Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள். Show all posts

Thursday, 30 July 2015

தவறு தான்..............தப்பு இல்லை

தவறு தான்..............தப்பு இல்லை

தீர்ப்பு நியாயமானது எனினும்
தண்டணை யோசிக்க வைக்கிறது

வெளி இருப்பவர்கள் எவரும்
உத்தமரில்லை எனும் போது
தவிர்த்திருக்கலாம் .....
ஓர் சாதனைப் பெண்மைணியின்
அரசியல் முடக்கத்தை....

தனிஒரு மனுசியாய்.....
எதிர்படும் வல்லூறுகள்
எதிர்த்து மோதி தப்பித்து

எஃகின் தன்மையாய் இறுகி
இரும்பு மனிதமாய் உருவான பெண்மை

முதல் வெற்றி போதையில்....

பசித்தவனுக்கு கிடைத்த
அமுத ஆளுமையில்
பதறி உண்டதே......
கீழ் சிந்தி மேல் வழிந்து ....
விலங்கிட்டது...இன்று

எதிரிகளும்..வியக்கும் துணிச்சலில்
எள்ளி நகையாடிய போதும் கலங்காமல்

சீர் கொண்டு வீறு எழுந்த பெண்மை

பிறக்கும் போது அறிந்தோமா..?
வளரும் போது உணர்ந்தோமா..?

வாழ வாழ தானே
அனுபவம் சொல்கிறது வாழ்க்கையை

அம்மு அம்மு என்று
அறிந்தோர் கொஞ்ச

அம்மா அம்மா என்று
தெரிந்தோர் கெஞ்ச....

பெண்சிங்கமாய் தன்னை தானே
சிலை வடித்துக் கொண்ட ..பேரழகு சிற்பி

நடுநிலையாளன் பார்வையில்

விடுதலை என்பது வெற்றியுமில்லை
தண்டனை என்பது வீழ்ச்சியுமில்லை
எனும் பக்குவத்தை ..நிச்சயம்
நிதர்சனம் உணர்ந்திருப்பார்கள்

போராட்ட வாழ்வை விரும்பி
தோள் அணைத்தவர்கள்

துணிவில்..அறிவில்..
அழகில் ..ஆளுமையில்

தனக்கென தனியிடம் எடுத்து
பெண்மையின் முன்னோடியாய்
திகழ்ந்த முதன்மையே

சவாலை சாதனையாக்கும்
சரித்திரமே....

இஃதும்
உம் மானுடப்பிறவியில்
இன்னுமோர் மைல்கல்லே....!!!!!!!!!!

Saturday, 25 July 2015

”””பாகுபலி ”””........சிலிர்க்க வைக்கும் கம்பீரத்திமிர்



”””பாகுபலி ”””........சிலிர்க்க வைக்கும் கம்பீரத்திமிர்
******************************************************************************

மனித பலத்தை மண்ணோர்க்கு சொல்லும்
வியத்தகு .....வீர எழுச்சி

படத்தின் பலமே .......திரிசூல வியூகமாய்

இயக்கம் ..ஒளிப்பதிவு.....நடிப்பெனும்
மும்முனை தாக்குதலாய்.......
பிரமாண்டமெழுப்பி ....சிலிர்த்து
நுனி சீட்டு அமரவைக்கிறது

வீர குல மற மக்களை

இயக்கம்...
****************
இதிகாசங்களும்..புராணங்களும்...வீரர்களும்
மாடமாளிகைகளும்...மன்னர்களும்...அமைச்சுகளும்
செங்கோல் ஆட்சியுமாய்...மனக் கண்முன் நடமாட விட்டு...........
படம் அல்ல இஃது.....பாடம் சொல்லும் நம் வரலாற்று மிச்சம் என நேர்த்தியமைச்சு இருக்கிறார்..இயக்குநர் ராஜமெளலி....எந்த ஒரு காட்சியிலும் தன்னில் தானே சமனாகாமல்...மிஞ்சவே நினைத்து சாதிச்சும் இருக்கிறார்............

