Wednesday 30 September 2015

உயிர்தந்தவளே


சட்டம்போட்ட
புகைப்படமாய்
சடுதியில்
உறைந்துவிட்டாய்

இயற்கையெனினும்
இயல்பாய்
ஏற்றுக்கொள்ள முடியாமலே
தவிக்கிரது தாளாத மனம்

எப்படி என்னைவிட்டு
போனாய் என்றே

நிகழ்வுகளை
கற்றுக்கொடுத்துவளே
நிமிடங்களை கடக்கும்
சக்தியும்

நீயே தா..

உயிர்தந்தவளே
உடனிரு எப்போதும்
நிழலாய்

ம்மா..........

அழகு நுகர்ந்து

அள்ளித் தழுவி
அழகு நுகர்ந்து

பறிக்காமல்
விடுகிறேன்
:
:
:

ஏங்கித் தவிக்கிறாய்

எதாவது செய் என்று ..

கனி"வாய் "

கனி"வாய் "
சிவக்கிறேன்

அடிக்கடி ....
உன் கனவில்

வலி நீக்கும் மொழியே


வழியே ஒளியே
வலி நீக்கும் மொழியே

தவமே அருளே
தவிக்கும் மனம் காப்பவளே

அன்னையே அரவிந்தமே
ஆகமபொருள் வேதமே

அழகுதிருவடிகள் ஆனந்த சமர்ப்பணம் பரமே.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ !!

பட்டணப் பொழைப்பில்


இனிப்பு கொடிக்காய்
மரமேறிப் பறித்து

நீட்டிய
முள்கிழித்த காயம்
அம்மாவிடம் மறைத்து

வெள்ளை விதை
வெளி வராமல்
உறித்து
மாடத்தில் வைத்து

விருந்தாளி வரவுக்கு
சகுனம் பார்த்த

காலமெல்லாம்

துவர்ந்த
கதையானது

மனுசர் அண்டாது
மறு ஜென்மமாகிப்போன

பட்டணப் பொழைப்பில்

சிந்தனை மனிதன்

நீண்ட கரிய கண்களில்
நீர் வழிய

தாயிடம் இருந்து பிரித்து
அழைத்து வந்து

விபூதி பட்டையுடன்
விலங்கிட்டு
கோல் குத்தி
வலி தந்து

கடவுளென
வணங்கி
வரம்கேட்பான்

சீர் கெட்ட
சிந்தனை மனிதன்

பொன்சிலை நீ

பெண் சிலை
தோற்கும்

பொன்சிலை நீ
கோவில் வந்தால்

உணர்வுக் குருடாகிறேன்

விழிகளில்
ஒட்டி

விலகி
செல்கிறாய்

உணர்வுக் குருடாகிறேன்

பழம் பருவம்

அவளை
நானாய் .......

பார்க்கும்
பழம் பருவம்

முதுமை

ஆரோவில் எனும் பொன்னிறகோளமே

உலகளந்த ஒளியே
அன்பெழுந்த வழியே

சமயம் கடந்த சமத்துவமே

சக்திஉறைந்த சன்னிதானமே

யோகங்களால் வளரும் வளமே

மதம் கடந்த மனிதமே

ஏகாந்தவாழ்வின் பூரணத்துவமே

அன்னைதந்த அருளே
ஆரோவில் எனும் பொன்னிறகோளமே

நின் ஒளிப்பாதையில் யோக சரணம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ ..!!!!!!!!!!

அங்கமெங்கும் அடுக்கு மல்லி

முத்தம் கொண்டு
தட்டுகிறாய்

அனுமதியில்லாமலே
இதழ் விரிக்கிறது

அங்கமெங்கும்
அடுக்கு மல்லி

கொஞ்சலாமே கொஞ்சம்

ஜன்னலோரம்
எட்டிப்பார்ப்பது

யார் வீட்டு
குழந்தையாகவே
இருக்கட்டுமே

கொஞ்சலாமே
கொஞ்சம்

யாழ் இரவாய்

வருவாய்
அணைப்பாய்
கதைப்பாய்

காத்திருக்கிரேன்

தேயும்
யாழ் இரவாய்

குப்பை மனம்

சில
பண முதலைகளில்

நிறைந்து வழிந்து

ஆணவமாய்
சிதறிக் கிடக்கும்

குப்பை மனம்

உன்னத அமைதியே போற்றி

உயர்வு வாழ்வு தரும்
உன்னத அமைதியே போற்றி

தனித்துவ மேன்மைதரும்
தத்துவ மேலாண்மையே போற்றி

அழைக்க ஓடி வரும் அமுதே
அன்னமே அன்னையே

தவிக்க காத்தருளும் பேருண்மையே

நின்வழித்திருப்பாதம் சரணம் சரணம்

பூரண பொன் அருளே

ஓம் மாத்ரேய நமஹ ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ ..!!!!!!!!!

