என் கதிர் அவனே
என் கதிர் அவனே
மெல்ல எழுந்து
மேகச்சோம்பல்
முறித்து
நாளும் ஒளிக்கரம் நீட்டி
நாழிகையாய் ஓடுகிறாய்
வேதம் நீ
வேள்வி நீ
தீண்டல் நீ
தீச்சுடல் நீ என்றே
உன் சலும்பல்களில்
சிலும்பி.....
இரவுபகலணைத்து
இதழ் விடிகிறதய்யா...
அனல்குழந்தையென
உன்னையே
கொஞ்சிச் சுற்றும்
என் தாய்மை பூமி
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..