Saturday, 22 November 2014

இமை ரசிக்காத விழிகள்

உன்
முதுகில் முகம்
பதிக்காத தூக்கம்

சிரிப்பில் இமை
ரசிக்காத விழிகள்

கோபத்தில்
காயம் தந்து
உடைந்து அழாத
வார்த்தைகள்

காலடி ஓசை கேட்டு
விழுந்தடித்து ஓடி வாராத
நொடி தவிப்புகள்

முதல் வாய் ஊட்டாமல்
உண்ணாத வேளைகள்

எதுவும்
எனக்கு சாத்தியமில்லையெனில்

எப்படி .....நான்
உன்னைப் பிரிவேன் .தலைவா..???????

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..