தமிழ் திரையுலகின் பிதாமகன் ......
கதையம்சமும் ..கவின் அம்சமும்..
போட்டி போட ..திரைக்கதை சுழட்டி....
தமிழுலகம் இயக்கிய சிகர தலைமகன்
புது புது விதைகளை....தேடி தேடி
திரைபூமி புதைத்து.....
கலை வாழ்வில்....வசந்த விழுதுகள்
பல தந்த சாகப்த ஆலமரம்
பாரதி கண்ட அக்னிப் பெண்மையை......
கசக்கிய பூவுக்குள் ஒளிந்திருக்கும்
பூநாக கோப தீரத்தை.............
படித்தவன் ஏடெடுத்து எழுதினான்
துடித்தவன் பாட்டிசைத்து பாடினான்
உணர்ந்த நீயோ........படைத்த பிரம்மனாய்
அவளை கதை உருவமாய்
முன் உலவ விட்டு...அரங்கேற்றினாய்
இந்தக் கல்லுக்குள்...ஒளிந்திருப்பது
இந்த சிற்பமே ...என்று......கடும் பாறைகளை
உன் கதைஉளி கொண்டு செதுக்கி
கலைஞனாக்கினாய்......................
கணக்கெழுதி எழுத்தாராய் வாழ்வு தொடங்கி
கலை உலகு நுழைந்து..பலரின் தலையெழுத்து எழுதிய
தன்னிகரில்லா பிரம்மனே.........
இயக்க தந்தை ஸ்ரீதரின் வாரிசாய்...இயக்குநரே
திரைப்பட பிதாமகன் எனும் மேற்கோளுக்கு
அடையாளமான அணுத்துகளே.....
வாழ்ந்தாய்..வாழவைத்தாய்..வாழ்க்கை தந்தாய்
முகவரியானாய்...முழுமதியானாய்....
கோபமும் ..குணமும் ஒருங்கிணைந்து
உற்சாகம் கொள்ளும் உற்சவமாய்
உலா வந்த சுறுசுறுப்பே
நடிப்பெனும் கழகமாய் திகழ்ந்த
சிவாஜி...எம்.ஜி.ஆர் எனும்
சகாப்த கல்லூரிகளை......கலோரிகளாய்கொண்டு
கமல்...ரஜினி எனும்
எழுச்சி சிங்கங்களை..திரைகாடு நுழைத்து....
கோலிவுட் சரித்திரம் திருப்பிய புரட்சி நாயகனே
இன்று மண் புதைந்த மாணிக்க விதையே
புத்திர சோகம் பிடித்திழுத்ததா....
தள்ளாமை....தாவி உடன் செய்ததா...
என்னே அவசரம்....உன் உருவம் மண் துறக்க
பிடித்தமான ஆத்மாக்கள்...வயது கடந்துசென்றாலும்
இன்னும் வாழ்ந்திருக்க வேண்டுமென்றே துடிக்கிறது
உணர்வு கலங்கிய ஓசைகள்
சென்று வா வரலாறே...விண் சென்றாலும்
அங்கும் ஓய்வில்லாமல்...ஓடிக் கொண்டே தான் இருப்பாய்
தேவர்களை இயக்கி செதுக்கும்
தேவாத்ம உளிச்சிகரமாய்..நீர்
ஆழ் மன வருத்தங்கள்..எங்கள் அற்புத கலைமகனுக்கு...
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..