Saturday, 20 December 2014

என்ன தவறு செய்தேன்.?.

ஒரு வார்த்தை கேட்டேன்
என்று ஊரைக்கூட்டி
ஒப்பாரி வைத்து ..
திரும்பி பார்க்காமல்
சென்று விட்டாய்.....

வார்த்தைகளின் அர்த்தம்
புரிந்த உனக்கு......
என்னை புரியவில்லையா

இல்லை இதுவரை நாம் வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தம்
தெரிய வில்லையா.....

உன்னை பேச எனக்கு
உரிமை இல்லையா

தனிமையில் கதவடைத்து
கன்னங்களில் வழியும்
ஈரம் துடைத்துக்

இப்போதும் புரியாமல்
கேட்கிறேன்...

என்ன தவறு செய்தேன்.?......நான்...???

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..