Saturday, 22 November 2014

அன்னை துதி

சத்திய வாழ்வாய் வந்து நிறையும்
நித்ய ஒளிச் சுடரே போற்றி

தாயெனும் கருணைநிறை
கனிவின் மலரே போற்றி

அருள் வடி முகமாய் வந்து
அமைதி தரும் பூரணமே...

எங்கும் நிறைந்த ஆனந்தமே...

வெற்றியின் வழியாய் என் முன் சென்று
என் முன்னேற்றம் தீர்மாணிக்கும் ஆளுமை சக்தியே

மணி நேர வேண்டுதலாய் நினை நான் இன்றழைக்க
உடனிருந்து காப்பாய் மகத்துவமே....!!!!!

ஓம் நமோ பகவதே....ஸ்ரீ அரவிந்தாய நமஹ....!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..