கோழி இறக்கைகளும்....
கிழிந்த தலையணை
பஞ்சு துகள்களும்
காற்றில்
பறந்து பறந்து
எனை தூக்கிச் செல்கிறது
காதலிடம்....
இதழாடை கொண்டு
மறைகிறாய் பெண்ணே
கருவாய் உன்னில்
பருவம் சமைத்திருக்கும்
மகரந்த செழுமையை
புரிந்த பின்
இடித்துக் கொண்டு
குடும்பம் நடத்த
தூக்கணாங்குருவி
கூடு போதும்..
எனக்கு.......
கூட்டம் கூட்டமாய் தான் வருகின்றன...
சொல்லில் அடங்காத
சோகமும்.............
கண்ணீரில் அடங்காத
சந்தோசமும்....
படிகளில் ஏறும் போது
சற்று ஓரமாகவே வா........
உன் பாதங்கள் பட்டு பூக்க
காத்திருக்கிறது
என் பூந்தொட்டிகள்.
சற்று ஓரமாகவே வா........
உன் பாதங்கள் பட்டு பூக்க
காத்திருக்கிறது
என் பூந்தொட்டிகள்.
நீ வீசிச் செல்லும்
சாரல் பார்வைகளில்
சட்டென்று துளிர்க்கிறது
என்னுள்....உன்னால் மட்டுமே
எழுப்பப்படும்
காதல் உணர்வுகளாய்..சில
ஊதாக் காளான்கள்....
நினைக்கும் போதெல்லாம்
கனவுகளுக்குள்
களவு போகிறேன் நான்
யாரும் தீண்டாமலே
கிடக்கிறது என் காதல்
:
:
தேவதை மறுத்த
பூக்களை...
தெய்வம் கூட
தீண்டுவதில்லையாம்.
போன காதலே....
நித்தம் நித்தம்
உன் நினைவுகளின்
கோப்பையில்
திரவமாய்....
விடிகிறது
என் இரவுகள்..
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..