Saturday, 15 November 2014

முரட்டு அன்பில்

வசமாய் உனக்குள்
மாட்டிக் கொண்டு

வெளியேறும் வழி
தெரிந்த பின்னும்

விடுதலை கேட்க
மறுத்து

வலிய வலிய போய்
விரும்பிச் சிறை படுகிறது

உன் முரட்டு அன்பில்
அடிமைப்படும் என் ஆசை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..