Friday, 19 December 2014

என் முதல் தோழமைக்கு

நட்பு......முக நூல் நட்பு
என்றாலே முகத்தில்
மகிழ்ச்சி மொட்டுகள்
பூக்க வைக்கும்
என் முதல் தோழமைக்கு.......

நட்புகள் விரும்பும் வண்ணத்தில்.....
இயற்கை அன்னை
தாலாட்டும் அழகுகளை
தேடி தேடி தரும்
என் உரிமை நண்பனுக்கு.........

10 வருடங்களாக
எங்கேயோ எப்போதோ....
மூச்சுவிட முடியாமல்
தவிக்கும் சமயத்தில்
மட்டுமே எட்டி பார்த்த
என் எழுத்து தமிழில்....
மறுபடியும் நான் நடை பழக..
இல்லை இல்லை ஓட்டம் பழக
மேடை அமைத்து ஊக்கம்தந்த
என் இனிய தோழமைக்கு....

நன்றிகள் கூற
வார்த்தைகளுக்கு
அகப்படும்
சொற்கள் இல்லை
என்னிடத்தில்.ஆதலால்...
எனக்கு வரும் ஒவ்வரு
முகநூல் பாரட்டுகளையும்
சமர்ப்பிக்கிறேன் உன் தோழமையிடம்.........

தலைமுறை தாண்டியும் தொடர வேண்டும் நம் நட்பு...
தொலைந்து போன நம் கவிதை குடும்பம் மீண்டும் இணைந்து
இனிமையான போட்டியாய்
தமிழ் பகிர.......
இறைவனை வேண்டி.......

மத்திம வயதில் அடி எடுத்து வைக்கும் தங்களின் வாழ்வு
என்றும் மகிழ்வாய் திகழ...
உலகின் அனைத்து வெற்றிகளும் தங்கள் வீடு தேடி ஓடி வந்து குடி கொள்ள.....

செல்வ நலங்கள் யாவும்
பெருமையாய் உங்கள்
அங்க அணிகலனாய்
அமைந்து வளமாய் வாழ........
என் பாண்டி அன்னையை
வேண்டி வணங்கி வாழ்த்துகிறேன்.....

என் முதன்மை தோழனுக்கு .....
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..........advance happy birthday[june 16] wishes friend..................... — with Datchana Mourty.


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..