Saturday, 15 November 2014

மடி தேடி வந்த தாய்

பலவருடங்களாக

சிறுகச் சிறுக சேமித்து

பத்தாமல் கடன் வாங்கி

ஏக்கப் பெருமூச்சுக்
கனவுகளுடன்
தூக்கமில்லமால்
ஊமையாய்
உள்ளம் மறுகி மறுகி

கொதிப்போடு உதிரம்
சுற்ற சுற்ற

கொத்தனார்,, மேஸ்திரி
ஆசாரி சித்தாள் என

எல்லாரிடமும் ஏமாந்து....
எலக்ரீசியனுடன் போராடி....

உறவுகள் இளக்காரம் பண்ண
ஊர் பொறமைப் பட

ஆனந்த கண்ணீராய்
ஆசைக் கனவு தழும்பி
உணர்வுகளுக்குள் உறவாட

நான் கட்டிய வீட்டை
ஐந்தே நிமிடத்தில்
கசங்கிய காகிதத்தில்
அவள் மொழியில் வரைந்து

எப்படி இருக்கிறது பார்
என் வீடு ....
உன் விட்டை விட அழகாய்
என போட்டி போடுகிறாள்

மகளாய் மறு ஜென்மம்
எடுத்து எனக்கு
மடி தர ...

என் மடி தேடி
வந்த என் தாய்.....

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..