Saturday, 15 November 2014

சிறுசேமிப்பு மனிதர்கள்..


கருப்பு--- சிவப்பு என் நிற அழகு
வேறு பாடுகளின்றி

ஆண்-- பெண்
எனும் இன வேறுபாடுகளின்றி

சாதி-- மத
பாகுபாடுகளின்றி

ஏழை-- பணம் எனும்
பொருள் ஏற்றத் தாழ்வுகள் அறியாது....

கண்களுக்கு முன்
அகப்படும்
அசையும் உருவங்களில்
பிடிபடும் அழகைப்
பார்த்து பார்த்து ..

இருகைநீட்டி தாவி
இரும்பையும் இளக வைத்து

பொக்கை வாய் காட்டி

வளரும் மாதங்களில்
சிரிக்கிறது

வளர்ந்த பின்
சிரிப்பை சிறுசேமிப்பு
மனிதர்கள்....!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..