Friday, 19 December 2014

மழலை நேசங்கள்-4

எத்தனை எளிதாய்
ஒரு கையில் ஏந்திவிடாய்
கஷ்டப்பட்டு நான்
சுமந்த பத்து மாதத்தை........


வலிக்க வலிக்க
கன்னம் இழுத்து பிடித்து
அழுத்தமாய் முத்தமிடுவதை
எந்த குழந்தையும்
ரசிப்பதில்லை.........
அதற்கு தேவையெல்லாம்
மென்மையான
தாய்மை முத்தம் தான்....


மழலைகள் கேக்கும் 
கேள்விகளுக்கான
விடைகளை
தன் அனுபவத்தில்
தேடித் தேடி
தோற்றுப்போய் சலித்துக் கொள்கிறார்கள்....... தந்தைகள்


கிழிந்து ..நைந்து
ஒட்டுப்போட்ட.....
தாய் சேலையில்.....
தாலாட்டும் ராகத்தில்
ஒய்யாரமாய் ஆடி ஆடி
கடவுளிடம் பேசி சிரித்து
கருவறை உறக்கம்
கொள்கிறது குழந்தை.



முகச்சுருக்கங்களோடு
செல்லரித்த
புகைப்படத்தில்
எத்தனை அழகாய்
இருக்கிறாள்
என் தாய்.....


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..