Wednesday, 17 December 2014

நாயுருவி நேசக்காரி

தொட்டால் ஒட்டிக் கொண்டு
தொடர்ந்தே பின் வந்து
குத்தி குத்தி
தன்னிருப்பு உணர்த்தி

பிரித்தால்...வலியோடு
குருதி உதிர்ப்பாள்

ஒற்றைக் காலெடுத்து
தென்றலாடி
பூ மணக்கும்

அவள்
என் நாயுருவி நேசக்காரி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..