உன்னை பார்த்துக் கொண்டே
நடப்பதறக்காக.........
பின் நோக்கி நடை பழகிக் கொள்கிறது ......
என் கால்கள்
அருகில் வந்து அணைத்து
என் தாகங்களுக்கு
தண்ணீர் இறைத்துப் போகிறது
உன் நினைவு கிணறு
இல்லை இல்லை என நீ
ஆயிரம் முறை மறுத்தாலும்உன் ஆழ்கடல் மனதின் அடியில்...
நான் வந்து வசிக்க
ஒளித்து தான் வைத்துள்ளாய்
எனக்கான செவ்வாய் கிரகத்தை
சென்ற இடத்தில்
சட்டென்று எழுந்து
உன் நிழலுக்கு
குடை பிடிக்கிறது
என் புல்வெளிகள்.
கையில் ஏந்துகிறேன்....
என்னை சூடாக்கும்
உன் குருதி தோய்த்த
நினைவுகளை
கொஞ்சம் இளைப்பாற
நினைத்தால்....
பூமி கூட போய்
குழந்தைகளுடன் தான்
உட்கார்ந்து கொள்கிறது.
இன்னும் கொஞ்ச நேரம்
அருகில் இருக்க மாட்டாயாஎன்ற ஏக்கத்தில்....
உன்னிடம்..கோர்த்து பேச
வார்த்தைகள் இல்லாமல்
உளறி உளறி தடுமாறி
உச்சகட்டமாய்
அசடு வழிகிறது
ஆசை மனசு
தேடி..தேடி
ஒளிந்து ஒளிந்து
கட்டம் போட்டு
நொண்டி அடித்து...
தொட்டுப் பிடித்த..... விளையாட்டுகள் யாவும்.......தவித்துக் கொண்டுள்ளது
கணிணிக்குள் தலை புதைத்து
மழலைத்தனம் தொலைத்த
சிட்டுக்குருவிகளை.....
காணாமல்...
விழுந்தவுடன்....
பெரிதாய் தோணாத வலி
ஆறுதல் சொல்ல
ஆளைப் பார்த்தவுடன்
பெரும் குரலெடுத்து
கதறுகிறது....
குழந்தையாய்....
பெரிதாய் தோணாத வலி
ஆறுதல் சொல்ல
ஆளைப் பார்த்தவுடன்
பெரும் குரலெடுத்து
கதறுகிறது....
குழந்தையாய்....
பசியின் தேடல்கள்
அச்சங்களின் முகவரியை
நம்மிலிருந்து அழித்து.....
மொழி தாண்டி...
உறவு தாண்டி....
கடல் தாண்டியும் நம்மை
பறக்க செய்கிறது....
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..