Showing posts with label மழலை. Show all posts
Showing posts with label மழலை. Show all posts

Monday, 17 October 2016

மழலைக் குறும்பு

அடிக்க
மனம் வருவதில்லை
குறும்புகள் செய்து
அலும்பு பண்ணும்

#மழலையை

பரிசுத்தப் பிள்ளையன்பு

உள் வர
உனக்கு 
அனுமதியில்லை
வெளி வர
எனக்கும் பிரியமில்லை
செல்ல வம்பிழுத்து
இணையக் கண்ணாடி வழி
இருவரும்
பரிமாறி மகிழ்வோம்

தீண்டி திகட்டாத
பிள்ளையன்பை

Wednesday, 12 October 2016

தனித்திமிராய்

தன் கவலையேதுமின்றி
தனித்திமிராய்
பெண்மை
சோபித்திருப்பது

#தந்தை தோள்களிலே

ஒருமுறையும் தோற்பதில்லை




ஒருமுனைப்போடு
கவனிப்பதாலே
ஒருமுறையும்
தோற்பதில்லை

விளையாட்டில் கூட
குழந்தைகள்

Tuesday, 11 October 2016

அவளும் பறக்கிறாள்




இரைகளுக்காக அவைகள் 
வருகிறதென்றே
இத்தனை நாள் நினைத்திருந்தாள்
தானியக்கிண்ணம் மறந்து சென்ற போதும்
இறகடித்து வந்தமர்ந்தன
கொத்தும் அலகால் கோதி சிறகமர்த்தி
சிலுப்பி தலையாட்டி
சின்ன நடை நடந்து
பக் பக் என பந்தமாடின
எப்போதும் போல்

கறுப்பி ....நெட்டைதிமிர்
சவலை ... மணிக்குட்டி ...ராசாத்தி 
பெயரிட்டு.........
இப்போதெல்லாம் அவளும்
பறக்கிறாள்
அவைகளுடன்

Saturday, 3 October 2015

பாச மனசுக்கு

பார்த்தவுடன் தாவும்
பாச மனசுக்கு

சட்டென்று
மன்னித்து மறக்க 
தெரிவதில்லை

மழலை போல்

தாய் சேரும் சேய்

ஆழத்தோண்டி
மண்ணுக்குள்
புதைத்தாலும்

தடம் பார்த்து
தாய் சேரும்
சேய்

#கடல்ஆமை

சலங்கை மகள்






நெளிந்த வாழ்க்கை தந்த
குழைந்த திமிர் பரிசு

ஜல் ஜல்
சலங்கை மகள்

நம்பிக்கை ஊசலாடும் மகவு

ஒய்யாரக் கழியில்
பிள்ளை ஏற்றி
ஒரு சாண் வயிற்றுக்கு
வீதியெங்கும்
வித்தை காட்டினான்

பாவமென்று
பல பார்வை பரிதாபம்
பேசிய போதும்

பயமென்பது அறியாது

காப்பான் தகப்பனென்று
நம்பிக்கை ஊசலாடும் மகவு

Thursday, 1 October 2015

உயிர் பாசம்

உயிர் பாசம்
உடன் அணைத்தே
உறங்கும்

வீடு ஏக்கத்தை

விடுமுறை முடிந்து
பள்ளி செல்லும்
குழந்தை

உடன் சுமந்து செல்லும்
வீடு ஏக்கத்தை

நேசம் சமைப்போம் வா..

உன்னிடம் பாசம்
உண்டு...
என்னிடம் பிரியம்
உண்டு......

கொஞ்சல் அனலெடுத்து

நேசம் சமைப்போம்
வா..

தண்ணீர்பிச்சை பூமி

மரங்கள் அழித்து
மகவுகளுக்கு
படைக்கிறோம்

தண்ணீர்பிச்சை பூமி

குழந்தை

தாலாட்ட வருபவரை

தாலாட்டில் உறங்க
வைத்து விடும்

குழந்தை

குளிர்பட்டுக் குழந்தை

இரும்பென
இறுகி உறைந்தாலும்

சட்டென
இளகி உருகச் செய்யும்

குளிர்பட்டுக் குழந்தை

பலூனோடு முடிந்திருக்கும்

குழந்தைகளாகவே
இருந்திருக்கலாம்

பலூனோடு 
முடிந்திருக்கும்

பேராசைகள்

குழந்தை மட்டுமே உயிராய் ..


சிலையெழுந்த முயலை

எல்லோரும்
கலையாய் பார்க்க

குழந்தை மட்டுமே
உயிராய் ........

புதிய எழுத்துச்சூடி

எழுதும் பிள்ளை விரல்
பிடித்து
அன்னையும் படிப்பாள்

வளைந்து நெளியும்

புதிய
எழுத்துச்சூடி

பேரழகாக்கும் குழந்தை

அழுக்கு பூசி

அழகை
பேரழகாக்கும்

குழந்தை

எங்கிருக்கிறாய்...அண்ணா

எப்படி

பேசுவது
சிரிப்பது

உடுத்துவது
சாப்பிடுவது

சவால்களை
எதிர் நோக்குவது என

சிறகில் அடைகாத்து
கவலை களைந்து
கற்றுத் தந்தாய் ...

ஆயிரம் பேர் ..அன்னைபோல்
அருகில் இருந்தாலும்

துயருரும் போதெல்லாம்
உன் விரல் பிடித்து
நம்பிக்கை நடக்கவே

துடிக்குது
தவிக்கும் மனம்

எங்கிருக்கிறாய்...அண்ணா