Saturday, 15 November 2014

Dedicated 2 my loveable only one own brother..RAMESH

Dedicated 2 my loveable only one own brother..RAMESH

பிறந்தவுடன்
கையில் எடுத்தாய்

மாதங்களில்
வளரும் போது
கிச்சு கிச்சு மூட்டி
சிரிக்க வைத்து சிரித்தாய்

வருடங்களில்
வளரும் போது
தலையில் கொட்டி
கிள்ளி வைத்து
ரசித்தாய்...

பருவங்களில்
மிளிரும் போது
கோப முறைப்புகளுடன்
கண்களாலே
கண்டிப்பு காட்டி
வழி நடத்தினாய்...

மறு வீடு செல்லும் போது
சொல்லவியாலா துயரத்துடன்
ஆண் பிள்ளையாய்
அழுகை விழுங்கி
அதிர்ஷ்டம்
கை நழுவுகிறது
என்றாய்.....

செல்லமாய் கூட
கணவனோடு கோபித்து
உன் வாசல் மிதிக்கையில்
முகம் திருப்பி
இனி உனக்கு
இது வீடில்லை என்றாய்

எப்போதும் எல்லாரிடமும்
விட்டுக் கொடுக்காமல்
சிகரம் ஏற்றி
என்னை தூக்கி வைத்து
கொஞ்சினாய்....

மூவரோடு பிறந்தாலும்
கடைக்குட்டியான நான் மட்டும்
முக்கியமாகிப் போனேன்
உன்னில்

அடிக்கடி பேசாவிடினும்

இப்போதும்

பேசும் போதெல்லாம்
நினைவு படுத்துகிறாய்
அண்ணா....


அன்னை இன்னும்
இறக்கவில்லை
எனபதை....

பூமியில்
பெண் ஜென்மம் நான்
மீண்டும் மீண்டும்
எடுக்க வரம் வேண்டும்

உனக்கு

மகளாய்...

தாயாய்....

தலைமுட்டிச் சிரிக்கும்

தங்கையாய்...

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..