எம் மண்ணிலும்..எம் வரலாறு வாழ்ந்த அடையாளம் காட்ட..இருக்கிறார்...ஒருவர் என்னும் நீங்கா கல்வெட்டாய்......நீர்

ஒளிப்பதிவு
******************
அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியா...இத்தனை எழுச்சியாய்...எழில் ஒளிர்வாய் .....கொஞ்சும் பிள்ளை அழகாய்....வழியவிட முடியுமா...........அருகிருந்து பார்த்த போது ....பயமுறுத்திய அழகு இங்கு எப்படி இத்தனை பாசம் கொஞ்சுது...சபாஷ் செந்தில் குமார்

அழகை அழகுற,,,அதனினும் எழிலுற

வீரத்தை மாண்புற....விழிகளில் மேன்மையுற
இரத்தமும் சதையுமான ...வீர மற போர்களத்தை
கலிங்கத்துப்பரணியின் களமென

இயக்குனரின் வலக்கரமாய்...வந்தமைகிறது
முத்தென ஒளிரும் மூன்றாம் கண்
ஒளி வழி ஒலியாளுகிறார் ,,செந்தில்

நடிகர்கள்
**************
ரம்யாகிருஷ்ணன்...சிவகாமி நாச்சியாய்....நீலாம்பரிக்கு மீண்டும் ஓர் மணிமகுடம் ...விழிதெறிக்கும் அனலோடு
வீர விளைநில ராஜ மாதாவாய்...

சத்யராஜ்...கட்டப்பாவாக.......விசுவாச வீர தளபதியாக
வாழ்ந்திருக்கிறார்,,,,தன் அடையாளங்களை தள்ளி வைத்து...........20 ஆண்டுக்கு முன் வரும் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் இளமைப் படுத்தியிருக்கலாம்
நம் திமிரோனை

நாசர்,,,,வழக்கம் போல் ...அரசாளும் சூட்சிவியூகம் அட்டகாச அசால்டாக

பிரபாஸ்.........பாகுபலி.........ஹீரோ......
மண் வாழ்ந்த மற வீரனுக்கோர்
மன்னனுக்கோர் அடையாளமாய்....
தீரனுக்கோர் ..வீரமும் கனிவும் நெஞ்சுரமும்...எம் ராஜராஜன் இப்படித்தான் இங்கு தஞ்சையாண்டிருப்பானோ என் றே வலியுறுத்துகிறார்

ராணா,,,,,,,,,,,,எதிராளும் வீரத்திமிர்...........சுத்த வீரனும் தோல்வியாள்கிறான் ..பதவியெனும் பேராசை பிடியில்
என்பதற்கோர் அடையாளம்

தமன்னா.........அட டா மழைக்கு ஆடிய அழகியா..இத்தனை பேரழகியா மாறிடுச்சு
அட டா

பனியும் பொன்னும் குழைத்து வழித்த தேகமாய்
மின்னுது தக தக நு.....அம்மிணி...கனமான குரலில் கோபம் கொல்லும் விழியும் ..பேரழகு

காலகேயராக ..பிரபாகர்....
பிணந்திண்னி அரக்க வம்ச ஆளுமையாய்

இசையாய்..மரகதமணி..வசனமாய்..மதன் கார்க்கி...கிராபிக்ஸா...ஸ்ரீநிவாசன்.....செட்டிங்க்ஸ் ஆ..சாபுசிரில்......என
எல்லோரும் வாழ்ந்திருக்கிறார்கள் ..கதையோடு..கதை மிஞ்சாமல்..இயக்கநர் வழிதரும் வலியோடு

பாகுபலி...என்றேனும் குரல் எழும்போதெல்லாம்
உதிரம் சூடேற்றி புல்லரிக்க வைக்கிறார் ..இயக்குநர்

வியக்கவைப்பது பிரமாண்டமும்..பிண்ணனி இசை..ஒளிப்பதிவு எனில்

சிலிர்க்க வைக்கிரது....இயல்பாய் இதயம் எகிர வைக்கும் வீரமும் துணிச்சலும்

படம் முடிந்தது...என்று...விளக்குகள் போட்டபின்னும்
அவ்வளவு தானா...முதல் பார்ட்டா.....இன்னும் இருக்கா
இரண்டாவது இடைவேளையா ...

