Monday 29 December 2014

மண சாமரம் வீசி

மழை நனைத்த சாலைகள்
மண சாமரம் வீசி
இசை மீட்டுகிறது....

என் ஈரக்கசிவவள்

தளும்பி சிதறிய
நடையழகை...

கட்டிட சுடுகாட்டில்

விடியலில் எழுந்து
வெள்ளாமை கழனி சென்று

நெல்சிலுப்பிய

முன்னோர் கதைக்
காலமெல்லாம்...

கண்ணீராய் வடிகிறது

கட்டிட சுடுகாட்டில்

அவலமாய்
கையேந்தும்

கஜமுகன்...விழிகளில்

புஷ்பாஞ்சலி*



தத்துவசுடர் பிரியமான தனித்துவ பேருண்மைகளுக்கு...

மல்லிகை மலர்கள் சமர்ப்பணம்

சூட்சம வெற்றியான ஆத்ம வேதங்களுக்கு
செம்பருத்தி மலர்கள் சமர்ப்பணம்

உயிர்பாதுகாப்பான ஒளிநிறைவேள்விகளுக்கு
கல்வாழை மலர்கள் சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே.ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!!!!!!

கன்னிப் பெட்டகமடி


தொட்ட பிரம்மன்
தொடாமல் குழைத்து

கை நழுவ சிதறும்
செழுமைச் செப்பழகுகள்
திரட்டி சேகரித்த

கவின் மதுக்
கன்னிப் பெட்டகமடி நீ

வறுமைக் கறை

அடித்து துவைத்து
ஆத்தோடு

அழுக்கு கரைந்த
பின்னும்
அகல மறுக்குகிறது

பாப்பாத்தியின்
வாழ்வுஒட்டிய
வறுமைக் கறை

நீயென நிழல்

உன்னுடன்.....
உன் சுமந்து
உனக்காகவே

நீயென நிழல்
நடக்கிறேன்

போகிறேன் என்றே
எப்போதும்

எனை
எடுத்துச் செல்கிறாயடி நீ

திமிர் நிமிர் வீராப்பு

கலகலத்து
சிரிக்காதேடி
கள்ளிப் பழ கனியழகே

குழைந்து உருகிவிடும்
என்
திமிர் நிமிர் வீராப்பு

தாய்மை தீர்க்கதரிசி

நொடியில் விறகு மூட்டி

ருசிக்க சமைத்து...

அதட்டி
பரிமாறுகிறாள்

ஒட்டிய
பிள்ளை வயிற்றில்

சுருங்கி

உறங்கும்
பசியை.....

உணர்ந்த...

தாய்மை
தீர்க்கதரிசி

தீரா பேய்

சுழட்டியடிக்க சுத்தும்
காத்து கருப்பு விலக்கி

கண்ணேறுகளுடன்
பொறமை பாசாங்காய்...

எழுத்தென நடிப்பென
வரும் ...நயவஞ்சகபச்சோந்தி
விரட்ட....

மனம் முன்னும்

அறிவு ஆணியடித்து

மாட்ட வேண்டியுள்ளது....

தீரா பேய் அண்டாமல்விரட்டி
துவம்சம் செய்யும்

திருத்த தெளிவு
திருஷ்டி பொம்மைகள்..!!!!

தேவ பிரியமே போற்றி

கருணை ஆளுமையாய் வந்த
தேவ பிரியமே போற்றி

கனிவென மனம் கொண்ட
தெய்வீக அருள் நிறையே போற்றி

கவலைமேகங்கள் சோதனையாய் மேல்கடக்க
குலையா மன உறுதியளித்து .....சுற்றி
உடன்சூழும் பாதுக்காப்பே

என் தாய்மையின் பிரதிபலிப்பே
சரணம் சரணம் பரிபூரண சரணம் அம்மா.........

ஓம் மாத்ரேய நமஹ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!!!!

இமைத் தாய்மை

அடித்தும்...கடித்தும்
வலிக்க வைத்து
வழி காட்டுவது

தன் மீது
எறும்பு ஊறினாலும்
பதறி துடிக்கும்
பாசமேயென

புரியும் பிள்ளைகளே
அருமை அறியும்

விழிக்கவசமிடும்
இமைத் தாய்மையை

பொம்மைக்குழந்தை

இழுத்து தலைசீவி
அதட்டிசோறூட்டி
தட்டி உறங்கவைக்க

தாய்மழலை
எதிர்நோக்கி

பள்ளிவாகனப் பாதை
காத்திருக்கிறது

அவள் விட்டுச்சென்ற
பொம்மைக்குழந்தை

ஆண்மைப்பார்வை



கிட்ட வரவோ
தொட்டு இழுத்து
முத்தமிடவோ இல்லை நீ

இருந்தாலும்
இதழ் நடுக்கி

தாளாமல் தடுமாறும்

அழகு வேர்த்தல்
தருகிறதடா........

