Saturday, 15 November 2014

அன்பெனும் அடிமைசாசனம்

ஆயிரம் கோடி நிலவுகள்
பகலிலேயே பூமி வந்தது

விடியலில் இறங்கிய
விடிவெள்ளி...
வீதியெங்கும்
கதவு தட்டி

உரிமையாய்
என் வீடு நுழைந்தது

எல்லோரையும் அதட்டி உருட்டும் என்னை

அதிகாரம் பண்ணி மிரட்டி
எனது நிமிடங்களை எல்லாம்

தன் சேவகம் செய்ய
அன்பெனும் அடிமைசாசனம் எழுதிக் கேட்டது

தோள் வளராத உன்னை
மெதுவாய் தொட்டுத் தூக்கி

வலிக்காமல் முத்தமிட்டு

வம்படியாய் உணவு புகட்டி

என் கண்ணே படக் கூடதென்று
கருப்பு மையிட்டு பொட்டிட்டு

கை வலிக்க வலிக்க
தூரியாட்டி தூங்க வைத்து

பெருமிதமாய் மனம்
பொங்க பொங்க...

உன் ஒவ்வரு அசைவுகளையும்
இமைக்காமல் ரசித்து......

தாயான பதற்றத்தில்
ரசிக்க மறந்த
காட்சிகளையெல்லாம்

பொறுமையாய் ..நிதானமாய்

அனுபவிக்கிறேனடா
கண்மணி உன்
பொக்கைவாய்ச் சிரிப்பில்

வயது
முதிர்ந்து
தளர்ந்த பின்னும்

நானும்
குழந்தையாய்

உன்னுடன்
மறு பிறவி எடுத்து


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..