காவல் தொடர்வாள்

விரல்உதறி
சென்றாலும்

விரித்த கரத்தோடு
காவல்
தொடர்வாள்

அன்னை

அக்னித் தமிழாய்

மீசை முறுக்கிய
மீள் திமிரே

மீண்டு வா
அக்னித் தமிழாய்

காத்திருக்கிறேன்
கண்ணம்மா

முந்தானை செண்பகமாகிறாய்

வாச வட்டமிட்டு

முந்தானை
செண்பகமாகிறாய்

மூச்சு முட்டுகிறது
இரவு

மவுனம் கற்றவன்

போதிமர
இலைகள்
உரசும் ஓசையில்

மவுனம் கற்றவன்
கெளதமன்

(து)வேஷமில்லை

திறமை போட்டியில்

பொறாமை

(து)வேஷமில்லை

காலப் பேரழகி

முகச் சுருக்கமும்
நரை கூந்தலும்

காலப் பேரழகி
ஆக்குகிறது

அம்மாவை

ஆண்மை வாசம்

நீ நட்டு சென்ற
மரம்
உதிர்க்கும் பூவில்

உதிராத
உன்
ஆண்மை வாசம்

வணங்க வேண்டும்

வணங்க வேண்டும்
இறையை

வன்கொடுமை
உலகை

பார்க்க வழியின்றி
வரம் வழங்கியமைக்கு

Tuesday 29 September 2015

ஆனந்த வழி நிறையே

அன்பு சுப நிறையே
ஆனந்த வழி நிறையே

சுகந்த முக்தியே
சுத்திகரிப்பு வழியே

சஞ்சல மனம் புகுந்து
சங்கடங்கள் நீக்கும் ஒளிநிறையே

ஓது பொருளே

மா சரணம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ !!!

அன்னை மொழியே

தவழ்ந்து
நடந்து

ஓடி
ஓய்வெடுத்து

சில வலி
சிரித்து

கண்ணீர் பொங்க
ஆனந்தித்து

தவித்து
தளர்த்தி
இளைப்பாறி

சுகித்து
சுமையிறக்கி

எழுதி துயில்கிறேனடி

அன்னை மொழியே

கண்ணீராய் வரமாகும்

காக்கும் கடவுளையும்
வெறுக்க வைக்கும்

கண்ணீராய்
வரமாகும்

கடும் சோதனைகள்

ராஜாளி மனசு

கண்ணுக்கு கண்
சொல்லுக்கு சொல்

என
கூர் ஆயுதம்
எடுக்கும்

ஆணவத்திமிர் கண்டு
கொதிக்கும்

ராஜாளி மனசு

செத்து செத்து பிழைத்து


நீயில்லாவிட்டால்
செத்து விடுவேன்

ஆதலால்

நீ வரும் வரை
தவிக்கிறேன்

செத்து செத்து
பிழைத்து ....

நம்பிக்கையென்பது யாதெனில்


நம்பிக்கையென்பது
யாதெனில்

வலியில் துடிக்கும்
போது

ஆறுதலாய் நீ தரும்

ஒரு விரல்

*புஷ்பாஞ்சலி*

ஆழ்மன பக்திக்கு தாமரை

செழுமை முன்னேற்றத்திற்கு செவ்வரளி

மலர்தல் மனத்திற்கு
மல்லிகை

மலர்களணைத்தும் மலரடியில் சமர்ப்பணம்

ஓம் நமோபகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ !!!!

