Saturday, 22 November 2014

உல்லாசம் உலவ விடுது வனத்துறை...

புள்ளி மான் புருவம்
துள்ளும் மீன் விழி

கொஞ்சும் கிளி மூக்கு
கொத்தும் நாக பார்வை

பவள உயிர் இதழ்கள்
முத்து நத்தை சிரிப்பு

தேரை வளை காது
தேக மயில் மென்மை

எல்லாம் சரி
எப்படியடி

உன்னை கூண்டடைத்து
காட்சியாக்காமல்

உல்லாசம் உலவ விடுது
வனத்துறை...

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..