என்று எழ விடாமல் சீட்டில் மக்களை அமர வைத்திருப்பது ....மகத்தான சாதனை வெற்றி

சரித்திரங்கள் என்பதே நீண்ட வாழ்வியல் தானே
அடக்கிவிட முடியுமா வெறும் 180 நிமிடங்களில்

நீண்ட நாள் பின் தியேட்டரில் 3மணி நேரம் ...வர மனமில்லாமல் ...வசித்த அனுபவம்

பிரமாண்ட சாதனை வெற்றி....

இந்தியனின் வாழ்வடையாள கம்பீரத்திமிர் ....பாகுபலி

Monday, 6 July 2015

திமிரெழுந்த தியாக திருமகன்

காக்கி உடுப்பேந்தி
கவசகுண்டல விழி சிவப்புடன்
ஆச பாச ஈரம் துடைத்து

ஊசியென உடல் குத்தும்
வெயில் பனி கொடுமை
வெந்து உருகி தனிந்து

வீறு கொண்டு
நெஞ்சு நிமிர்த்தி
வியர்வை வழிய வலிநின்று

ருசி மறந்து பசி உண்டு
கிடைத்த இடம் படுத்து

உறக்கம் மறந்து காத்து
குடும்ப நினைவு புறந்தள்ளி

உயிர் நிம்மதி தரும்

சக்தியெழு மலைமகளின்
வீர வழி மறவனாகி

திமிரெழுந்த தியாக திருமகன்களையே

வான் வெள்ளை காகித
எங்கோ ஒர் கரும்புள்ளி
ஊழல்மேகங்களையே உற்றுநோக்கி
உவகைகேலியிட்டு
உள்ளம் மகிழும் சிறுமையாகிறோம்

அரண் எழுந்த காவல்துறை
அருமை பெருமை போற்ற மறந்த
பேதையான நாம்

Wednesday, 1 July 2015

ஓவி & கவி

உணர்ச்சிவயப்படாமல்
உணர்வை கொட்டி

உணர்வு தூண்டி
பந்தாடும்
வல்லமை வாய்த்த
இருவர்

ஓவி & கவி

Thursday, 25 June 2015


ஆடல்குல மரபாய்


ஊர் மெச்சும் உலக அழகியவள்

கால் கொண்டு தெரு இறங்கினால்
வீதி ஆண்மையெல்லாம்
வியர்த்துதவிக்கும்

அரசன் முதல் ஆண்டி வரை
உறங்கா அவளிரவு விரும்ப

ஆடல்குல மரபாய்
அனைவரிலும் துயில் துய்த்தாள்
அப்பெரும் அழகு கிழத்தி

பொன்னும் பொருளுமாய்
குவிந்த பொக்கிஷம்
இளமையோடு ..இரையாக

சுற்றிய வண்டுகள் ...
வற்றிய மதுகண்டு
மாற்று கேணி தேட

உளுத்து போன உடலில்
மிச்சமாய் தேங்கியது

பலர் கொஞ்சிய
சுருக்க உதட்டு மேல்மச்சமே

ஊரை உறங்க வைத்தவளின்

இமைமூடா இரவை

தாலாட்டி கையேந்த.இன்று
அம் மகனும் இல்லை

எம்மானும் இல்லை.....

மயானம் நோக்கியே
வழி காட்டுகிறது

பலர் நைத்து பரிசளித்த
மரண வழி தேகநோய் பாதைகள்..!!!

