Saturday, 22 November 2014

காலக் கிழத்தி

வந்தோர்கள்
வந்து கொண்டே இருக்க

வாழ்ந்தோர்கள்
கடந்திருக்க

எவரையும் சட்டைசெய்யாமல்

பள்ளியாண்டு
பருவமெய்திய வீட்டின்
உருவம் சிதைத்து
உறவு குலைத்து

மூப்பு பறைசாற்றி
செல்கிறாள்

இளமை குன்றா
காலக் கிழத்தி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..