உன் கள் ஊறும்
ஆண்மைப்பார்வை

நட்பின் நல்மன தோழமைக்கு

நட்பின் நல்மன தோழமைக்கு.... Damodar Chandru
பண்பின் பகுத்தறிவு சிந்தனைக்கு

அன்பு சூல் உலகம் சொந்தமாக்கி
அவனிநிம்மதி காணும் ஆத்ம வெற்றிக்கு

ஆராதனா..சந்துருவின் பிரிய தாத்தாவிற்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஆண்டுகள் பல...ஆல் மர விழுதுகள் தாங்கி
இன்பப் பெருவாழ்வு வாழ்ந்து....

ஆயிரம் பிறைகண்ட சாதாபிஷேக பெருவிழாகண்டு
முதுமைபெருமை சூடி....

வம்சக் குருத்துகளின் வழியாய்..
வால் நட்சத்திர ஒளியாய் நின்று....விரல் பிடித்து
ஆனந்தம் நிறைய....

அன்னை வேண்டி வாழ்த்துகிறேன்

இனிய வாழ்த்துக்கள் சார்.


Sunday 28 December 2014

மருது சகோதரர்கள்

தீர்க்கமான கண்கள்
தினவெடுத்த மார்பு

முரட்டு மீசை
முண்டாசு உருவத்தில்

வீரம் விளையும் நிலமாய்
வாழ்ந்து மண்ணாண்டு
சரித்திரம் வென்று

விழுப்புண் தாங்கி
பகை ஒழித்து
வம்சம் காத்து

காவல் தெய்வமாய்
வேரூன்றியுள்ளார்கள்

பெயர் சொன்னாலே
பேயும் நடுங்கும் தீரம் படைத்த

சங்கத்தமிழ் மதுரையின்
தேசவாள்..மருது சகோதரர்கள்

*புஷ்பாஞ்சலி*

விசாலமனம் தரும் அன்பின் அன்னைக்கு
வெண்சாமந்தி மலர்கள் சமர்ப்பணம்

ஒளிப் பெரும் நிம்மதியாய் சூழும் சுபிட்ச அன்னைக்கு
செவ்வரளி மலர்கள் சமர்ப்பணம்...

வழிதரும் வாழ்வாய் வந்து பயணம் நிறையும்
பாச அன்னைக்கு பட்டன் ரோஜா மலர்கள் சமர்ப்பணம்

ஓம் மாத்ரேய நமஹ....ஸ்ரீ அரவிந்தாய நமஹ....!!!!!!!!!!!!

முகவரிக் காற்று

ஆயிரங்காலங்கள்
அசையாமல் வாழ்ந்து

வாழ்வியல் சமைக்கும்
அருஞ்சுவை அரிச்சுவடிகளே

முகவரிக் காற்று

மொழித்தொன்மை
வரலாற்றுத் தென்றலுக்கு

தொட்டு மோதும் பார்வையாய்

என்ன கேட்டாய்
என்ன சொன்னேன்

என்பதே
மறந்துபோய் விடுகிறதடா

தோள் இடிக்கும்
நெருக்கத்தில்

தொட்டு மோதும்
பார்வையாய்

நீ உள்ளிறங்கும்
போதையில்.....

முத்த மச்சக்கன்னி

அலையாடை கட்டி
தினம் கனவாடி

இரவு
முத்துக் குளிக்கிறாள்

முகம் ஒளிச்சு நழுவும்
முத்த மச்சக்கன்னி

பசி ருசித்த பிரியங்கள்

கொடுப்பதற்கும்
பகிர்வதற்கும்

ஏராள தாராளமாய்
நிறைந்திருக்கிறது

ஏழைகளிடம்
பசி ருசித்த பிரியங்கள்

கள்ளம் பறைதல்

அழகு பூத்து
அம்சம் இழுத்து

சுவாசம் மயக்கும்
மதுப்பெண்மையே..

