Monday, 17 November 2014

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அன்பின் அழகுப்பிரியங்களை
பாந்தமாய்..பந்த பாசத்துடனும்

அள்ளி வழங்கும்...குழந்தைமன தோழிக்குGeethalakshmi Ethiraj

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

முகமழகா...மொழியழகா
மூக்கழகா....முழிக்கும் முழியழகா

என்றே திகைக்க வைக்கும்

செப்பெடுத்து பிரம்மன் வார்த்த
அன்புநிறை திராவிட குணவழகியே

நட்பென வரும் தோழிகளை
பாசத்தால் கட்டிப்போடும் பண்பழகியே

எண்ணங்களில் ..செயல்களில்..நேசங்களை விதைத்து
தூறல் பிரியங்கள் தூவி அறுவடை செய்யும்
ஆனந்த விளைகளம் நீ

சிலரிடமும் பேசினால்..பார்த்தால்..
உடன் அமர்ந்து சிரித்தால் ..சொல்லவியாலா நிம்மதி
மனதோடு சிம்மாசனமிடும்.....அதில் நீ

வாய் நிறைய அழைத்து மனம் குளிர அணைத்து
எல்லைகளுக்கு அப்பாலிருந்து என்னில்
சந்தோஷ சுடரேற்றும் ....மகிழ்ச்சி மின்னல்

முகமறியா முகநூலில்..தோழியென தோள் சாய
நம்பிக்கை தரும் அஸ்திரமே

நீ என்றும் என்றென்றும் ஆனந்த பூச்சூடி

அன்புக்கரமிணைத்து உன் விழிகளுக்குள் வசிக்கும்
உன் பாவா வுடனும்....
செல்வசோலை வம்சதென்னைகளுடனும்

பல்லாண்டு பல்லாண்டு..மங்கலஇன்பங்கள் கோடி பெற்று
நிம்மதிபெருவாழ்வு வாழ....

என் அன்னைவேண்டி வாழ்த்துகிறேன்

அன்பு முத்தங்களுடன்...ஆசையணைத்த

இனிய வாழ்த்துக்கள்...கீத்து

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..