Monday, 31 August 2015

புஷ்பாஞ்சலிஆகம வளமைக்கு அடர் சிவப்பு ரோஜா

வெற்றிமுன்னேற்றம் தர மஞ்சள்ரோஜா

அன்பின் பிரியமணைக்க இளம்சிவப்பு ரோஜா

தெய்வீக உருமாற்றமளிக்க ஆர்ஞ்சு ரோஜா

பாதுகாப்பு வழங்க காகிதமலர்கள்
பாச பிரியைக்கு சாமந்தி மலர்கள்

தீர்க்கசிந்தனை தர கொத்துசிவப்பு மலர்கள்

அனைத்தும் ஆதர்ச அன்னையின்
அழகுதிருப்பாதங்களில் ஆனந்த சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே ,,,ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!

அதீதங்களின் உச்சம் செல்

புகை
அமைதியா...புகை

மது
நிம்மதியா...குடி

மாது
இன்பமா ..நாடு

பொருள்
மகிழ்ச்சியா...சேமி

அனைத்திலும்...
மிச்சம் வைக்காமல்
அதீதங்களின்
உச்சம் செல்

ஆதிக்கமாய் உள்சென்று
உன்னை மூழ்கிக் கொள்

கால கட்டம்
நிச்சயம் உதறும் உன்னை
ஒருநாள்
வெளித்தள்ளி

அனைத்தும் அனுபவித்த
சித்தார்த்தன் தானே
ஆசைதுறந்து...பெளத்தனானான்

சாதனையாளனை
சர்ப்பம் தீண்டினாலும்
அமிர்த ஆயுளே பெறுவான்
அவனி வெல்ல

நன்மை நலக்கசிவுகள்

உதிரம் குடித்து
உடல்மேல் நிறைத்து

ஓய்யாரம் ஏறி
ஓநாய்த்தீமைகள்
கெக்கரிக்க

ஒன்றும்
செய்வதறியாமலே

உறக்கம்தொலைக்கும்
உயிர் துடிக்கும்

நன்மை நலக்கசிவுகள்

தாவணி முருக்கையடி

மரமெல்லாம் பூவாகி
பூவெல்லாம் காயாக

முத்திய பித்த மூச்சு
முழுநேரமும் தவிக்க

மச்சான் மனமிழுத்து
முந்தானை முடிச்சிடும்

தாவணி முருக்கையடி நீ

செல்பேசி அழைப்பு

நீயும் நானும்
நாமாய்

பிசாசு
பிரியங்களுடன்

இதமணைத்த
நிமிடங்களை

இமையோர ஈரத்துடன்
நினைவுதட்டி செல்கிறது

எதிர்பாரமல்
கைதட்டி விட்ட
செல்பேசி அழைப்பு

சிரித்தே கடக்க

வலிகளை
மொழிகளால்
ஒளிக்கும்

அவளுக்கு தெரியும்

வருத்தங்களை
சிரித்தே கடக்க

உணர்கிறேன் நானும்

உரசி செல்கிறாய்
உணர்கிறேன்

நானும்
பெண்ணென்று

நேச தாய்மை

அடித்த போதும்
அம்மா

என்றழைத்தே
வரும்
குழந்தைபாசம்

பலவீனமாக்கும்
நேச தாய்மையை

தன்னம்பிக்கை வாழ்க்கை

முயற்சி செய்து
ஏற
முன்னேற்ற
படிக்கட்டுகள் தரும்
தன்னம்பிக்கை வாழ்க்கை

சூட்சம சுடரே போற்றி


அகில் உலகு ஆளும்
சூட்சம சுடரே போற்றி

ஆனந்தவளம் தரும்
ஆகம பொருளே போற்றி

கருணை கனிவின்
கவின்நிறை தவமே போற்றி

எதிலும் எங்கும் உறையும் நாதமே

ஆழ் யோசிப்பு இல்லாது
அனைத்தையும் அப்படியே ஏற்று

நலம் மட்டும் போற்றும்
நல்மன பக்குவம் அருள்

எங்கள் அரவிந்த அன்னை வேதமே

ஓம் ஆனந்தமயி சைத்தன்யமயி சத்யமயி பரமே !!!!