கொக்கி நீ போட்டு
சிக்கும்
ஆண்மைத் தும்பியை

கள்வனென
கள்ளம் பறைதல்

சரியானோ...??????

அருள்நிறை வேதமாய்

அருள்நிறை வேதமாய் வந்து
பாதுக்காப்பளிக்கும் பவித்ரமே நன்றி

உயிர் தந்து உணர்வுதந்து வாழ்வெங்கும் நலம் காத்து
நல்வழிகாட்டும் நன்மைப் பிரியமே நன்றி...

முன்னேற்ற தன்னம்பிக்கைகள் தந்து...
வேலியாய் நிறையும் வேதாந்தமே

நீயே துணையென நின் மலர்பாதங்களில்
சமர்ப்பிக்கின்றேன்..என் ஜீவ ஸ்தூலத்தை

நன்றி நன்றி நன்றியம்மா..
அன்னையென எனை அணைக்கும் தேவமாத்ரேயே......

ஓம் ஆனந்தமயி..சைத்தன்யமயி..சத்யமயி..சரணம்..!!!!!!!!!


விட்டுப் பிரிந்த வேதனை

ஜன்னல் தட்டி
அழைக்கும்

குழந்தை
மழைத்தோழிக்கு

எப்படி சொல்வேனடா

என்
நனையும்
அழகு ரசிக்கும்
விழிகள்

விட்டுப் பிரிந்த
வேதனையை.

குறுகுறுப்பாய்

இடைவெளியில்லா
நிமிட முத்தத்தில்

இதழ் மீதே
விட்டுச் செல்கிறாய்

குத்தும்
உன் முள் மீசையை

குறுகுறுப்பாய்

இமை இறக்கை

எல்லையற்ற
ஏகாந்த வானத்தில்
எங்கே என்றே
கேட்காமலே

உன் திசையில்
பயணம் விரிக்கிறதடா

நாளும் உன்
முகம் பார்த்து
மரண உறக்கம் விழிக்கும்

என் இமை இறக்கை

விடலை விலாங்கு

மெளனப் புழு மாட்டி
வெட்கத்
தூண்டிலிடுகிறாள்

சித்தகத்தி சிறுக்கி

வேண்டுதலாய்
வலியப் போய் விக்கி.....
கொக்கி சிக்குது

என் விடலை விலாங்கு

தாயின் காலடி

அடித்து
திட்டினாலும்

தாயின் காலடிக்குள்

நிழல் நடப்பதே
நிம்மதி சுகம்

இறை உரு விலங்கினங்கள்..

வரம் தருமென்ற
நம்பிக்கையிலேயே

பயமின்றி
பக்கம் நின்று

பகுத்தறிவு விலக்கி
வணங்கப்படுகின்றன....

இறை உரு
விலங்கினங்கள்...!!!!!!

Friday 26 December 2014

தேடல்களின் தோழியாய்....

அன்பின் நிறைவாய்......
அழகின் முகவரியாய்....

குழந்தையின் பிரதிநிதியாய்......
தேவதை பிரியங்கள் கொஞ்சி வந்த
ஆனந்த செழுமை கிருத்திக்கு

தாய்மடி தாலாட்டு நாள் வாழ்த்துக்கள்....

தேடல்களின் தோழியாய்....
நளினங்களின் நட்பாய்.....

சிந்தனை கருத்து வளமையுடன்
தன்னிகரில்லா தன்னம்பிக்கை யுடன்....

எத்துனை நிறைந்த போதும்
தான் எனும் தனித்துவமாய் மிளிர்ந்த போதும்

பணிவெனும் அடக்க ஆளுமையாய்.....குணமாடும் கனிவழகே...

அனைவரையும் அன்பு நோக்கும் விழிகள் கொண்டு அரவணைக்கும்
பெண்மை பேரன்பே....

தரணியாளும்
தரணின...தளிர்மலர் தாரகையே.....

என்றும் நீர் ...சந்தோஷப் பூச்சூடி
மங்கலப் பிரியங்கள் சூழ...

மனம் கொஞ்சும் மகவுகளுடன்.....

மகிழம்பூ நிம்மதியணைத்து..

மாதரசியாய் ஆண்டு பல வாழ

ஆழ் மன ஆனந்த வாழ்த்துக்கள் தோழி.