Sunday, 21 June 2015

மண்நிறைய விதையிட்டு

மண்நிறைய விதையிட்டு
களம்நிறை அறுவடை குமித்து

கைநிறை அள்ளி
மரக்காநிறை போட்டு
மச்சுநிறைய மூட்டை குமித்த

விவசாயக் கதையை
பேரன் தூங்க..பெருமைதட்டி சொல்லி

வலிக்கும்
தன்நெஞ்சு நீவிக் கொள்கிறார்

வானம் பொய்த்த புழைப்பில்
மானம் காக்க

கட்டிடகாரனிடம் கழனிவித்த
கந்தய்யா அப்புச்சி

Tuesday, 16 June 2015

தானெனும் தன்நம்பிக்கை

சுற்றியெங்கும் இருள்சூழ
மெல்லிய நிலவொளியில்

அத்துவான கடலில்
அவன் பயணித்திருந்தான்

அசைந்தாடும் படகு போலே
உள்மனமும் இலக்கின்றி

தொடர்ந்த கடன் சுமையும்
தோல்வியடைந்த வாழ்க்கை வதையும்

அவனை மரணிக்கச் செய்திருந்தன

மாளிகை நீள்வீடுசொந்தம் முதல்
மனைவியென்று உயிரணைத்தவள் வரை
அத்தனையும் சுயநலத்தின் பிம்பமாய்

ஓடிஓடி சம்பாரித்தவனை
ஓயும் வரை துரத்திக்கொண்டே இருந்தனர்

ஒவ்வொரு உறவினராய்
கண்மூடி யாசிக்கையில்
கடைசி எஞ்சியது ........கழிவிரக்க துரோகமே

சலிப்பாய் சயணித்திருக்க
சட்டென ஒளிவெள்ள சிறகு வீசி
வானிறங்கியது
ஓரு நட்சத்திர தேவதை

கைபிடித்து..தலைகலைத்து
செல்லமூக்குரசி...மெல்ல நெற்றியிடித்து
தோள்சாய்ந்து சுகந்தபடுத்தி
தோல்வியேது உனக்கு
துவளாதே ராஜகுமாரா

விடியும் வரை என்னிரவு உனது என்றது
மென்மையில் கிறங்கி
தாயென கண்டு தன்னவள் என்று
இறுக்கி ..முத்தமிட முகிழித்தி
இருந்துவிடு என்னோடே .....
கட்டிக் கொண்டு தூங்கி கெஞ்சி
துஞ்சியது ஈங்கணோர் நெஞ்சு

மெல்லசிரித்த தேவதை..மென்காதில்
மென்பிரியமாய் உரைத்து நகைத்தது

நான் யார் தெரியுமா?

உன்னுள்ளே உன்னில் உயிராய்
மானம் விழிக்கும் தன்னம்பிக்கை தேவி

மனிதர் தன்னலம் கண்டு
என்னில் நீ சலித்து தோற்கலாமா

தலைசிலுப்பி தன்னருமை உணர்ந்தவன்
தன்மையாய் புரிந்தான்

தானெனும் தன்நம்பிக்கை இறகுயிர் உடனிருக்க
என்றும் தனிமை தனக்கில்லையென

வியாபார கல்வி வணிகம்

கொட்டி கொடுத்த
பின்னே

உயர்பள்ளி சொர்க்கவாசல்
ஓசையின்றி திறக்குது..

வியாபார கல்வி வணிகத்தில்

நிதியுதவி விண்ணப்பமேந்தி
இனி

பால்வாடி பாலகனும்
வங்கி வாசலில்..

ஆளுமைமரணம்


வீதியெங்கும் இரைந்து கிடக்கிறது
அவரை வழியனுப்பி வைத்த பூக்கள்

தூக்கிசுமந்தோர் அமைதியாக செல்ல
பின் தொடர்ந்த சிலரில்

அதற்குள்ளா
அற்தமானவராச்சே ...

