Saturday 3 October 2015

அணைவுக்குள்


ஆதி மனுசியாகிறேன்

உன்

#சோதனை

ஒவ்வொரு முறையும்

வேரோடு தூக்கி
வேகமாய் கீழ் எறியும்

இயந்திரமாய் ஓடிஓடி


அதிகாலை பேப்பருடன் அப்பா.....
அன்றாட தோட்டவேலையில் தாத்தா
அடுப்படியில் வீட்டையாளும் அம்மா
பூஜையறையில் புண்ணியம் தேடும் பாட்டி

அமைதியாய் நிம்மதி வாழ்ந்த அனைவரும்

பட்டணத்து நாகரீகத்தில்
பதட்டத்துடன் 
இயந்திரமாய் ஓடிஓடி

இயல்பு மறந்து
தொலைந்து போனார்கள்

நேரமின்மையால்

சுடரே ஒளியே சூட்சமமே


அழகே அமுதே அற்புதமே
பொருளே வழியே பொற்பதமே

சுடரே ஒளியே சூட்சமமே
உயிரே உணர்வே உன்னதமே

தாயே சேயே தவமே
அம்மையே அன்னையே அழகு உருவே

கதி நீயென கருணை மலரடி சரணடைகிறோம்
தாய்மையே.......

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ ..!!!


































#மதம்பிடித்து

சிவன் வணங்கியே
சீதை தேடினான்
ராமன் 

என்பதறிந்தே 
சண்டையிட்டுக் கொள்கிறது

சைவமும் வைணவமும்

சாமக்கோடாங்கி

சாதரண 
வேட்டி சட்டையில்
சத்தமில்லாமல் வந்தாலும்

சற்று பயமுறுத்தியே
செல்வார்

பிரியமாடும் கலைமகள்

கலையும் எழிலும்
காதலுடன் போட்டியிட்டு
கிறங்கவைக்கும்
தாய்மொழிவளமையை
தன்னிகர் பெயரென கொண்டு

பிரியமாடும் கலைமகள் 
கவிதாவிற்கு Kavitha Pillai

இனிய வாழ்த்துக்கள்

செம்மொழியை நித்தம் தொட்டு
நிகழ்வுபண்பேந்தி அமுதூட்டும் 
ஆசிரியையான 
தாங்கள்.....

அத்திருமொழிபோல்..அவனிவென்று 
வாழ்க வாழிய பல்லாண்டு பல்லாண்டு

இனிய வாழ்த்துக்கள் தோழி.

பாச மனசுக்கு

பார்த்தவுடன் தாவும்
பாச மனசுக்கு

சட்டென்று
மன்னித்து மறக்க 
தெரிவதில்லை

மழலை போல்

தாய் சேரும் சேய்

ஆழத்தோண்டி
மண்ணுக்குள்
புதைத்தாலும்

தடம் பார்த்து
தாய் சேரும்
சேய்

#கடல்ஆமை

வறுமை தைக்க

வலை தைக்க 
அறிந்து

வறுமை தைக்க
அறியாதவன்

பறக்க விடுகிறாய்

முத்தமிட்டு 
பறக்க விடுகிறாய்

கவனமாய் கழற்றி 
வருகிறது.....காற்று

இதழ்களையும்

புஷ்பாஞ்சலி


பக்திநிறை அருளுக்கு பவித்திர துளசி
சக்தி முன்னேற்றத்திற்கு மஞ்சள்செவ்வந்தி

செல்வம் தரும் வளமைக்கு நாகலிங்க பூ
மணம்நிறை வாழ்வுக்கு கனகாம்பரம் 

தெய்வ சித்தம் தர வெண்தாமரை பூ
அவதார மேன்மைக்கு செந்தாமரைப் பூ

நீடித்த வாழ்விற்கு வாடாமல்லி
மனதின் தெம்பு வழங்க துலுக்க சாமந்தி

மனநிறை அமைதிக்கு வெண் செவ்வந்தி
தவறை நேர்செய்ய செவ்வரளி

சரணாகதி பிரியத்திற்கு இளஞ்சிவப்பு ரோஜா

அன்னைஉன் மலரடிகளில் 
ஆனந்த சமர்ப்பணம்

மா ....சரணம்

ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி பரமே..!!!!!!!!!!

வலி முடிச்சிடுகிறேன்

ஈடில்லாத நேசத்தை
இணையில்லாது வழங்கி
தாய்மையென 
நினைவுசிலிர்க்க

கடமைக்கு செய் 
போதுமென்றே
செயலுரைக்கிறாய்

துவர்ப்பு புன்னகையுடன்
வலி முடிச்சிடுகிறேன்

நேசக் கருகலைந்து

தாய்மொழி நீ

தழுவியணைத்து

தவிப்படக்கும்
தாய்மொழி 
நீ 

அன் பூ கண்டு

ஒத்தைப் பூ
கொடுக்கும் போதெல்லாம்
மறுத்து

கொத்தோடு கொடுக்கும் போது
வாங்கிக் கொள்கிறாய்

சூடும் வயது கடந்து

இளமை 
மலர்கள் சிரிக்குதடி

பழுத்த நேசத்தில்

பருவங் கனியும்
அன் பூ கண்டு

மணமாய் நகரும்

மணித்துளிகள்
மணமாய் நகரும்

நீ முத்தமிட்ட
நொடியிலிருந்து....

