Friday 2 January 2015

இதழ் சங்கீதம்

அந்திமா கால ஈரமாய்
பனியாடை சிலுப்பிய
அழகு சிலிர்க்க

நுனி இதழ் கொண்டு
நுரை முத்தமிட்ட
வெப்பத்தை விட

வேண்டுதல் தருகிறதடா

கழுத்துகையணைத்து
கட்டைவிரல் கன்னம் வருட
உயிர் மீட்டி

நீ நெற்றி பதிக்கும்
இதழ் சங்கீதம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..