குணமிருந்தாலும்
குறையுடையவராச்சே

நோயில் பாயில் படுக்கவைக்காமல்
அழைத்து போய்விட்டான்...

என்றே
தனக்கறிந்த அவரைபற்றி
பிதற்றி செல்ல

துணை நடக்கும்
அனைவர் மனதிலும்
அனுமதியில்லா பீதியாய்
ஏறி சிம்மாசனமிடுகிறது

நமக்கு எப்போ ??

கேள்விக் குறியுடன்
பாசக் கயிறு தேவனின்

அச்சுறுத்தும்
ஆளுமைமரணம்

Saturday, 13 June 2015

வலிசுமந்த குழந்தை

பாரெங்கும் பரந்து விரிந்துள்ளது
வல்லரசு நாட்டின் வறுமை சாதனை
வலிசுமந்த குழந்தை தொழிலாளியாய்

வாய்விட்டு அழக் கூட திரணியற்று
சொட்டும் கண்ணீர் கல் சேமித்து
கனமாகும் பாறை மனது

படைத்தவன் குற்றமா
பிறந்தவன் குற்றமா
பார்க்க மறந்தவன் பழிபாவமா

ஏதென்று சொல்ல இயலாமலே
நிலமெங்கும் விதைந்து வருகிறது
நிமிர் மனித வர்க்கத்தின் ...சோக திமிர்

உருப்படியில்லா தகப்பன்
உருத்தெரியாமல் அழிந்துகொண்டிருக்கும் தாய்
வரிசையாய் வந்து பிறந்த தமைய உறவுகள்
வாழ வழியில்லா வலிவாழ்வு ...தான்
காராணி பிறப்பிடங்களா

குறுக்குவழி பணக்காரனும் ஓர்
பகுமான காரணி தானே இந்த
பழிபாவத்துக்கு

தீர்வென்ன தீர்ப்பென்ன..இந்நிலை மாற

வேகும் பிஞ்சுகளில் வெக்கை வாழ்வு வலி
நினைத்தாலே பதறுகிறது
கருவணைக்கும் தாய்மை

ராஜாகுட்டி ..செல்ல மகராணி எனும்
கொஞ்சல் எல்லாம் கோடை மழையாகி
வற்றி வெடித்து விடிகிறதே வாழ்வுநிலத்தில்

பிச்சையிட வேண்டாம் ...கல்வியிட வேண்டாம்
அரசு கவனிக்கும் என்று
கவனம் கடக்க வேண்டாம்

எங்கேனும் ஓர் குழந்தையை
தொழிலாளியாய் கண்டால்

நம் பிள்ளை நாத்தென ..
வேர்தழைக்க.......கைபிடித்து
அழைத்துச் செல்வோமே
நம்மாலான சமுதயா நீரூற்றி

வரப்பிரசாதி மாரி

பசங்க முதல்
பாட்டையா வரை

ஊர் பகை விலக்கி
உற்சாகமாய்
தேரிழுக்கவே

ஆட்டமாடி
பூக்குழி இறங்குறா

வருசம் ஒருமுறை
வரப்பிரசாதி மாரி

Tuesday, 26 May 2015

ஈன்ற இந்நாளை இனிதே நினைவுகூர்ந்து

இறைத்தமிழ்வேந்தரின் இரா. குமார்...சிவத்தமிழ் திருவிழாவின் ..
ஓராண்டு..நிறைவுப் பெருநாள்

ஆண்டொன்று ஆகிவிட்டதா.....
தில்லையம்பலத்தில் சிவனவன் திருவிழா கண்டு....

