Thursday, 4 December 2014

போன்சாய் உலகு


ஆணிவேர் சுருக்கி
கிளைத்து பரவல் மறந்து

சிறு தொட்டிக்குள்
குறுகும் குறைமாத
போன்சாய் மரமாகிறது

ஓடி விளையாடும்

இன்ப வெளி தொலைத்து

விரலெடுத்து கணிணிக்குள்
நுழையும்.......

அழகு மழலைகளின்
குறும்பு சால் உலகு....

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..