Thursday, 4 December 2014

அன்னையே போற்றி !!


ஆயுள்பிரிய நேசமாய் அணைத்து
கனிவு தரும் தாய்மை பேரன்பே போற்றி

வலிகள் விலக்கி வழிகள் தந்து
உடன்வரும் உறவு உணர்த்தும் அருதிரு உருவே போற்றி

அனைவரையும் நல்வழிப்படுத்தி கருனையாய் காக்கும்
பாச அன்னையே...பவித்ர ஜோதியே

உன் பதம் பற்றி கதியென நாடுவோரையும்....
இன்று அவனிபிறந்த உன் குழந்தைகளையும்
வெற்றி நிம்மதி பிரியமாய் உடன் சூழ்ந்து
முன்னேற்ற வாழ்வளிப்பாய் தாயே....

ஓம் ஆனந்தமயி சைத்தன்யமயி சத்யமயி பரமே...!!!!!


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..