Saturday, 22 November 2014

அன்னை துதி

ஒளி சூழ் வாழ்வளித்து
அருள் சூழ காக்கும்

அன்புநிறை அன்னையே

விரட்டிய வினை துரத்துகிறதே
விலக்கிய மன உறுதி குலைகறதே....

விழிஇமை திறந்தே
இம்மை சூழ்ந்து கண் உறக்கம் பறிக்கிறதே....

என்னே பற்று வாழ்வு
என்றே மனம் பதறுகிறதே..

அருள் வழி மறைகிறதா....
இருள் வழி சூழ்கிறதா...

இவை தான் உன்
உரு விளையாடலா

காக்கும் அன்னை நீயே
கலங்கவைத்தல் நியாயமா

கையறுநிலை தந்து.....அமைதியுறையும் அன்னையே....

தாயென நீயே கதியென தவித்து அழைக்கிறேன்....

உயிர்த்து வேண்டி சரணடைகிறேன்

என் காலம் முடிந்தாலும்
நல் மனங்கள் உடனிருந்து

நன்மை மகிழ்வு நிம்மதியாய்
நல் வழியில் அவர்கள் வாழ்வு காப்பாயே....பரமே

அன்னையென வரும் அமுத பிரியமே..சரணம் சரணம் சரணம் மாத்ரேயி..

ஓம் நமோ பகவதே...ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..