மொழியும் மொழி வளமையும் ஒருங்கே சலங்கை கட்டி
புத்தகமாய்...இசையாய்...சிவன் அழைக்க

மடாதிபதிகள் பெருமையாய்...மரகத மாணிக்க..மொழி முடிசூட
மதம் கடந்து ..திரு அப்துல் காதர் அய்யா குரல்வளமையில்

இரும்பென மனம் படைத்து...தீரத் திமிராய் வீற்றிருக்கும்
எங்கள் ஆசானை.... நெகிழச்செய்து.....அரங்கெங்கும் அசையாமல் அமர ...........

நானும் ஓர் அங்கமாய்..அங்கிருக்க..அணுஅணுவாய் இறங்கியது..அனலாய் சிவ ஒளிப்பிழம்பு

திருமதி செல்லி ஸ்ரீநிவாசன்...தன் அமுதுகுரலில் ..நிகழ்வு தொகுத்தளிக்க ........Chelli Sreenivasan

வாசிக்க வாசிக்க ஊண் உருக்கி............
நினைத்தாலே இனிக்கும் சிவவாசகம்,இசையரசி. Girija Hariharan
.திருமதி கிரிஜா ஹரிஹரன்..இன்னிசைகுரலில்..அறிமுகமாய் என் மொழியில் இசைத்தகடு ஒலிக்க .....தொடர்ந்து...அவர்தம் தேனிமை குரலில்...தெள்ளமுது..மொழி இசைப் பாடலாய்........அரங்கேறி ஒலிக்க....

மெய்மறந்து அமர்ந்தது...சிவமும் ..அங்கே சவமாய்.........

ஆண்டு பலவாகினும்...சவகாட்டு சிவனிடம் சென்று....ஆயுள்வேகும் வரை..என்றுமே
மறக்கமுடியா தெய்வீக அருள்விழா....

நினைவுமொழி எழுதும் போது ..சிலிர்க்கிறது....
சிந்தையும் மெய்யும்.....

அன்பு அருள் பாசபெருநிகழ்வை......ஈன்ற இந்நாளை
இனிதே நினைவுகூர்ந்து ...தாய்மை பூரிக்கிறேன் ..பெருமைநிறைவாய்

https://www.facebook.com/photo.php?fbid=710691395661544&set=t.1256619171&type=3&theater

வந்திருந்தவர்களை..மனம் நினைத்து வாழ்த்தி மகிழ்ந்தவர்களை..நெஞ்ச நன்றியோடணைத்து....

அனைவரும் சிவனருள் பெற்று ஆரோக்கியம் வாழ

ஓம் நமச்சிவாய...சிவாய நமஓம்..........!!!!!!!

அரியணை ஏறுகிறது ..அரும் சாதனை பெண்மை....

அரியாசனம் ஏறும் அரும் சாதனை....

வந்த தடைகளை தகர்த்தெறிந்து

வாழ்ந்த அனுபவங்களை கற்றுத் தெளிந்து

வாழ்நாள் சாதனையாய்.....
வாழ் நிமிடங்கள் துணிச்சலாய்

வாழ்பிறவி சவாலாய்
வாழ் மக்கள் மனம் குளிர

அரியணை ஏறுகிறது ..அரும் சாதனை பெண்மை....

தமிழ் கற்றோரும் சொல்வளமை பெற்றோரும்
திராவிட வழிப் பாரம்பரியமும்
காளைமாடென கைவிரித்து
தேசியம் ஆண்ட பரம்பரையும்

நாடாள விதியெழுத
நிகழ்வு மாற்றி.....
நிதர்சனம் கண்டு
திரையெழுந்த வெற்றியை
அறிமுகமாக்கி....களமிறங்கியது
அன்றைய....இரு வித்திலை...வெற்றி இலை

மக்கள் திலகம் ஆசியுடன்
மக்கள் தம் ஏகோபித்த ஆதரவுடன்.....

மக்களின் முதல்வராய்
வெகுண்டெழும்

சோதனைகள் பல வென்ற
சாதனை பிழம்பே

சிம்மாசனம் ஏறும் சிம்ம வாகினியே....