மன உதிரம் பகிர்ந்த


அடித்தாலும் பிடித்தாலும்

ஆயிரம் சுடுசொல்
சமைத்தாலும்

தமையன் தங்கையென

மன உதிரம் பகிர்ந்த
மாசில்லாத பாசம்

தசையாடும்
உயிரோடும்
வரை

உணர்வு நினைவு
விட்டு விலகாது

மலர்குவியல் நீ

இயல்பாய் சிரித்து

இதயக் காம்பு
கழட்டி போகும்

மலர்குவியல் நீ

வேர் பாசம்

அண்ணா
என்றழைக்கும்
போதெல்லாம்

அம்மா என்றே.
நினைவு தித்திகிறேன்

பெரிதாய் வேறுபாடில்லை
உயிரணைக்கும்

இரு வேறு

வேர் பாசத்திற்கும்

மது மணிப்புறாக்கள்

அந்தி மாலை
இனியவள் தோளிடித்து
மொட்டை மாடியமர்ந்து

எட்ட நின்று
கொஞ்சி காதலுறும்
ஜோடிப்புறா கதை சொன்னேன்

இணையொன்று பிரிந்தால்
துணையின்றி வாழாது

உயரே உயரே ...
சிறகுவலிக்க பறந்து
சட்டென பூமி வீழ்ந்து
உயிர் விடுமென

முழங்காலிட்டு
ஜிமிக்கியாட தலையாட்டிக்
கொண்டிருந்தவள்

கிட்ட நெருங்கி
மூக்கு உரசி

அலட்டிகாம சொன்னா......

"""""நானும் தான்"'""

கண்கள் பனிக்க
உடன் பாய்ந்து
வலிக்க இறுக்கிக்
கட்டிக் கொண்டேன்
வாழ்வானவளை

சிறகடித்து வெட்கம்
சிலிர்க்க சிரிக்கிறது

மாடி வந்த
மது மணிப்புறாக்கள்


ஆன்ம தவம்

தெய்வம் தேடி
கோவில் வருகிறேன்

தேவதை நீ
எதிர் வர

வரம் பெற்று
வருத்தம் கலைந்து

உன் அடிப்பாதம்
தொடர்கிறது

என் ஆன்ம தவம்

எரிகிறேன் நானும்....

எரிதணலே
அருகே வா...

கொஞ்சம்
கொஞ்சி

எரிகிறேன்
நானும்....!

வாழ்ந்த பால்யத்தை...

அழகிய பொன்வண்டு பிடித்து
அஞ்சு பைசா தீப்பெட்டியில் அடைத்து

கொறிக்க தீனியிட்டு
வாழ்ந்த பால்யத்தை

கதையா..சொல்ல

அய்யோ ..பாவமில்ல
ஏம்பா...அதை
கொடுமை செஞ்ச....

எனக் கேட்கும்
மகனுக்கு.....
எப்படி புரியவைப்பது

அடிமைத்தன படுத்தல்
அந்த காலத்து
அன்பு விளையாட்டு என

காத்திருப்பு நிமிடங்கள்

கொஞ்சம்
தவிப்பை
ஏக்கத்தை
வருத்தத்தை

ஏமாற்ற
வலியோடு
தந்து கடந்தன

உனக்கான
காத்திருப்பு நிமிடங்கள்கருணை உருவே போற்றி

அழகு பிரியமே போற்றி
ஆறுதல் மடியே போற்றி

கருணை உருவே போற்றி
கனிவின் மனமே போற்றி

வலிநீக்கும் வலிமையே போற்றி

துயர் துரத்தும் வல்லமையே போற்றி

எதையும் தாங்கும் மனோசக்தி தரும் மகத்துவமே போற்றி போற்றி!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ .!

வெட்கமென நழுவிக் கொள்ள

முகமிழுத்து
முத்தமிட யோசிக்கும்
ஒரு நிமிடம் போதும்

நெகிழ்ந்த நான்
வெட்கமென
நழுவிக் கொள்ள

வரையாடு நேசம்

உம் மன
பாறையிலும்
பசும் நீர்

உள்ளதென்றே
பச்சையம் தேடுது

வழிதப்பி தாவும்
வரையாடு நேசம்

நேசம் ..வெட்கமறியாதோ ?

சத்தமிட்டு
சண்டையிட்டு

மலர்களோடு
வருகிறாய்

மலர்ந்துவிடுகிறேன்
நானும்
வேகமாய்

நேசம் ..வெட்கமறியாதோ ?

திருவோண திருநாள் வாழ்த்துக்கள்தேக்கும் பாக்கும்
தென்னை மரப் பிரியங்களுடன்
கூடிக் களித்து
கும்மாளக் குருத்திட

எழில் கொஞ்சும்
இயற்கைவதன அழகு
நிலநீர் ..நீள் வசந்தமாய்

சேட்டன் சேச்சிகளின்
செந்நிற மேனியோடு
வனப்பு சிலிர்த்து தளிராட

அழகோடு அறிவிலும் முதன்மை சிறந்து
குளுமைகண்டாடும் கேரள மக்களிடை

நடைபெறும் நலம்பெற்ற
கம்யூனிச நல்லாட்சி

கண்டு களித்து ..
தன் தலை வாமனனுக்கு ஓரடியாய்
கொடுத்து பாதாளம் சென்ற
பஞ்சதீர்த்த மன்னனாம் மகாபலி
வரவேற்று