வரலாற்று தடங்கள்


சிதிலமடைந்தாலும்
கம்பீரம் குலையாமல்

நிமிர்ந்து நின்னு
பெருமை பேசும்

வாழும்
வரலாற்று தடங்கள்

சரித்திர போர்மறவனுக்கு

சம எதிரி
மட்டுமில்லை

சமன் களமும்
முக்கியம்

சரித்திர
போர்மறவனுக்கு

பொய்யாமொழி ஆசான்

காற்றில் பரவும்
அலைவரிசையெங்கும்

அணுத்துகளாய்
வியப்பித்திருக்கான்

முக்காலம் வளைத்து
முச்சு தந்து

எக்காலமும் போற்ற
புகழ்பெற்று

ஈரடியில் உலகளந்து
மனிதவாழ்வுச் சூத்திரம் தந்த

நான்கு வேத சாத்திர
நற்றமிழ் பொதுமறை

பொய்யாமொழி ஆசான்
வானிறை வள்ளுவன்

குட்டி குடையை

தனக்கு கொடுக்கும்
குட்டி குடையை

தகப்பனுக்கும் சேர்த்து
பிடிக்கும்

அப்பா
தோள்சவாரி செய்யும்
குழந்தை

ம (னி)தம்

தாய்மை கரம்
கோர்த்தே
அலையும்

மனித வெறி சிக்காத

ம (னி)தம்

காத்திருப்பு

கசப்பு கவலை தந்தே

சந்தோஷ இனிப்பு
சுவையுணர்த்தும்

காத்திருப்பு

பசலையில்



பாசி படர்ந்து
தவிக்கிறேன்

நீயில்லா
பசலையில்

அன்று பாரதி

ஓடி விளையாடு பாப்பா
__அன்று பாரதி

உட்கார்ந்து விளையாடு பாப்பா
____இன்று கணிணி

செந்நீர் எழுத்தின்

மாவோ

புரட்சி மண்ணின்
வீரக் குருதி

"சே" எனும்
செந்நீர் எழுத்தின்

துணைக்கால் விகுதி

அந்தோ பரிதாபங்கள்

தெய்வத்தை
விடுதிக்கு அனுப்பிவிட்டு

தெருதெருவாய்
கோயில் அலையும்

அந்தோ பரிதாபங்கள்

மாக் கள் அறிவதில்லை

மரம் வெட்டும்
மாக் கள்
அறிவதில்லை

மழையை
வேரறுக்கிறோமென

லவகுசன்

லவகுசன் உடனிருந்தால்

அசோகவனத்திலும்
ஆனந்தமாயிருந்திருப்பாள்

ஸ்ரீ ராமன் மறந்து சீதை

ரத்தம் சுண்டிய முதுமை

ஏய்யா சாப்பிடு

வேணாம்டி

இந்தாய்யா
சாப்பிட்டு தொலை

அபத்தானே
நானும் நாலு பருக்கை
வாயிலே போட முடியுமென

வைது வைது வாயில
ஊட்டுவ
நான் பசியாறிய பின்னு
தான் உணவுண்ணும்
தாய்க் கிழவி

ஆண்டவனும்
ஆத்தாளும்

அவ உருவத்தில்
ஆவிபுகுந்து
வெகுநாளாச்சு போல

வேகப்போற காலத்துல தான்
வெட்டிபுழப்பு கட்டைக்கு புரியுது

பொண்டாட்டி அருமைய
உணர்ந்து மனம் கதறும்
பொன்னுசாமியா..

பாரினில் பல
ரத்தம் சுண்டிய முதுமை

ஆருயிர் ஆறுதல் நேசம்

வருத்தம் பிரியம்
கொஞ்சல் கோபம்

அணைத்துணர்வையும்

அளவின்றி கொட்ட

அனைவருக்கும்

வேண்டியுள்ளது

நம்பிக்கையாய் ஒரு

ஆருயிர் ஆறுதல் நேசம்

பூரண பூகோளமே

சேயென்று பிரியமாடி
தாயென்று அழைக்க

சோதனை களாய் தளர்த்துகிறாயே மா....

நெருங்கி அருகில் வர
நிகழ்வு துயர் தரும்

பூரண பூகோளமே

நினையின்றி வேறெதன்
நினைவு நானறியேனே

மா சரணம்

தாயே எங்கிருக்கிறாய்.....?

குழந்தை உறக்கம்
வேண்டும்

தாயே
எங்கிருக்கிறாய்.....?

இரவு நெகிழட்டும்

இன்
முகமணை

இரவு
நெகிழட்டும்

அடங்காத திமிர்

பதவியும் பணமும்
துணையாய்
இணை சேரும் போது

அதிகாரமாய்
அவதாரம் எடுக்கும்

அடங்காத திமிர்

ஆனந்த வளமையே போற்றி

அருள் வலிமையே போற்றி
ஆனந்த வளமையே போற்றி

ஒளி நேர்மையே போற்றி
ஓங்குபுகழ் சாநித்யமே போற்றி

காரியம் யாவிலும் துணை வரும் கருணையே போற்றி

கனிவு பாதுகாப்பாய் நிறையும் கருப்பொருளே

காதல் தாய்மையே
போற்றி போற்றி

ஓம் மாத்ரேய நமஹ ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ .!

சும்மா இருப்ப “”தாய்””

அதிகாலை எழுவாள்
ஆடு கன்று மாடு கவனித்து
அடுப்படியோடு
அலுக்காமல் மல்லுக்கட்டி

ஆண்டவ அறுபதும்
அனைவருக்கும் கையில்
எடுத்து கொடுத்து

பூமிய விட
வேகமா பொழுத சுழட்டும்
அவளை

என்ன செய்கிறாய் என

யாரு கேட்டாலும்
சொல்கிறாள்

சும்மா இருப்ப “”தாய்”””