புஷ்பாஞ்சலி


ஒளி சூழ் வேள்வியாய் வந்த வேத பரமத்திற்கு
சம்பங்கி மலர்கள் சமர்ப்பணம்

நிம்மதி வாழ்வு தரும் வசந்த ப்ரியத்திற்கு
சங்கு புஷ்பங்கள் சமர்ப்பணம்

அனைத்து உயிர்களையும் அணைத்துக் காக்கும்
அன்னையெனும் செல்வ வளமைக்கு
அந்திமந்தாரை மலர்கள் சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ............!!!!!!!!!!!!!!!!!

பருவ முட்கள்

என்னை நீயும்
உன்னை நானும்

பார்த்திருக்க கூடாது
என்றே

நினைவு கிழிக்கிறதடி

தனிமை தேகம்
பூத்திருக்கும்

இரவுப்பருவ முட்கள்

விதைநெல் கல்வி

வாய் படிக்க

வறுமை
களையெடுத்து

வெள்ளாமை
சமைக்கிறது

விதைநெல் கல்வி

வீடில்லா நாடோடி

ஆள் ஆரவாரமற்ற
பொழுதுகளில்

ஓய்வில்லாமல்

ஒருவேலையுமில்லாமல்

அங்குமிங்குமாய்
திரிகிறார்கள்

பெயரில்லா நாயும்
வீடில்லா நாடோடியும்

கோபக் கிளி

குறி சொல்லி
கோபக் கிளியின்

வேதனைகாலம்

சிறகொடிந்து
சிறைகிடக்கிறது

வெளிச்சிதறிய
வேகாத

நெல்மணியில்

மொந்தை ஊத்தப்பம்!

பசி விலக்கும்
குழந்தை சாப்பிட

நெய் தொட்டு
தேன் தடவி

காய்கறி மறைத்து
அம்மா ஊத்தி

ஊட்டுகிறாள்

அழகு பெருத்து
அளவு சிறுத்த

மொந்தை ஊத்தப்பம்!

கன்னிமை வலி

சரி என்பதிலும்
சமாதான
ஏமாற்றத்திலுமே

சத்தமில்லாமல்
தொலைந்துள்ளது

தகப்பன் விரல் விட்டு
கணவன் கைபிடித்த

கன்னிமை வலி

மனக்குளம்

அமைதியாகத் தான்
கிடக்கிறது

அவள் எனும் கல்
எவரும் எறியும் வரை

மொட்டை மனக்குளம்

வலிச்சூல் வலிச்சூல்

அம்மா......என
வாய் ஓயாமல்
அழைக்கிறது

காப்பக குழந்தைகள்

மலர்ந்தும் காய்க்காத
அவளின் வலிச்சூல்
மலட்டுப் வலிச்சூல்யை

தேவதை பிஞ்சு


இறைவந்து அமர
இயற்கை அழகூட்ட

இறக்கையில்லா
தேவ தூதழகியாகிறாள்

இதழ் மச்ச
தேவதை பிஞ்சு

Thursday 25 December 2014

தேவ தூதனின் ...தெய்வீக பிறந்தநாள்


ஒளிவழி வழிகாட்ட....
ஒளியேந்தி..வழியேந்தி

ஒப்பில்லா பிரியமாய்
ஓசையில்லா அமைதியில்

உருதோன்றிய தேவ மகன் அவதரிப்பு திருநாள்

விலங்கு வழி பரிணாமத்தில் கட்டுபாடன்றி
அசுரகுணங்களோடு அலைந்து திரிந்த மானுட குலத்தை
மனமெனும் சக்தி கொண்டு அடக்க

வழிகாட்டும் ஒளியாய் தோன்றினீரே
இறைநம்பிக்கை கருவியே

உனக்கிருக்கும் வலியும் ...வாழ்வுமே
அனைவருக்கும்...நேசி அனைத்து உயிர்களையும்
உன் போலே ...என...சக மனிதனிடமும்..மனிதத்தை போதித்த..புனிதராய்.......

