Monday 5 January 2015

வருட முதல் நாள்..வசந்த திருநாள்

வருட முதல் நாள்..வசந்த திருநாள்

மூன்று ஆண்டுகால நட்பின் நல் தோழமை..தமிழ் கனல்
எங்கள் ஆசானுடன்..... இரா. குமார்

வருட முதல் நாளில்...என் அருள் நிறை பாண்டியில்
சந்தித்தது மிக்க மன மகிழ்வு...

அன்னை சந்நிதி தேடி 15வருடங்களாக ஆண்டு முதல் நாளில்
ஓடி அமர்ந்த போதும் முகநூல் வந்தது முதல் செல்லுமிடமெல்லாம் நட்பும் நிறைந்து குவித்து ...எல்லா ஊரையும் எனது ஊர் என்றே ஆக்கிவிட்டது...என்றே சொல்லலாம்

என்னைப் பொறுத்தவரை
மனதை என்றும் மகிழ்வோடு நிறைவு செய்வது ..உறவுகளாய் வரும் உடன் பிறப்புகளை விட..நட்புகளாய் வந்தமர்ந்து நம்மைப் புரியும் உயிருள்ளங்களே என்றே நம்புவேன்

நட்பெனில் வளையும் நாண் ..நான் என்பது என் பெற்றவர்களும்உடன்பிறந்தவர்களும் அறிவார்கள்

ஆசான் என்பதை விட ..எங்க சார்..என் நலம் விரும்பி..நான் விழி கலங்கும் முன்...மனம் கலங்கும் இயல்பு கொண்டவர்
அவர் குடும்பத்தில் என்னையும் ஒருத்தியாய் இணைத்து எனக்கு தாய் வீடு தந்தவர்..ஆண்டு முதல் நாளில் அவர் வாழ்த்தும் ஆசீர்வாதமும்..எனக்கும் எம் குடும்பத்திற்கும் எப்போதும் வரம்....

தமிழ்..அதுவரை போட்டோவில் மட்டுமே பார்த்து இருந்தவர்..போனில் கூட பேசியதில்லை..முதலில் இவரை விட இவர் செல்ல மகளே எப்போதும் என் அன்பின் பிரியம்

மகளின் குரலில் இவர் அனுப்பிய தாலாட்டு..இன்றும் கேட்கும் போதெல்லாம்...தாய் மடி படுத்து கண்ணீர் வழிய கவலை மறந்து உறங்கும் ஆனந்தம் தரும்

வந்திருக்கிறேன் என்று சொல்லியவுடன்...அன்பு மகளையும்..பிரிய மனைவி பிரபாவையும் அழைத்துக் கொண்டு நேரில் வந்து சந்தித்தது...இன்ப அதிர்ச்சி

காலில் செருப்பு இல்லாமல்...1கிலோமீட்டர் கடற்கரை சாலையை ..என்னுடன் பேசியபடி....ஜெய்ஸ்ரீ யை நான் கையில் பிடித்தபடி...சிறுகல் துகள்கள் காலைப் பதம் பார்த்த போதும் முகச்சிரிப்பு கோணாமல்...முதலாய் பார்க்கும் தடுமாற்றம் இல்லாமல்...நல்லதொரு தோழியாய்...பிரபா என்னுடன் இசைந்து நடந்தது....பகிர்ந்த மொழிகள்....வார்த்தையில் சொல்லவியலா உணர்வு மகிழ்வு...

தேவதை அவதாரம் செல்ல குழந்தை ஜெய்ஸ்ரீ..இவளின் கனிவு மழலை மொழியிலேயே..கவலைகள் எல்லாம் மறந்து போகும்....

நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர் தமிழ்..என்ன ஒரு அழகான குடும்பம்...அன்னையிடம் வேண்டுகிறேன்....ஒளிசூழ்ந்து நிம்மதி மகிழ்வாய் எப்போதும் உங்களுடன் அவர்கள் நிறைந்திருக்க....

பலமுறை பலரை பார்க்க வேண்டும் என்றே வரும் சந்திப்பு நழுவ விட்டு இருக்கிறோம்..நேற்று தங்களை குடும்பத்துடன் சந்திக்க வைத்த அன்னைக்கு ..என் மனம் நிறைந்த நன்றிகள் — with தமிழ் கனல், இரா. குமார் and Kathir Covai.

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..