Wednesday, 17 December 2014

நட்பின் சுவாசம் -3

சொல்ல முடியா
வார்த்தைகளால்
தளும்பி தளும்பி
வழிகிறது மனம்..........
தோழமையின் வருகையால்
மகரந்த வாசம் அள்ளி வீசுகிறது
என் தோட்டம்....


பயப்படாம என் கையை
கெட்டியா பிடிச்சுட்டு வாடி....
அதோ தூரமா வருதுல்ல
அந்த கப்பல் ல
லிப்ட் கேட்டு ஏறிப் போய்
நாம உலகத்தை ஒரு ரவுண்டு
சுத்திட்டு வரலாம்...சரியா வாடி...




உனைப் பார்க்கும் போதெல்லாம்
உரிமையாய் ஓடி வந்து
தோள் கட்டிக்கொண்டு
சந்தோச துக்கங்களை
நம்பிக்கையாய் பரிமாறுகிறது
என் தோழமை...


அருகருகே அமர்ந்து
ஐஸ்கிரீம் சிரிப்பு சிரித்து
உரிமையாய் உறவாடிய
தொலைந்து போன தோழனின்
தொலையாத நட்பு....பழைய
புகைப்படம் பார்க்கும் போதெல்லாம்
புன்னகை தரும்.....
மழலைக்குள் நமை புதைத்து..


எந்த நிறத்தில் இருந்தாலும்
எந்த மொழி பேசினாலும்.......
தெவிட்டாமல் ரசிக்கும்
அழகு-- குழந்தை.....


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..