விடையில்லா நேசங்கள்
தொட்டணைத்து
தொடர்ந்து வந்து
முத்தமிட்டு முகிழ்த்தி
நெகிழ உருக்கியென
கற்பனையாடி
பிடித்திருக்கா .........
பலமுறை கேட்டு
உன்னை எனக்குள்
விதைத்த பின்
பிரிய எப்படியடா
மனசு வருது??
வினா துடிக்கிறது
தழை அறுத்து
உன் சரணடைந்த
விடையில்லா நேசங்கள்
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..