Friday, 19 December 2014

நேசத்தின் வாழ்வியல்-2

அடிக்கடி கட்டை
விரல் உயர்த்தி
சவால் விடுகிறது
அதுவரை அமைதியாய்
போவாதாய்
நாம் நினைத்த
வாழ்க்கை....
கால பரமபதத்தில்
முன்னேறுகிறோமா......?????
இல்லை
முன்னேற்றப்படுகிறோமா...????


திருப்பி பார்த்து
சிரிக்க வைக்கிறது
வாழ்க்கை.........
அதுவரை கடந்து வந்த
வயதின் உருமாற்றத்தையும்
உருவ மாற்றத்தையும்.....


வலி வந்த பின் தான் 
தெரிகிறது.....
இருப்புகளின் முக்கியத்துவம்.........
உறவுகளிலும்........
உறுப்புகளிலும்..


கொஞ்சம் கரடுமுரடான
ஓடையில் நம்பிக்கையோடு
எதிர் நீச்சல் போட்டால்.........
நம்மை தோளில் தாங்க
பிடரிகளோடு
கம்பீரமாய்
காத்திருக்கிறது
எதிர்காலம்...


நட்டனக்கால் போட்டு....
புட்டி பால் அருந்தும்
போதிலிருந்து ஆரம்பித்து விடுகிறது..........
வாழ்க்கையை பற்றிய
தீவீர யோசனை.......


நிலை மாறும் அவனியில்
மனிதம் மட்டுமே
எப்போதும்
மானுடத்தை வெல்கிறது.



நம்மில் பலர்
கோபம் கொள்ளும் போது மட்டுமல்ல..........
சிரிக்கும் போது தான்
அதிகமாய் உறுதி
செய்கின்றனர்
டார்வின் கூற்று
உண்மைதான் என்று


விதியின் வினாக்களை
கொடுத்து
விடைகளின் பாதைகளை
விழிகளின் வழி
தேடச் சொல்கிறது.....
விடுகதையான வாழ்க்கை.



முதுமையின்
தோல்சுருக்கங்களுக்குள்
புதைந்துள்ளது
வாழ்க்கை வாய் திறந்து
பேசிய மெளன மொழிகள்
அனுபவமாய்



மூல ஆதாரங்களை
எல்லாம் ஒன்றினைத்து
சற்று தனிமையில்
அமரும்......
ஆழ்ந்த அமைதி
தெளிவு படுத்துகிறது
நம் கோபங்களுக்கு
பின் ஒளிந்திருக்கும்
இயலாமையை....


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..