பிரம்மனுக்கு நன்றி.....

பிடறி தட்டி
வீழ்கிறேன்

உன்...பின்
வளை பேரெழிலில்

:
:
:
ஓவியமெனினும்
உணர்வுக்குப்பை கிளறிவிடும் கிளியழகே.....

உனதழகில் மோட்சம் தர
பிறவிக்குருடனாய்
படைக்காதிருந்த
பிரம்மனுக்கு நன்றி.....

தோள் சுமந்தவர் நீர்


உன் போன்ற அண்ணனை அறிந்தவள்நான்

என் போன்ற தங்கையை
தோள் சுமந்தவர் நீர்

ஆதலால்
அன்பிலிருக்கிறோம்

ஒரு தாய் வயிற்றில் பிறக்காமலும்

காத்தருள்க தாய்மைகளே....

அன்புவேத ஆகம வளமையே

பண்பு குணநலன் வழங்கும்
வல்லமையே

பாச பொருள்நிறை பவித்திர தூய்மையே

சுத்த மனம்தரும் சுகந்த நேர்மையே

காரியசித்தி வழங்கும்
கனிமன பிரள்யமே

பிரபஞ்சங்கள் காக்க வந்த
பிரதான விந்தையே

சுபிட்ச தினத்தில் சுடரேற்றி
ஸ்ரீஅன்னைஅரவிந்த மடி சரணடைகிறோம்

காத்தருள்க தாய்மைகளே....

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ ..

வாழ்தலின் நிமிடங்கள்

எதற்கெடுத்தாலும் 
குறை சொல்லும்
உன்னிடம்

என்ன சொல்வது
எப்படிச் சொல்வது

என்ற 
நினைவுக் குழப்பத்திலேயே
கழிகிறது

நமக்கான
வாழ்தலின் நிமிடங்கள்

என்றும் பதினாறாய்

என்றும் பதினாறாய்
மனதிலிருப்பாள்

கல்யாணம் செய்து 
கொள்ள முடியாத 

காதலி

இதழ் பாய் கொடு



இளைப்பாற வேண்டும்
இதழ் பாய் கொடு

வறுமை கரங்கள்

வள்ளல் கரம்

நோக்கியே
நீளூம்

வறுமை கரங்கள்

கனிகுறும்பு சிங்கங்கள்

நீ தான் 
காரணமென
அடுப்படி வேலை
இருக்கும் போதெல்லாம்

அழைத்து 
தலையமர்த்தி செல்கிறாள்

சுகமென்ற ருசிக்கனமாய்
தித்திக்கின்றனர்

கனிகுறும்பு
சிங்கங்கள்

அரிசிப் பல்லழகி

கர கர
மொறு மொறு வென
மழைநாளில்

கார இதமாய் 
இருக்கிறது

அரிசிப் பல்லழகியின்
கூழ் வடக கோபம்

சாளர மழைத்துளி யாய்

சாளர மழைத்துளி யாய்
வழியும் மனம்

நினைவு அனலாய்
நிகழ்வு குளிர்ந்து

நீயில்லாமல்

அன்புநிறை பொற்பதமே

தாமிர ஒளி சுடரே போற்றி
தன்னாளுமை யோக வழியே போற்றி

விடியலாய் வந்த வேதமே போற்றி
அமைதி தரும் ஆனந்தமே போற்றி

அன்புநிறை பொற்பதமே
அழைக்க ஓடி வந்து அணைத்து காக்கும் தாய்மைகளே

தேவையானதை ...தேவைப்படும் நிமிடங்களில் தரும் விடியலே.....

தன்னிகரில்லா 
தனித்துவ மேன்மைகளே

சரணம் சரணம் கமலபொற்பாதங்கள் ஆனந்த சரணம்

ஓம் மாத்ரேய நமஹ ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!

நிழல் உயிராய்

அவருக்கான 
நாற்காலியில்
கம்பீரம்
அமர்ந்திருக்கிறார்

இறந்ததாய் சொல்லும்
தாத்தா...

நிழல் உயிராய்

பைத்தியமென்று


உன்னைத்தவிர
வேறு நினைப்பின்றி 
அலைய

நீ உட்பட
அனைவரும் 
சொல்லினர்

பைத்தியமென்று

சலங்கை மகள்






நெளிந்த வாழ்க்கை தந்த
குழைந்த திமிர் பரிசு

ஜல் ஜல்
சலங்கை மகள்

நம்பிக்கை ஊசலாடும் மகவு

ஒய்யாரக் கழியில்
பிள்ளை ஏற்றி
ஒரு சாண் வயிற்றுக்கு
வீதியெங்கும்
வித்தை காட்டினான்

பாவமென்று
பல பார்வை பரிதாபம்
பேசிய போதும்

பயமென்பது அறியாது

காப்பான் தகப்பனென்று
நம்பிக்கை ஊசலாடும் மகவு