கல்லடி சொல்லடி பல பட்டாலும்..காய்த்து கனிந்து
பசிநீக்கும் தாய்மை மரமாய்
தரணி எழுந்த கற்பகத்தருவே

வெற்றியின் பெயரை வேரணைத்த நீர்

வளர்ச்சியின் பாதையில்
வண்ணபூங்காத் தமிழகம் அமைக்க

வாழ்த்தி வணங்கி
வரவேற்று மகிழ்கிறோம்...

சரித்திரம் போற்றும்
சாதனை பெண்மணியே

வரலாறு வெல்லட்டும்
உம் வாழ் நாள் துணிச்சல்
வெற்றி புகழ்....

கல்வெட்டாய் நிலைபெற்று நீடிக்கட்டும் .....
உம் போராட்ட பெரும் காவிய பிறவிப்பயன்

வாழ்க வளர்க தமிழகம்

உம் விழி வழி ஆட்சிப் பாதையில்......!!!!!

வாழ்த்துக்கள் அம்மா..!!!

பாவ மாளிகைகள்..!!!


கோட்டான்கள் முழித்து
இரவு நாய் ஓலமிட்டு

வெளவால்கள் வட்டமிட

மடமடவென...சரிந்து
மண் சவக் காடாகிறது

துரோகிகள் சதிராடி

நேர்மையாளனை வருத்தும்

பண சேமிப்பு
பாவ மாளிகைகள்..!!!

Tuesday, 19 May 2015

மீண்டும் மீளா.. களப்பலி காண..

விதைத்தவன்
விதையெழுந்தவன்
விதையானவன்

விதைந்தான்

உண்டு ருசிக்கும் முன்
அறுவடை களத்திலேயே

தின்று செமித்த
தரித்தரமே

சரித்திரங்களுக்குஎன்றும் சாவில்லை....

உயிர்த்தெழுவான்
ஈழ தேவன்.....

அகதி அகதியென
மார்அடித்து கதறும்
தாய்மை கருப்பை எங்கும்

உரு சேரும்......அணுத்துகளாய்

ஒளியேந்தி வருவான்
புலிக் கொடி புத்தமகன்

ஓலமேந்தி ஒப்பாரி
வைக்க கூட....
ஒரு துகளின்றி ....
உமைச் சூறையாடா....

காத்திரு சிங்களமே
எம் கரிகால சோழனிடம்

மீண்டும் மீளா..
களப்பலி காண...

