கண்மூடிய இரவில்
விடிய விடிய விழித்து
கதை பேசிய
பிரியத்தை ...
கவனம் வாங்கி
கனிவுசுமக்கிறாய்
மூச்சு வாங்கி நீ
தவிக்கும் தவிப்பில்
எட்டெடுத்து நடக்க
திணறும் நடையில்
உண்ணப் பிரியமிருந்தும்
உயிர்சத்தமிட்டு எடுக்கும்
வாந்தியில்.....
தெய்வம் சுமக்கும்
தேவதை உன் பொறுமையில்
நாள் வளர ..சேய் வளர
நழுவி கீழ் விழுகிறதடி
நான் என்னும்
என் ஆம்பளைத் திமிர்
விடிய விடிய விழித்து
கதை பேசிய
பிரியத்தை ...
கவனம் வாங்கி
கனிவுசுமக்கிறாய்
மூச்சு வாங்கி நீ
தவிக்கும் தவிப்பில்
எட்டெடுத்து நடக்க
திணறும் நடையில்
உண்ணப் பிரியமிருந்தும்
உயிர்சத்தமிட்டு எடுக்கும்
வாந்தியில்.....
தெய்வம் சுமக்கும்
தேவதை உன் பொறுமையில்
நாள் வளர ..சேய் வளர
நழுவி கீழ் விழுகிறதடி
நான் என்னும்
என் ஆம்பளைத் திமிர்
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..