Thursday 15 January 2015

கரும்புக் கருப்பழகை

செல்லக் கட்டியாய்
வெல்லப் பிள்ளையாய்

துறுதுறு விழிகளோடு
ஆலிழைப் பள்ளியாய்

யசோதை முதுகேறி
பக்தமீரா தவம் அமர்ந்து

மாட்டிடை பாலருந்தி
வெண்ணெய் திருடி மாட்டி

குழலூதி அவனி மீட்டி
குறும்போடு குத்தித்தாடி

கோவர்த்தனமலை குடையாக்கி
கோபியர் கெஞ்சி கொஞ்சி

ராதை நெஞ்சம் நிறைந்து
பாமா ருக்மணி பதியாகிய
பகவத் கீதை சாரதியே

அள்ளிக் உனை
ஆசைமுத்தமிட்டு
கொஞ்சக் கெஞ்சா

ஆண்மைத் தாய்மையும்
அகிலத்தில் உண்டோ

இக்கரும்புக் கருப்பழகை
அடிக்க மனம் யாருக்கும் வருமோ

விழி நீ கலங்கினால்
நிலம் மிச்சமில்லாமல்

உப்பங்கழித்தீவாய்
பூமி சூழுமே
அச் சமுத்திரப் பெரும் நீர்

எம் பிதாமகனே


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..