தானே முன்னோடியென...மனிதமாய் பிறந்து
மற்றவர் நலத்திற்காகவே வாழ்ந்து
முள்கிரீடம் தாங்கி
ஆணிவலியோடும்..அறைந்தவர் நலம் நாடி
குருதி வழிய ....சிலுவை நிறைந்தீரே

பிரார்த்தனைகள் கேட்கப்படும்
பாவங்கள் மன்னிக்கப்படும்..என் அன்புசன்னிதியில்
என்றே..மன தடுமாற்றங்களை
தாய்மையாய் ஏந்தி..தன் வழி திருப்பி மனிதம் மேம்படுத்தினீரே

நெருங்கா மனிதங்களையும் தத்துவ தூதுமையாய் நெருங்கி
உள்ளங்கள் உழுது களை எடுத்தீரே

சர்வ வல்லமையாய் நிறைந்து...சக மனிதன் நேசிப்பு தந்தீரே

பாச குழந்தை மனமாய் இருப்பதே ..பவித்ர தொண்டு எனப் பணிந்தீரே

துன்பவேர் களைந்து..இன்ப வேள்வி செய்தீரே

தன்னல பிடிவாத முடவாதம் சொல்லும் மதமெனும்
மதம் விலக்கினீரே

அசுரமெனும் அநீதிமன்றத்தில்
தெய்வநிந்தனை எனும் பழியைஅடைந்தீரே

மனிதம் காத்த புனித மகனை....சிவப்பு அங்கியால் மூடி
முள்சவக்கடி..பெற்றீரே


வருத்தும் வலியோடு ..ஒழுகும் குருதி வழிய
சிலுவை சுமந்து....உயிர் மரித்தீரே

துடித்த உயிர்கள் கண்ணீர் உணர்ந்து
மரித்த ஆண்டவர் மறுபடி பிறந்தீரே

புனித ஆவியாய் பூமியும் நிறைந்தீரே

தேவ தூதனாய் தேவ வலிமை தர
மண் வந்து..மனிதம் காத்து
ஆவி நிறைந்த...ஆத்ம புனிதனே

மனம் கனிந்து மண்டியிட்டு....உருகும் மெழுகாய்
உள்ளம் நெகிழ ....

திருவருகை காலத்தில்..திருப்பலி சிந்தனையேந்தி
குடிலமைத்து...பரிசுகளேந்திய தாத்தாவுடன் வாழ்த்துபாடி
சிலுவைகிளை மரம்நட்டு அலங்கரித்து....

வரவேற்போம் இறை குழந்தையை....

வாழ்த்தி மகிழ்வோம்...சகோதர சகோதரிகளை

இனிய வாழ்த்துக்கள் தோழமைகளே

தேவதூத மாத்ரேயே போற்றி


அமைதியெனும் ஆளுமை ஜோதியாய் வந்த
தேவதூத மாத்ரேயே போற்றி

நல்மன சிந்தனைகள் தந்து நல்வழிகாட்டும்
நட்சத்திர ஒளியே போற்றி

சிறகடியில் எமைக்காத்து....எம் கவலை
சிலுவைகள் தாங்கி வரும் தாய்மையே போற்றி போற்றி

ஓம் நமோ பகவதே ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!!!!!!!!


மச்ச முத்தங்கள்

அதிகாலை நீராடி..
அவசர முடிசிட்ட
கூந்தல் நுனியில்

வடியாமல்
வாழ்கிறது

இரவணைத்த
மாமன்
இரவலாய் கொடுத்த
மச்ச முத்தங்கள்

தொழுவ விடியல்

வால் நட்சத்திர
வழிகாட்டலுடன்

மெதுவாய் பயணிக்கும்
ஒட்டக இரவு

ஒளித்து வைத்துள்ளது

ஒரு தேவதூதனின்
தொழுவ விடியலை

வாசல் வந்த வசந்தப் பிரியங்கள்

அன்பின் மொழிகளும்..பாச நேசங்களும்
இத்தனை பவித்ர நிம்மதி தருமா???

ஸ்ரீ ரங்கம் இருந்து ஒரு தேவதை வந்தாள்.Uma Sundar
தோழிமார் படை சூழ
தெய்வம் அழைத்து கொண்டு
நட்பெனும் உயிராட...

நான்கு வருடமாய் முகநூல் தொடங்கிய நாள் முதல்
அன்பு இழையோடிக் கனிந்த நட்பின் பழமாய்
இன்று வரை முகமறியாமல்....
நேரில் பார்த்தவுடன்..பேசவும் வார்த்தையில்லை
மனம் நிறைந்த ஆனந்தத்தில்...........

