Saturday, 22 November 2014

வாழ்த்துக்கள் தங்கம்

அன்பில் பெரியவளுக்கு
அகவையில் மூத்தவளுக்கு
பாசத்தில் பாந்தமானவளுக்கு
நேசத்தில் குழந்தையானவளுக்கு

என் உயிர் பிரிய தோழிக்கு ...Uma Sundar
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

தேவர்கள் தவமிருக்க தேவதையது
மண்ணில் பிறந்த நாள் இதுவோ
வான் மாரி பொழிய வால் நடசத்திரப் பிரியமேந்தி
பூமி வந்த பேரழகே
குணநிறை செப்பழகே.....

பாந்தமும் பாசமும் முகவடிவாய் கொண்ட
அழகுநிறை ஆனந்த பூக்காடே
உன்னை மணந்து தன்னில் மணம் நிறைக்க
எங்கள் சுந்தர் அண்ணா
மிகவும் கொடுத்து வைத்தவர்.........

நான்கு ஆண்டுகளாய்...என் நம்பிக்கைகுரிய தோழியாய்
நலம்நாடும் பிரியமாய்....மனம் கொள்ளும் சாட்சியாய்
முகம் பார்க்காமல்..கை இறுக்காமல்..கட்டியணைக்காமல்
கல்லூரித்தோழி போல் சிறுவயதுகூட்டுக்காரி போல்
உரிமை கொண்டு உயிராடும் சொந்தம் நீ

அன்பும் பாசமும் எங்கிருந்தாலும் அரவணைத்து
எவரிடம் சிறு கோபம் வந்தாலும் ..பொறுமைசகித்து
நிதானபிரியமாய்..நிம்மதி சூழ் தோழமை வட்டம்
வகுக்கும் லாவகநேசம் உனக்கு மட்டுமே கைவந்தது

குணவதியாய்...சுடரேற்றும் குத்துவிளக்கு தங்கமே...நீ

என்றும் என்றென்றும்...இதே பொக்கிஷ ஆனந்தத்துடன்
இதயகூடு அடைந்த கணவனுடனும்....
இமை உறங்கும் செல்ல மகளுடனும்

அகில உலக ஆனந்தங்கள் கோடி கோடி பெற்று
பல்லாண்டு பல்லாண்டு பவித்ர மங்கல்ங்கள் சூடி
உறவு சூழ...உற்றார் வாழ்த்த ...

மகிழ்ச்சிப் பெருவாழ்வு வாழ்ந்து
அன்பு இலக்கண காவியம்வெல்ல .....

என் அன்னை வேண்டி வாழ்த்துகிறேன்
இனிய வாழ்த்துக்கள் தங்கம்.


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..