வாசலெங்கும் பூக்கள் கோலமிட்டு

வரவேற்பு பிரியங்கள்யேந்தி
கைகொட்டுக் களியாடி

அழகுடுத்தி
யாணைத்திருவிழா காணும்

அன்புநிறை அண்டைமாநில
சோதர சோதரிகளுக்கு

இனிய திருவோண திருநாள் வாழ்த்துக்கள்

புஷ்பாஞ்சலி

அன்பு வளமைக்கு அரளி பூக்கள்

ஆழ்ந்த பக்திக்கு துளசி

தெய்வீக அருளுக்கு
செம்பருத்தி

முன்னேற்ற வளமைக்கு
அல்மண்டா

திருஉரு மாற்றத்திற்கு
ஆழ்சிவப்பு ரோஜா

பாதுகாப்புக்கு காகித மலர்கள்

அன்பின் அன்னைக்கு
ஆனந்த சமர்ப்பணம்

ஓம் மாத்ரேய நமஹ ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!

Sunday, 30 August 2015

அப்புச்சியும் அம்மாயியும்

வயசான பின்
வாய் ஓயாமல் பேச

ஆயிரம் கதைகள்
சேர்த்து வைத்திருக்கும்

அப்புச்சியும் அம்மாயியும்
பணங்காசு பதட்டமில்லாமல்

இனிவாழ்வை
இலகுவாய் வாழ்ந்தவர்கள்

நேச நெஞ்சம்


வலி காத்திருக்க
வழி வருகிறாய்

வந்தணைத்து கட்டி
கதறி முட்டி
கண்ணீர் விடுகிறது

இனியொரு பிரிவு தராதே
எனக் கெஞ்சும்
நேச நெஞ்சம்

நிலைக்கதவும் கைபிடிகளும்


வாழ்த்தி
வரவேற்று
வழியனுப்பும்

நிலைக்கதவும்
கைபிடிகளும்
பறைசாற்றும்

அவ் வீட்டின்
அன்பு ஈரமாய்

நிலைத்த மனிதத்தை

நீர் பட்டாம்பூச்சிகள்

சின்னதொரு
நினைவுக்கல் எறிய

தவிப்புடன்
சிறகு சிலிர்த்து

மனக் குளமெங்கும்
மேலெழும்புகிறது

உன்
நீர் பட்டாம்பூச்சிகள்

என் தூரிகை நேசம்

எப்படி நீயிருந்தாலும்
உன்னை

அழகாக மட்டுமே
வரையும்

என் தூரிகை நேசம்

ஒளியே வாழ்வே

ஒளியே வாழ்வே
தவமே வேதமே

அருளே வளமே

அழைத்தவுடன் அணைக்கும் அன்னையே

ஆகம அற்புதமே சரணம் சரணம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீஅரவிந்தாய நமஹ

நன்பிரிய நட்புவானம்

வறண்ட பூமி
வெடித்த வேதனை கண்டு

வாரிக் கடல் சுருட்டி
ஆவி பிழிந்து

ஆதூரக் கண்ணீர் வடித்து
மேகக் கரு உதிர்க்குமாம்

நன்பிரிய நட்புவானம்

தூய்மை நேசம்

வாட்டி வதைத்து
கசக்கி கண்ணீர் விட
வைத்தாலும்

துரோகமெனும்
ஒற்றைச் சொல்லை

இமையணைக்காது

தூய்மை நேசம்

அன்பெனும் உலகப் பொதுமொழி

வெகுநேரம்
பேசிக்கொண்டிருந்தனர்
அவனும் அதுவும்

அவர்களுக்கு மட்டுமே
புரியும்

அன்பெனும்
உலகப் பொதுமொழியில்

ஆன்ம சிரபுஞ்சி

கூந்தல் தோகை
விரிக்கிறாய்

கூட்டமாய் கருத்து
பெரும் மழைப் பொழிவுக்கு
தயாராகிறது

என்
ஆன்ம சிரபுஞ்சி

அன்பின் நேசமாய்

அன்பின் நேசமாய்
இருக்க தேவையில்லை

பல நேரங்களில்
அப்படி நடிக்க தெரிந்தால்
போதும் !

உயிர் பொம்மையாய்

அணைத்து கட்டி தூங்க

அருகில் நீ
வேண்டும்

சிலுமிஷம் செய்யாத
உயிர் பொம்மையாய்


புஷ்பாஞ்சலி

தைரிய மனம் தரும் தரணிசூழ் பிரியத்திற்கு
எருக்கம்பூக்கள் சமர்ப்பணம்

வெற்றிநிறை வாழ்வு தரும்
ஆகம மேன்மைக்கு அரளிபூக்கள் சமர்ப்பணம்

தெளிவான சிந்தனை வழங்கும் தேவ மாத்ரேய்கு
சாமந்தி பூக்கள் சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ ..!!!