால்

வாலிபஉலகம் சுருட்டி
வசதியாய்
முந்தானையுள் முடிபவள்

நீயடி

புஷ்பாஞ்சலி
மனத்தெளிவு தரும் மாசற்ற கருணைக்கு

பவளமல்லி பூக்கள் சமர்ப்பணம்

நீடித்த செல்வம் தரும் நிறைஅருளுக்கு

நாகலிங்க மலர்கள் சமர்ப்பணம்

நேர்மை வாழ்வளிக்கும் சத்திய வேதத்திற்கு

சம்பங்கி பூக்கள் சமர்ப்பணம்

ஓம் மாத்ரேய நமஹ....ஸ்ரீ அரவிந்தாய நமஹ....!!!!

Friday, 27 March 2015

மெத்தன மலரழகு

கிளை தொங்கும்
ஒருநாள் மழைத்துளி

கசக்காமல்
கவர்ந்து கொள்கிறது

மெத்தன மலரழகை

பசியறியும் தெய்வம்

அனைவரின் பசியையும்
அம்மா அறிவாள்

அவள் பசியை
பாத்திரம் மிஞ்சும்
கடைசி பருக்கையும்

அடுப்புறங்கும்
சகுன பூனையுமே
அறியும்

வேர் பிடித்து இழுத்து

நோவு புசித்து

ஒவ்வொரு முறை
இருமி
மேலெழும்
போதும்

நெஞ்சு நீவி
தளர்த்துகிராள்

நாள் குறித்த தாத்தனை

வேர் பிடித்து
இழுத்து வைக்கும்

பாட்டி

அரைவயிறு அமுதூட்டஅன்பு மகளுக்கு
அரைவயிறு
அமுதூட்ட

ஆயிரம்
சோட்டா பீம்
கதை சொல்லி
களைப்படைகிறாள்

அம்புலிமாமா
படித்து வளர்ந்த
அன்னை

சுயநல வேதனை

விழி கலங்குகிறாய்
சகோதரனே

உன் ஆதரவு
துயரில்

ஒத்தடமிட்டு
வடிகிறது

எங்களுக்கான
சுயநல
வேதனை

செல்வ முருங்கையே

இலை பூவோடு
காய் நிறைத்து
கிளைவிட்ட
வேராய்

நீ நிலம்
நீண்டிருக்க

வேறிடம்
நான் செல்வதெங்கடி

செல்வ முருங்கையே

விடிவெள்ளி

வெள்ளி நீராடும்
என்
விடிவெள்ளி நீயடி

அன்னை அரவிந்தமே போற்றி

ஒளிசூழ் வேதமாய் வந்து
மன இருள் விலக்கும் மகத்துவமே போற்றி

தடைகள் தகர்ந்தெறிந்து வெற்றி
முன்னேற்றமளிக்கும் முக்தியே போற்றி

நிறை தரும் வாழ்வின் நிம்மதி தேவமே....
எங்கள் அன்னை அரவிந்தமே போற்றி போற்றி....!!!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!

யாதுமானவன்

உன்
தோளும் இதழும்
போதுமடா

தொடர்ந்து நான்..வாழ

பிள்ளை பிறைநிலா..

இந்தா
வைத்துக் கொள்

வேண்டாம்
எனக்கு கொடு

என
இல்லாத ஒன்றை
இருப்பதாய் பரிமாறி

கொடுத்து
வாங்கி நிறைந்து
விளையாடி மகிழ

விரல் பிடித்து
அவள் உலகம்
அழைக்கிறாள்

விடுமுறைக்கு வீடுவந்த
பிள்ளை பிறைநிலா..

பொதுமை வெட்கம்

சந்தன பெண்மை
சாய்கிறாள்

சரிந்து வழியுது
நிரம்பித் தளும்பிய

மொட்டு பூத்த
பொதுமை வெட்கம்

மரப்பாச்சி உம்மா

கோணவாய் கோமளா
குட்டை வாத்து கமலா

திமிர் பிடித்த கோபி
திக்குவாய் கனகா
போல்

மரப்பாச்சி உம்மா வும்

மறக்க முடியாத
பால்ய தோழமை

நாட்டு மன மான உணர்வை

விளையாட்டு தான்

இருப்பினும் ..இம்சையாய்
தூண்டி ,,,துடிக்க
வைக்கிறது

நாட்டு மன
மான உணர்வை...

கதிரியக்க கனியழகி

சிரித்து என்னைச்
சிதறடிக்கும்

கதிரியக்க
கனியழகியடி நீ

Thursday, 26 March 2015

புஷ்பாஞ்சலிஉடல்நலம் காக்கும் உயிர் வேதத்திற்கு

பூவரசம் பூக்கள் சமர்ப்பணம்

தன்முனைப்பு அகற்றும் தாய்மைகனிவுக்கு

தாமரை பூக்கள் சமர்ப்பணம்

செல்வ வரமளிக்கும் செழுமைக்கு

நாகலிங்க பூக்கள் சமர்ப்பணம்

ஓம் மாத்ரேய நமஹ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!

படர் நிழல்

நிஜங்களை விட
அதிக பயமுறுத்தல்கள்
தருகிறது

படர் நிழல்

கல் வீடு

எவரோ வாழ்ந்த
அடையாளத்தை

பச்சையமாய்
சுமந்து
சமைந்திருக்கிறது

வறண்ட காட்டின்
கல் வீடு

அம்மா

பழுத்த அன்பினாலே

அதிக
பிள்ளைக் கல்லடி
படுகிறாள்

அம்மா
மரித்தலும் சுகமடி

மதுர விஷம் நீயெனில்....!!!!

முதுமையில் தனிமை
பிறவியின் சாபம்..!!!!!!!!!!

கொடி இடைப் பூக்கள்சரம் சரமாய்
மொட்டழகு விரித்து
கீழ் தொங்குகிறது

அவளின்
இலையுதிர்கால
கொடி இடைப் பூக்கள்

உணர்வாடி சுமக்க முடியும்

எப்போதும்
உன் முதுகில்
நான்

உன்னைத் தவிர
வேறு யார்
என்னை

இத்தனை
இதம் பதமாய்
இமை காத்து

உணர்வாடி
சுமக்க முடியும்...உயிரே

வாலிப மனசு

ஆடை குறையிட்டு
அலங்காரம் நிறையிடுகிறாள்

வழிந்த வனப்பின்
பாதையில்
பார்வை தேங்கி

வாடித் துவளுது
வாலிப மனசு

கருணைப் பிரியமே

கனிந்த தேவமே
கருணைப் பிரியமே

காவல் கீதமே
கசியும் ராகமே

கமல வேதமே
கண்ணிய மனமே

தாவி அணைக்கும் தாய்மையே

என்றும் நின் மடி நாடி பிள்ளைச் சரணம் பரமமே...!!!!!

ஓம் நமோ பகவதே ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ.....!!!

ஆதிகால மிச்சமாய்

ஆதிகால மிச்சமாய்
பூமியில்

அப்பத்தாவின்
வெட்கம்

பயண நேசங்கள்

தொடர்ந்து போகவும்
முடியாமல்

திரும்பி வரவும்
பாதையில்லாமல்

பாதியிலேயே நின்று
தவிக்குது

பழகி ..புரிந்து
சரியில்லை என
தெரிந்தும்

விலகி விட
முடியாத
பயண நேசங்கள்