Monday, 17 November 2014

மகா ஆத்மா..மகா சமாதியான நாள் நவம்பர் 17/72...ஸ்ரீ அன்னை உயிர் நீத்த நாள்

மகா ஆத்மா..மகா சமாதியான நாள்
நவம்பர் 17/72...ஸ்ரீ அன்னை உயிர் நீத்த நாள்

அருட்பெரும் தவமாய் வந்து ஆனந்த வாழ்வு தந்த
உன்னத உயிர் ஜீவிதமே.....




மகா ஆத்மா..மகா சமாதியான நாள்
நவம்பர் 17/72...ஸ்ரீ அன்னை உயிர் நீத்த நாள்

அருட்பெரும் தவமாய் வந்து ஆனந்த வாழ்வு தந்த
உன்னத உயிர் ஜீவிதமே..

அகநிலை மேம்படுத்தி புறநிலை காக்கும்
புண்ணிய ஆத்ம பிரியமே.....

தீமைகள் விலக்கி நன்மைகள் தரும்
நல் ஒளி வழிகாட்டலே....

வருத்தும் துயரங்கள் தன்னால் உதிர்ந்து போக
உடனிருந்து அணைக்கும் கனிவின் கருணையே

குற்றம் குறைநிறைகளை அன்புடன் ஏற்று
தாய் என வந்து பிரியம் சொல்லி திருத்தும்
சாநித்திய சங்கல்பமே

அம்மா அம்மா என்றழைத்து பரிதவித்து பசித்த உணர்வுகளை
உடன் ஓடி வந்து கையணைத்து நானிருக்கிறேன் .எனத் தழுவும் நம்பிக்கையே

என் வெற்றி முன்னேற்றங்களை..எனக்கு முன்னால் சென்று தீர்மாணிக்கும் யோகஒளி பிரமமே.....

பூக்களுக்கும் வேர்களுக்கும் இலைகளுக்கும்..கனிகளுக்கும்
மகத்துவம் உணடென்று கூறி பொருள்தந்து...சமர்பித்து
வளம் காக்கும் வாழ்நிலை தத்துவமே

எங்கள் மலர்களின் மாதாவே

மனதால் தினம் நினைத்து
நின் முகம் பார்க்க ...நின் இடம் வர...நின் சமாதி தலைவைக்க

மலர்ந்த மலரணைத்தும் எடுத்து நின் பாதம் சமர்பிக்க

ஒளியாய் சூழ்ந்து சூமுகம் அளித்து நலம்பலம் தரும்
ஆனந்த அன்னையே

புண்ணிய ஆத்மா ..தானாற்றிய கடமை முடித்து
பூமியில் தன்னை நிறைத்து
ஸ்தூல அமைதியடைந்த திருநாளில்

உன்னை மனதால் நினைத்து அணைத்து

என் மொழிதழுவி உருகி கண்ணீர் மல்கி
கதியென சரணடைகிரேன் தாயே

உலகுகாக்க ஒளியாய் உறையும் பரபிரமமே
பொய்மை தீமை நீக்கி....உண்மை மகத்துவமாய்
காத்தருள்வாய் .....அம்மா...அனைத்துயிர்களையும்

ஓம் ஆனந்தமயி..சைத்தன்ய மயி...சத்யமயி..சரணம்...!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..