Friday, 19 December 2014

நட்பின் சுவாசம்-5

முகமுடிகள் கழட்டி வைத்து
குழந்தையாய் நட்புகளுடன்
தரையில் கால்படாது
தாவிக்குதிக்க........
இயந்திர வாழ்க்கைக்கு
இடையே
நடு நடுவே தேவை
நட்பு சுற்றுலா



குழப்ப சூழல்களில்
இரண்டில் ஒன்றை
கண்மூடி...
தேர்ந்தெடுத்து விட்டு
விலக்கிய ஒன்றை
விடமுடியாமல்
குழப்பமாய் தவிக்கிறது
குழந்தை மனசு.


நீயும் நானும்
இணைந்து விளையாடிய
மரக்குதிரை
உன்னை தொலைத்த இடத்திலேயே....
வளர்ந்த நம்மில்
வளராமல் இருக்கும்
மழலை நினைவுகளுடன்
காத்துக்கிடக்கிறது... தோழி..


விடுதியில்..இரவெல்லாம்
விழித்து விழித்து
நீ கதை படிக்க......
கழுத்தை கட்டிக் கொண்டு
இமைக்காமல் உனை நான் படித்தேன் தோழி.


உந்தன் காதுக்குள் வந்து
உரிமையாய்.....
நம்பிக்கையாய்
ரகசியம்....
பகிர்ந்து கொள்கிறது
என் நட்பு...........


அடிக்கடி..வலிகளோடு
அடித்து அடித்து
உரிமையாய் கட்டிக்
கொள்கிறது.....
அதீத அன்பில்..நம்மில்
பிண்ணி பிணைந்திருக்கும்
உறவுகளும்.......
நட்புகளும்


என் முட்டாள்தனங்களுக்கு
நீ எதிரியானதால்.....
எனக்கு நீ சிறந்த
தோழமையானாய் நட்பே...


கால்கள் தரையில் படர
மனம் தடுமாறி.....துவளும்
போதெல்லாம்..எங்கிருந்தோ
ஒரு தேவன் வருகிறான் நமைத்தாங்கிக்கொள்ள....
சில சமயங்களில்
உறவுகளாய்.........
பல சமயங்களில்
நட்புகளாய்..


எல்லாரும் நேர பாருங்கடி...........
ஒரே ஒரு போட்டோ
எடுத்துக்கிறேன்...........
உங்க சண்டையெல்லாம்
அப்புறம் வச்சுக்கலாம்....
கொஞ்சம் சிரிங்க......mm gud girl's....உங்கள facebook zoo ku கூட்டிட்டு போறேன்..
அங்க மனுசங்களா இருப்பாங்க ..
நாம வேடிக்கை பார்க்கலாம் ...kk


புரியாத புதிராய்
தான் உள்ளது
குழந்தைகளிடம்...
எளிதாய் தோழமை கொள்ளும் பிஞ்சு மகவு நட்பு....


ஆதரவின்றி அடிபட்டு
தத்தளிக்கும் போது
நம் காயங்களுக்கு மருந்திட்டு
சுதந்திரம் கொடுக்கிறது
நட்பு...




எழுத்துக்களையும்...
சிநேகிதமாய்.........
விரல்களின் வழி
தன் நியூரான்களுக்குள் பதிவுகொள்கிறது
முகநூல் மூளை...


கண்களை கட்டிக்கொண்டு
நட்பில் விழித்து
தொட்டுப் பிடித்து
விளையாடுவோம்
சிறிது நேரம் ஒதுக்கி
வாருங்களடி.......
என் குழந்தை கூட்டுக்காரிகளே.


தன் கையே
தனக்கு உதவி
என்பதை...
6மாத குழந்தை
கற்றுத்தருகிறது....
ஆதரவு தேடி தவிக்கும் போதேல்லாம்..


முழங்காலிட்டு.....
அமர்ந்து கொள்ளும் தனிமை
முழுவதுமாய் ....
கற்றுக்கொடுக்கிறது
நம்மை......... நமக்கு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..