Thursday 15 January 2015

வாடிவாசல் கனவும் வளையா திமிரும் .

விளைஞ்சநெல்
அரிசியாகி வீடு வந்தாச்சு

உழைச்ச காளையனும்
களைப்பு தீர
குளிச்சு முழுகி

ஏறி மக்கா வாங்க டா ஏறு தழுவ
என்றே சவால் விட்டு

விடலைக் காளைகளை
செவளக்காளை அழைக்க

வாடிவாசல் கனவும்
வளையா திமிரும் ....உறுத்தும் விழிகளில்
நிறுத்தியே நிலையாடுறான் கொம்புக்காளை
அரசு ஆணை கிடைக்காமல்....

வாயில்லா வம்புத்திமிரனுக்கு இருப்பதெல்லாம்
ஒரு யோசனை தான்

தொட்டு கட்டி விளையாட நான் ரெடி...
விட்டு பிடிச்சு கழுவேற வீர மறவனும் ரெடி

வேடிக்கை பார்க்கிறவன் ஏனப்பு
வீராப்பு காட்டுற...?????

கழுத்துதுணி சல்லிகாசுக்கா
நானும் அவனும் மல்லுக் கட்டுறோம்

ஆம்பள வீரம் காட்டத்தான்யா
அவன் பிடிக்கிறான் ..நான் திமிர்றேன்

என்னைத்தொட்டு பிடிக்கலைனா
இன்னும் பொண்னு கொடுக்க மாட்டானுகய்யா
எம்மூரு ஆம்பளைக்கு

உலகே மெச்சுனாலும் ..எம்புட விளையாட்டு
உன்னைப் போல
உள்ளூர்க்காரனுக்கு எப்பவும் இளப்பம் தான் யா

சட்டு புட் நு பஞ்சாய்த்த முடிச்சு
வந்து ஒரு எட்டு பார்த்துட்டு போய்யா

அய்யா ஜட்ஜய்யா

எம் தமிழ் திமிர்மகனின் வீர மற விளையாட்டை!!


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..