Thursday, 18 December 2014

உல்லாசமாய் நனைகிறது

அடித்து புரண்டு 
அழுது சிரித்து..
பயம் இல்லாது 
பார்ப்பவரை எல்லாம் 
கலாட்டா செய்து 
கவலைகள் இல்லா 
கவலை கொண்டு 
மெதுமெதுவாய் 
மொட்டவிழ்த்த பருவத்தின் 
பள்ளி,,கல்லூரிக் கதைகள் பகிர்ந்துகொள்ளும்...... 
போதெல்லாம் நமை மறந்து 
கொண்டாட்டமாய் கும்மாளமிட்டு 
குற்றால சாரலில் 
நேரங்களை விழுங்கி 
உல்லாசமாய் நனைகிறது உள்ளம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..