கிட்ட நெருங்கி அமர்ந்து...தொட்டு பேசி எப்போதோ
மனம் கலந்த நம்பிக்கையாய் அவள் உடனிருந்த போதும்
இன்று விழிகளின் சந்திப்பில்.........
புதிதெனும் தயக்கமும்...முகமறியா கலக்கமும் கொஞ்சமும் இல்லை

அதே சிரிப்பு..அதே பேச்சு..அதே குதுகலம்...
பள்ளி..கல்லூரித்தோழியாய்..பார்த்தவுடன் கட்டிக்கொண்டு
கண்நிறைத்து இமைதட்ட மறந்து சிரித்தோம்

எப்போது நீ என்பது என் நம்பிக்கை டி உமா
என்னவள்..என் நன்மையின் நலமானவள்....
எதுவும் பேசலாம்...எல்லாம் விளையாட்டே என்று
உரு கொண்டு உயிர் அணைக்கும் பாசம் நீ
பார்க்காத போதும்..இன்று பார்த்த போதும்...

அன்பு உமாவுடன் ..ஆசைத் தங்கைகள்.Janani RajagopalShobi Shobana
ஜனனி..&..சோபனா

உமா தான் எனக்கு நான்கு வருட பழக்கம்
ஒரே ஊரில் இருந்தும் ..ஒரே காற்று சுவாசித்தும்
நீங்கள் இப்போது தானே என்னைப் பார்க்குறீங்க

எப்படி ..இப்படி...அக்கா அக்கா என்ற வாய் ஓயாத அன்பு
பேசும் போது விட ..உங்களைப் பார்க்கும் போது விட
பிரியும் போதே...மனசு இழப்பை உணரறுகிறது

விழி கசியும் நீராய்,....ஜனனி...& சோபி

அருகிருந்தும் இத்தனையும் அணைக்க நேரமில்லமல்
எதை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறேன் நான் என்றே
ஆதங்கமாய் மனம் சலிப்படைகிறது...டியர்ஸ்

கட்டிப் போடுகிறது...நகர விடா பாசங்கள்

மறக்க முடியாத வசந்த நாள்

குட்டி சாண்டகிளாஸ் களாய்...ஸ்ருதி & சுஜித்

வந்துவிட்டது..என் மனவீட்டில்....ஆனந்த கொண்டாட்டமாய்
பிறந்துவிட்டார்...அத் தேவதூதன் என்றே...

நிம்மதி நிறைந்தது...அன்பின் செல்வங்களோடு அளவளாடிய நிமிடங்கள்

விடை பெற முடியாமல்...விட்டு விட்டு வந்தேன் மனதை கொல்லும் பிரிவறியா ப்ரிய நேசத்தை அவர்களிடமே

நல் மன இதயங்களை..நட்புறவாய் தந்த முத்தான முகநூலுக்கு
முழுமன ஆனந்த நன்றிகள்

Miss u Thangam...& chellam's............

புஷ்பாஞ்சலி


ஸ்தூல வாழ்வளிக்கும் சக்தியின் பிரியத்திற்கு
செந்தாமரை மலர்கள் சமர்ப்பணம்

ஆத்ம தேடலாய் நிறையும் அமைதியின் ஆளுமைக்கு
செம்பருத்தி மலர்கள் சமர்ப்பணம்

வாழ்வு தந்து..உடன் நின்று காத்து...
முன்னேற்ற உயரங்கள் தந்து
வந்த ஜீவன் ..தன் கடமையை திறமையாய் ஆற்றிச் செல்ல
இறுதியிலும் இமையாய்..உடன் அணைக்கும்

எங்கள் பர பிரம்மத்திற்கு........பவித்ர ஜோதிக்கு

மனம் உருகிய கண்ணீர் மலர்கள்..என்றும் சமர்ப்பணம்

ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி..சத்யமயி...பரமே..!!!!!!!!!

Tuesday 23 December 2014

கலைத்தாயின் தவப் புதல்வனுக்கு அஞ்சலி


இயற்கை எழுதிய ..........இயக்குனர் சிகரம்
தமிழ் திரையுலகின் பிதாமகன் ......
கதையம்சமும் ..கவின் அம்சமும்..
போட்டி போட ..திரைக்கதை சுழட்டி....
தமிழுலகம் இயக்கிய சிகர தலைமகன்

புது புது விதைகளை....தேடி தேடி
திரைபூமி புதைத்து.....
கலை வாழ்வில்....வசந்த விழுதுகள்
பல தந்த சாகப்த ஆலமரம்

பாரதி கண்ட அக்னிப் பெண்மையை......
கசக்கிய பூவுக்குள் ஒளிந்திருக்கும்
பூநாக கோப தீரத்தை.............

