Saturday, 15 November 2014

HAPPY BIRTHDAY 2 U

HAPPY BIRTHDAY 2 U ....John Mohan...

வெண்குடை வானம்
கீழிறங்கி வந்து

பனி போர்வைகொண்டு
பூமியை மூடு
மாதத்தில்.....

குளிரெடுக்கும்
பூக்கள்...
குலவை போட்டு
பூபாளம் பாட

இறைதூதனின்
வருகையை
காத்திருந்து வாழ்த்த

ஈரைந்து நாட்களுக்குமுன்
வையகம் வந்த
விடிவெள்ளியே

அழுதுகொண்டே பிறந்து
சிரித்துக் கொண்டே
வாழும் அருமை தோழனே

வெற்றிகள் பல கண்டு
எதிரிகளையும் தோழமையாக்கி
மகிழ்ச்சிவேர்கள் பதியனிட்டு
புன் நகைச் செழிப்புடன்
வாழ்க பல்லாண்டு..

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..