கொதி மன உலைகளம்


தோண்டிப் புதைத்தாலும்
அடக்க மறுக்கிறது
தொப்புள்கொடி அறுந்த வேதனை

முள்ளிவாய்கால் காற்றெங்கும்
கழுகளின் சுவாசம் ருசிக்கும்
கனத்த பிணவாடை

செத்ததைவிட
செய்வதறியாது திகைத்து
அனாதை வலி கிடக்கும்
மனிதன் மனம் பிசைகிறான்

ஒரு சரித்திரத்தை வீழ்த்தி விட்டு
தரித்திரம் ஆள்கிறது
மண்பிடி சாபம்

பார்த்து கேட்டு...எத்தனை கடந்தாலும்
எங்கோ ஒரு நினைவு
படமாய் மொழியாய் தட்ட

கையறுநிலை,,,கண்ணீர் குருதியாய் வடிய
அத்தனை எளிதாய்
கடந்துதான் விட முடியவில்லை

ஈழத் தமிழனின்
கொதி மன உலைகளத்தை

Tuesday, 12 May 2015

வெற்றியணைக்கிறது

வெற்றியணைக்கிறது.....வெற்றிச்சின்னம்

சிம்மவாகினியின்..சிகர வெற்றி
மைல்கல்லாய்...மையம் குவிக்கும் வெற்றி

பதினெட்டு ஆண்டுகளாக
பங்குகுலைத்த நிம்மதி
பாராளும் வெற்றியாய்

சோதனைகள் இனி இல்லை தலைவி
உம் தம் சாதனைப் பாதையில்

விட்டுவிட்டுத் துடித்த
தமிழக இதயம்...இப்போது
தாளாத சந்தோஷமாய்

அமைதிபாதையில் இன்னும்
உமது பிறவி சாதனைகள்
சிங்க ஆளுமையாய்

சிகரமேறி தொடர

ஆனந்த வாழ்த்துக்கள்

நீதியின் பாதையில்
மற்றுமோர் மாற்றமுடியாத

வரலாற்று சாதனையே

உன் வழக்கும்..வாழ்வும்
வண்ணமிகு தீர்ப்பும்

வாழ்க தமிழகம்...
வளர்க நின் ஆட்சி வளர்ச்சிப் பாதையில்

அமை “தீ”

அனுமதிக்கு காத்திருக்கிறது

ஓர்................அமை “தீ”

பெண் எனும் பேரின்ப பிறவியெடுத்து
நீர் கண்ட போராட்ட களம் தான்
எத்தனை எத்தனை

வாழ்ந்தீரா...வீழ்ந்தீரா என்பதை விட
வாழவிட்டாரா..என்றே தொடர்கிறது
இன்று வரை உம் சாதனை சோதனை பாதை

தவறோ..தப்போ..தன்னதிகாரமோ
பதவி நிலை பாழ்பாடோ

எதுகொண்டு உம்மை கோல் ஆட்டியது
இந்நிலை நீர் படியேற

சூதுகொண்டோர் ..எல்லாம் சூழ்ச்சியாய்
சூட்சம வாழ்வு வாழ

சூதுகவ்விய நீரோ இன்று...சூழ்நிலை பணையமாய்

எதிரிகள் கூட எதிர்வாதிட முடியா
வழக்கே உம் வாழ்க்கையில்

தலைமேல் தொங்கும்
கூர்கத்தி...தூக்கு முடிச்சிடலே
கூப்பாடு போட விடாமல்
இங்கு கழுத்திருக்கிறதோ அவர்களை

கருப்பட்டி பானைக்குள் கைவிட்டவன்..கைதுடைத்து
போகமாட்டான் என்பதே அவர்தம் நிலைமையும்

எல்லோரும் இங்கு குற்றவாளிகளே
எடுத்துச் சொல்லும் சாட்சியமைந்தால்

சட்டங்களும்...தண்டணைகளும் தவறுகள் திருத்தியமையக்கவே தவிர..தண்டித்து ..
துண்டிக்க அல்ல

உள்கட்சி கொலைகள் இல்லை
ஆணவத்திமிர் ஆட்டங்கள் இல்லை
வாரிசு பகிர் வன்ம புகைச்சல் இல்லை
சட்டஒழுங்கு பிரச்சனையுமில்லை

அமைதி பூங்காவாய் அன்னை தமிழகம் மீண்டெடுத்து
மீட்சி காணும் சூழலில்

குறை என்று சுட்டிக்காட்ட ...பாரம்பரிய எதிராளிக்கு
பக்குவ வாதிடல் சுட்டுவிரலில்லை

அமையுமா இதுபோல் ஓர் ஆட்சியமைப்பு என்றே
தம் அமைதியிழந்து தாகம் தவித்த
ஒவ்வொருதுறையினரும்...இன்று ஓர் தன்னிறவமைதியில்

மன்னிப்போமே மனம் மாறிய மனிதரை
தொடரட்டுமே இத்தொப்புள்கொடி இருவித்திலை

ஆயிரம்கோடி வேண்டுதல்கள்.....
அமைதியான பிரார்த்தனைகள்.என
விடாது வேகம் துடிக்கும் ஈர இதயங்களின்
தவப் பலித்தலின்

வெற்றியாய் வெளிக் கொணரட்டும்

சாதனைப் பெண்மையின்
சோதனை மீள்...
அரசியல்.தொடர் ஓட்டங்களை