படித்தவன் ஏடெடுத்து எழுதினான்
துடித்தவன் பாட்டிசைத்து பாடினான்
உணர்ந்த நீயோ........படைத்த பிரம்மனாய்
அவளை கதை உருவமாய்
முன் உலவ விட்டு...அரங்கேற்றினாய்

இந்தக் கல்லுக்குள்...ஒளிந்திருப்பது
இந்த சிற்பமே ...என்று......கடும் பாறைகளை
உன் கதைஉளி கொண்டு செதுக்கி
கலைஞனாக்கினாய்......................

கணக்கெழுதி எழுத்தாராய் வாழ்வு தொடங்கி
கலை உலகு நுழைந்து..பலரின் தலையெழுத்து எழுதிய
தன்னிகரில்லா பிரம்மனே.........

இயக்க தந்தை ஸ்ரீதரின் வாரிசாய்...இயக்குநரே
திரைப்பட பிதாமகன் எனும் மேற்கோளுக்கு
அடையாளமான அணுத்துகளே.....
வாழ்ந்தாய்..வாழவைத்தாய்..வாழ்க்கை தந்தாய்
முகவரியானாய்...முழுமதியானாய்....

கோபமும் ..குணமும் ஒருங்கிணைந்து
உற்சாகம் கொள்ளும் உற்சவமாய்
உலா வந்த சுறுசுறுப்பே

நடிப்பெனும் கழகமாய் திகழ்ந்த
சிவாஜி...எம்.ஜி.ஆர் எனும்
சகாப்த கல்லூரிகளை......கலோரிகளாய்கொண்டு
கமல்...ரஜினி எனும்
எழுச்சி சிங்கங்களை..திரைகாடு நுழைத்து....
கோலிவுட் சரித்திரம் திருப்பிய புரட்சி நாயகனே

இன்று மண் புதைந்த மாணிக்க விதையே

புத்திர சோகம் பிடித்திழுத்ததா....
தள்ளாமை....தாவி உடன் செய்ததா...
என்னே அவசரம்....உன் உருவம் மண் துறக்க

பிடித்தமான ஆத்மாக்கள்...வயது கடந்துசென்றாலும்
இன்னும் வாழ்ந்திருக்க வேண்டுமென்றே துடிக்கிறது
உணர்வு கலங்கிய ஓசைகள்

சென்று வா வரலாறே...விண் சென்றாலும்
அங்கும் ஓய்வில்லாமல்...ஓடிக் கொண்டே தான் இருப்பாய்
தேவர்களை இயக்கி செதுக்கும்
தேவாத்ம உளிச்சிகரமாய்..நீர்

ஆழ் மன வருத்தங்கள்..எங்கள் அற்புத கலைமகனுக்கு...


அன்னையெனும் ஆனந்த கருப்பொருளே

சத்திய ஜோதியாய் வந்த
சாநித்திய மேன்மையே போற்றி

சந்தோஷ வாழ்வளிக்கும்
சன்னிதான பரம்பொருளே போற்றி

சகலமும் நீயே என சரணடைய
சக்தியாய் உடன் வந்து நிம்மதி தரும்
உன்னத ஆத்மாவே.........

அன்னையெனும் ஆனந்த கருப்பொருளே போற்றி போற்றி

ஓம் நமோ பகவதே.ஸ்ரீ அரவிந்தாய நமஹ......!!!!!!!!!!!!!!

குணநிறை என்னவள் கோபம்

கிளைத்து பூத்து

நெருஞ்சி யாகும்
மலரிலும்

மணம் குமித்து
நிறைத்துள்ளது

மருத்துவபயன்கள்

குணநிறை
என்னவள் கோபம்போல்

கம்புக் குச்சி ருசி

அம்மா அப்பா
அண்ணன் அக்கானு

வீட்டிலுள்ள ஒருவர்
பாக்கியில்லாமல்

திட்டுகுட்டு வாங்கி
அஞ்சு அஞ்சு பைசாவா
சேர்த்து
நாலணாக்கு வாங்கிய

காளியப்பனுக்கு
மட்டுமே தெரியும்

உருகி வழியும்
சேமியா ஐஸின்

கடைசி
தேன் சொட்டும்
கம்புக் குச்சி ருசி

பிள்ளை நதி

குளித்து ..குடிக்க
ஊரின் அழுக்கு
சுமந்து
சலசலத்து ஓடுகிறது

கள்ளமில்லா
மழை பிரசவித்த

கபடில்லா..பிள்ளை நதி