கனவுகளாய் நிரப்பி
கண்களுக்குள் குளம் கட்டி
ஊதாவாய் வழிகிறது காதல்....
தோகை விரித்து ஆடத் தயாராகிறது....
என் மயிலிறகு உணர்வுகள்....
காதலே நீ
கருமேகம் திரட்டி வரும் போதெல்லாம்..
சிறைப்படுத்தும்
அன்பிலும்
சிறகொடிக்கும்
காதலிலும்
கட்டு கம்பிகள்
உடைத்து
விடுதலை
பெறவே துடிக்கிறது
நட்புகளும்...... உறவுகளும்.....
பறவைகளாய்...
தலைதூக்கும்
போதெல்லாம்......
இணைந்த இதயங்களுக்குள்.....
இடித்துக்கொண்டு....
மூக்கு உரசாமல்....
தள்ளி தள்ளி.....
இடைவெளிவிட்டு
அமர்ந்து தன் கோபம்
காட்டுகிறது ..காதல்
ஊதாக் கிளிகளாய்.......
தன் வண்ணம் மறந்து
உன் வண்ணத்திலேயே
பூக்கிறது என் பாசத்தோட்டம்..
காத்திருக்கும் வேளைகளில்....
எந்தன் காதல் மீட்டுகிறது
உன் ஞாபக விரல்கள்.......
மெல்லிசையாய்...
என் குருதிப்பூக்களை
காத்திருந்து.........
நாம் உணவு பரிமாறிக்கொள்ளும்
நேரங்களில்.........
விழிகளுக்குள் ஒருவரை ஒருவர் முழுமையாய் நிறைத்து
ஓசையில்லாமல் பசியாருகிறது
தவிப்பான நம் காதல்....
உனை எடுக்கும் போதெல்லாம்
பார்வையிழந்து
போகிறேன் நான்....
உன் அலையாடும்
நினைவுகடலில்
நீ சென்ற திசை
தெரியாமல்......
கண்ணீர் ஆடை கட்டி
தத்தளிக்கிறது
என் பாய்மரக் காதல் படகு
நினைவுகடலில்
நீ சென்ற திசை
தெரியாமல்......
கண்ணீர் ஆடை கட்டி
தத்தளிக்கிறது
என் பாய்மரக் காதல் படகு
உறங்கும் அழகை....
இரவு முழுவதும்
இமைமூடாமல்
தலாட்டுகிறது
என் காதல்...........!!!
கழுகுப் பார்வை கொண்டு தேடுகிறேன்.......
என்னிலிருந்து பிரிந்ததாய்
எண்ணி..ஒளிந்து..ஒளிந்து
கண்ணாம்மூச்சி ஆடும்
உன்னை...........
என்னிலிருந்து பிரிந்ததாய்
எண்ணி..ஒளிந்து..ஒளிந்து
கண்ணாம்மூச்சி ஆடும்
உன்னை...........
உரிமையாய்
என் மீது படுத்து
என் உறக்கங்களை
பாறையாய் அழுத்துகிறது
அவளின் நினைவுகள்................
என் மீது படுத்து
என் உறக்கங்களை
பாறையாய் அழுத்துகிறது
அவளின் நினைவுகள்................
கோப அலகுகளால்
தலை கொத்தும் போதும்....வலிகளாய்
சுகம் தருகிறாயடி
காதலே...........!!!!!!
தலை கொத்தும் போதும்....வலிகளாய்
சுகம் தருகிறாயடி
காதலே...........!!!!!!
நினைத்து
உடல்களால் பிரிந்த
நம்மை..
நிமிடந்தோறும்
நினைவுகளாய்
தழுவிக்கொள்கிறது
உயிர்
பசுமையாய் எனைப் பூக்கவைத்து
பூக்கவைத்து.......
கொல்கிறாயடி காதலே......
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..