Friday, 19 December 2014

நேசத்தின் காதல் துளிகள்-33


என் கனவுகளும்
நினைவுகளும்
இரவுகளில்.....
பறந்து பறந்து
போட்டிபோட்டு
தேடுகிறது
என்னில்
காதலாய்
தொலைந்த உன்னை


மூச்சடக்கி உன்னில்
மூழ்கி எழும் போது
முழுமதியாய்
குளுமையாகின்றன
என் இரவுகள்


இனி எந்த பெண்ணும்
என்னுள் நுழையாத படி
என் மன வாசலை
அடைத்து.... பூத்து
காவல் காக்கிறது
உன் காதல்


எப்போதும்
என் கருத்துகளை
தலை கீழாகத்தான்
பார்க்கிறது
உன் ஆளுமை.


எந்தன் வெண்பனி
மேகத்துக்குள்
கடலாய்.........
ஆர்பரிக்கும்
சமுத்திரத்துக்குள்
மழைத்துளியாய்...
ஒளிந்திருக்கும் காதல் நீ.....


வானவில்
வண்ணங்களால்
வரையப்படும்
உன் அதரங்களுக்குள்....
முத்துக்களாய்.....
சுருட்டி... ஒளித்து
வைத்துள்ளாய்
எனக்கான
முத்தங்களை..


நான் செல்லரித்து
போகும் வரை
எனில் செல்லரிக்காமல்
புதைந்திருக்கும்
உன் நினைவுகள்...


உன் வருகை
என்னையும்..
என் வாழ்க்கையையும்
திருத்தம்
செய்து வண்ணம்
தீட்டுகிறது.
காதலாய்...


பகலிலும் ..இரவிலும்
நமக்குள் நம்மை
பறந்து பறந்து
தேடுகிறது
காதல்


கடற்கரை மணலில்
எப்போதோ....
நீ விட்டுச் சென்ற
காலடித்தடத்தில்
வந்தமர்ந்த
பட்டாம் பூச்சியால்
உருவாகிறது...........
நம் காதலுக்கான
கோயஸ் தியரி................


அதிகாலை அன்றாடம்
நீ ஓட்டம் பழகும்
கடல்.....
ஒய்யாரக் காதலாய்
ஒளிந்துள்ளது
என் மனத்தோட்டத்து
தென்னங் குலைகளுக்குள்
செவ் இள நீரா


மெல்ல மெல்ல
என் வெட்கத்துக்குள்
மூழ்கிச் சிவக்கிறது
உன் பொழுதுகள்
இரவுகளில் விழித்தெழும் கனவுகளாய்



உன் இமை திறக்கா
அழகாய்........
என் இதழ் திறந்து
வாய் மொழியாக்
காதல்....


கனவில் கூட
உன்னை தொட்டு விட
முயன்று......இரவிடம்
தோற்றுப் போகின்றன
கரங்கள்.....
சே..!!!..அதற்குள்
விடிந்து விடுகிறது



இரு விழிகளின்
ஒரு பார்வையாய்....
நிழலும் நிஜமுமாய்
பிரிந்த போதும்
என்னுடன் இணைந்தே
நடக்கிறாய்...காதலே.

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..